Tuesday 6 October 2015

தானாகவே பிளே ஆகும் Facebook Video எப்படி தடை செய்வது!!!


+
----
-





முகநூல் என தமிழில் அழைக்கபடும் பேஸ்புக் சமூக வலைதளத்தில் தினம் தினம் பல புதிய மாற்றங்களை செய்துக்கொண்டு இருக்கிறார்கள். சமீபத்தில் பேஸ்புக் தளத்தில் வீடியோகள் அனைத்தும் தானாகவே பிளே ஆகும் வசதியை புகுத்தி இருக்கிறார்கள். வரம்பற்ற இணைய சேவையை (Unlimited internet) பயன்படுத்துபவர்களுக்கு இதனால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் 255 ரூபாய்க்கு 1GB 3G ரீசார்ஜ் செய்பவர்களுக்கு இது பெரிய பிரச்சனைதான். சில மணி நேரங்களில் 1GB காணாமல் போய் விடும். இந்த பிரச்சனையை தவிற்க்க என்ன செய்வது?  கணினியில் மற்றும் ஆண்ட்ராய்ட் ஆப்ல, ஐஒஸ் ஆப்ல எப்படி தடை செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

முதலில் கணினியில் எப்படி தடை செய்வது என்பதை பார்க்கலாம்.

உங்கள் பேஸ்புக் கணக்கில் லாகின் செய்த பின் மெனு சென்று Settings >> Video செல்லுங்கள் அல்லது இங்கே கிளிக் செய்தால் உங்கள் செட்டிங்ஸ் பக்கத்தில் வீடியோ ஆப்சன் ஸ்கிரீன் வரும். அதில் வலது பக்கம் இரண்டாவதாக இருக்கும் Auto-Play Videos என்பதின் எதிரே கீழே படத்தில் இருப்பது போல Off தேந்தெடுங்கள். தானாகவே Save ஆகி விடும். இனி வீடியோ தானாக பிளே ஆகாது.



பேஸ்புக் ஆண்ட்ராய்ட் ஆப்ல எப்படி தடை செய்வது?

முதலில் மேல் வலது பக்கம் உள்ள Profile settings சென்று அதில் App Settings டச் செய்தால் அடுத்த பக்கத்தில் Video Auto Play என்பதை டச் செய்து அதன் பிறகு வரும் பாப்பப் பாக்ஸ்ல Off என தேந்தெடுங்கள். அவ்வளவுதான்.



ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் செட்டிங்ஸ் வித்தியாசம் அதிகம் இல்லை.