Wednesday 16 September 2015

மெலிந்த உடல் பருக்க - தந்த ரோகம் - பல்பொடி!!!


மெலிந்த உடல் பருக்க -
இளைத்தவனுக்கு எள்ளு - கொழுத்தவனுக்கு கொள்ளு என்பது சித்தர் மொழி யாகும்.உடலில் சதைப் பற்று இல்லாமல் மெலிந்தவர்க்கு ஒரு எளிமையான முறையின் மூலம் உடலை பருக்கச்செய்ய வழிமுறை உள்ளது.
மெலிந்த உடல் பருக்க "கருப்பு எள்"தினமும் -10 -கிராம் வீதம் வறுத்துச் சாப்பிட்டு உடனே குளிர்ந்த நீர் ஒரு தம்ளர் அருந்தவும்.இதே போல் -40-நாள் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும்.மெலிந்த உடல் பருக்கும்.
இதனை உட்கொள்ளும் போது உடலின் வெப்பம் அதிகரித்தால் பால் அருந்த வேண்டும்.இதனைப் பெண்கள் பயன் படுத்தக் கூடாது .
மேலும் காலையில் வெறும் வயிற்றில் வெண்ணை ஒரு எலுமிச்சை அளவு உண்ணவும்.இதுவும் 40 -நாள் தொடர்ந்து உண்ணவும்.
தேறாத பிள்ளையையும் தேற்றி வைக்குமாம்
தேற்றான் கொட்டை லேகியம்.
இதுவும் ஒரு மருத்துவ பழமொழிதான்.அதாவது உடல் இளைத்து மெலிந்து இருக்கும் இளம் வயது பிள்ளைகளை உடல் பருக்க இந்த "தேற்றான் கொட்டை லேகியம்" உதவும்.சாப்பிடும் உணவுகளின் சத்துக்களை முழுமையாய் உடலில் சேர்க்க இந்த லேகியம் உதவும்.
சித்தா மெடிக்கல் கடைகளில் இந்த லேகியம் கிடைக்கும்.வாங்கி தினமும் காலை, இரவு உணவிற்குப் பின் ஒரு டீஸ்பூன் உண்டு ஒரு தம்ளர் பால் சாப்பிடவும்.
இதில் கூறப்பட்டுள்ள மூன்று முறைகளையும் கடை பிடித்து வாருங்கள். மூன்று மாதங்களில் உடல் பருமனாக காணலாம்.
============================
தந்த ரோகம் - பல்பொடி -
அனைத்து விதமான பல் சம்பந்தமான நோய்களை வரவிடாமல் தடுக்கும் ஒரு சித்த மருத்துவ அனுபவ முறை பல்பொடி செய்முறை .
1 - சுக்கு
2 - காசுக்கட்டி
3 - கடுக்காய்
4 - இந்துப்பு
இந்த நான்கு சரக்கும் ஒரே எடை அளவு எடுத்து இடித்து போடி செய்யவும். இதனைக் கொண்டு தினமும் பல் துலக்கி வர பல் ஈறுகளில் இரத்தம் கசிதல்,பல் ஆட்டம்,பல் சொத்தை,இவை அனைத்தும் நீங்கும்.
இதனைக்கொண்டு காலை,மாலை, தினமும் இருமுறை பல் துலக்கி வர பல் நோய்களே வராது.
நன்றி !
Dr.அரவின் தீபன்...
Baskar Jayaraman's photo.