Friday 30 October 2015

தஞ்சாவூர் சமையல்/ இட்லி சாம்பார் செய்வது எப்படி!!!

             நாம் சாதாரணமாக வைக்கும் சாம்பாருக்கும் இட்லி சாம்பாருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. சிலர் சொல்வார்கள் ஹோட்டல் சாம்பார் மாதிரி வரலையே கல்யாண வீட்டு சாம்பார் மாதிரி வரலையேன்னு இதை செய்துப் பாருங்கள் அந்த டேஸ்ட் கிடைக்கும்.



தேவையான பொருட்கள்: 

 துவரம்பருப்பு - 100 கிராம்
 பாசிப்பருப்பு - 100 கிராம் 
தக்காளி - 2 பச்சை
மிளகாய் - 6
சின்ன வெங்காயம் - 100 கிராம் உருளைக்கிழங்கு - 1
 கத்தரிக்காய் - 1
 கேரட் - 1 
கொத்தமல்லி தழை - சிறிது
 மஞ்சள்தூள் - சிறிதளவு
 பெருங்காயம் - சிறிதளவு
கடுகு உளுத்தம்பருப்பு- சிறிதளவு
 கறிவேப்பிலை - சிறிதளவு
சர்க்கரை - 1 ஸ்பூன்

வறுத்து அரைக்க

மல்லி - 1 ஸ்பூன்
 கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
 காய்ந்த மிளகாய் - 3
 சீரகம் - 1 ஸ்பூன்


 செய்முறை:

                பருப்பு கழுவிட்டு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். சின்ன வெங்காயம் (முழு) பச்சைமிளகாய், தக்காளி, பெருங்காயம், மஞ்சள்தூள், உப்பு ஆகியவைகளை பருப்போடு சேர்த்து நன்கு வேக வைக்கவும்.

               பிறகு பொடியாக நறுக்கிய காய்கறிகளை பருப்போடு சேர்த்து மேலும் வேக வைக்கவும். காய்ந்த மிளகாய், மல்லி, சீரகம், கடலைப்பருப்பு இவைகளை வறுத்து அரைத்து பருப்பு கலவையோடு சேர்க்கவும் கூடவே கொஞ்சம் சர்க்கரையும் சேர்க்கவும். இப்போது எல்லாமே நன்றாக வெந்து இருக்கும். அதை இறக்கி வைத்துவிட்டு வாணலியை அடுப்பில் வைத்து நெய்யோ அல்லது எண்ணையோ ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு, கறிவேப்பில்லை சேர்த்து தாளித்துக்கொட்டி மூடவும் கூடவே கொத்தமல்லி இலையை தூவவும்.

            இப்போது சுவையான இட்லி சாம்பார் ரெடி

          (இட்லி மல்லியப்பு மாதிரி இல்ல,பஞ்சு போல இல்லன்னு நிறைய பேர் சொல்வாங்க அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் இட்லி அரிசி வாங்கி ஊற வைத்து கொரகொரப்பா அதாவது ரவை மாதிரி அரைக்கனும். உளுந்து அரைக்கும் போது கொஞ்சம் கொஞ்சமா தண்ணீர் விட்டு அரைக்கனும். உளுந்து மாவு பஞ்சு மாதிரி இருக்கும் .)