Thursday 7 August 2014

பச்சை பயிறு இனிப்பு சுண்டல்!!!


பச்சை பயிறு ஊறவைக்க : குறைந்தது 5 - 8 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 20 - 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  பச்சைபயிறு - 2 கப் ஊறவைத்தது
  .  வெல்லம் - 1/4 கப்
  .  Fresh தேங்காய் துறுவல் - 1/4 கப்
  .  உப்பு - 1/2 தே.கரண்டி

தாளித்து சேர்க்க :
  .  எண்ணெய் - 1 தே.கரண்டி
  .  கடுகு + உளுத்தம்பருப்பு - தாளிக்க
  .  கருவேப்பிலை - 5 இலை

செய்முறை :
  .  பச்சை பயிறினை தண்ணீரில் சுமார் 5 - 8 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.



  .  பிரஸர் குக்கரில் ஊறவைத்த பருப்பினை போட்டு , அதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 1 விசில் வரும் வரை வேகவைத்து கொள்ளவும்.

(கவனிக்க : அதிகம் வேகவைத்தால் குழைந்துவிடும் அல்லது தோல் தனியாக வந்துவிடும். விரும்பினால் குக்கருக்கு பதிலாக பாத்திரத்தில் வேகவைத்து கொள்ளவும். )



  .  கடாயில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி வெல்லத்தினை போட்டு கொதிக்கவிடவும். (கவனிக்க : வெல்லத்தில் மண் இருந்தால் அதனை Stainer வைத்து வடித்து கொள்ளவும்.)



  .  வெல்லம் கரைந்த பிறகு அத்துடன் வேகவைத்த பச்சைபயிறினை சேர்த்து 1 முறை கிளறிவிடவும்.



  .  தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து கொள்ளவும்.



  .  தாளித்த பொருட்கள் + தேங்காய் துறுவலினை பயறுடன் சேர்த்து கிளறி 1 நிமிடம் வேகவிடவும்.



  .  சுவையான சத்தான இனிப்பு சுண்டல் ரெடி.



கவனிக்க :
இந்த சுண்டலினை நான் தாளித்து சேர்த்து இருக்கின்றேன். விரும்பினால் தாளித்து கொள்ளவும்.

அதே மாதிரி ஏலக்காய் விரும்பினால் சேர்க்கவும்.

Fresh  தேங்காய் பயன்படுத்தினால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

இதே மாதிரி அனைத்து பருப்பு / பயறு வகைகளிலும் செய்யலாம்.