Wednesday 7 October 2015

VenPongal(Temple Style)!!!

கோவில் பொங்கலின் ஸ்பெஷலே இதில் சீரகம் + மிளகினை பொடித்து சேர்ப்பது தான். … சமைக்க தேவைப்படும் நேரம் : 25 நிமிடங்கள் தேவையான பொருட்கள் : · பச்சரிசி – 1 கப் · பாசிப்பருப்பு – 1/2 கப் · இஞ்சி – சிறிய துண்டு · உப்பு – தேவையான அளவு தாளித்து சேர்க்க : · பொடித்த சீரகம் – 1 தே.கரண்டி · பொடித்த மிளகு தூள் – 1 தே.கரண்டி · முந்திரி – சிறிதளவு · கருவேப்பில்லை – 5 இலை செய்முறை : · அரிசி + பாசிப்பருப்பினை தண்ணீரில் கழுவி அத்துடன் தேவையான அளவு தண்ணீர் ( சுமார் 4 – 5 கப் தண்ணீர் ) + நறுக்கிய இஞ்சி + தேவையான அளவு உப்பு சேர்த்து 5 – 6 விசில் வரும் வரை வேகவிடவும். · சீரகம் + மிளகினை ஒன்றும்பாதியுமாக பொடித்து கொள்ளவும். · தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து கொள்ளவும். · தாளித்த பொருட்களை பொங்கலுடன் சேர்த்து கலந்து கொள்ளவும். · சுவையான சத்தான பொங்கல் ரெடி. இதனை சாம்பார், சட்னியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். 

Ayyangar Ven Pongal Video:  http://surprise.ly/v/?GuvEXcSCH_0:0:0:0:100