Thursday 10 September 2015

பெங்களுரு பிஸிபேளாபாத் !!!


பெங்களுரு பிஸிபேளாபாத்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி (அ) பாசுமதி அரிசி - 300 கிராம்,
துவரம் பருப்பு - 150,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
நெய் - 400 கிராம்,
நல்லெண்ணெய் - 100 கிராம்,
தனியா - 50 கிராம்,
பெருங்காயம் - 10 கிராம்,
ஏலம் - 2 கிராம்,
கசகசா - 10 கிராம்,
லவங்கம் - 2 கிராம்,
பட்டை - 2 கிராம்,
புளி - 100 கிராம்,
சிறிய வெங்காயம், பச்சை பட்டாணி, கேரட் - தேவையான அளவு, கடுகு - தாளிக்க சிறிதளவு,
தனியாத்தூள்
, மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன்,
வெந்த முருங்கை விழுது - ஒரு கப்.

செய்முறை:

அரிசி, பருப்பை களைந்து 3 பங்கு தண்ணீர் வைத்து குக்கரில் நன்றாக வேக விடவும்.

புளியைக் கரைத்து அதில் மஞ்சள்தூள், தனியாதூள், மிளகாய்த் தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டு நன்கு கொதிக்க விடவும்.

நல்லெண்ணெயில் கடுகு தாளித்து, முதலில் வெங்காயத்தை வதக்கவும். பிறகு கேரட்,கடைசியாக பச்சைப்பட்டாணியைப் போட்டு வதக்கவும். இத்துடன் முருங்கை விழுதையும் வதக்கி, கொதிக்கும் புளிக்கரைசலில் போட்டு இன்னும் கொதிக்க விடவும்.இந்தக் கலவையை குக்கரில் வெந்து ரெடியாகவுள்ள அரிசி, பருப்புடன் சேர்க்கவும்.

வெறும் வாணலியில் கசகசா, தனியா, கிராம்பு, பேடிகை மிளகாய் (மைசூர் மிளகாய்), பட்டை, ஏலம், கறிவேப்பிலை ஆகியவற்றை வறுத்து, ஆறவைத்து, மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். இதை ரெடியாகவுள்ள சாதக் கலவையில் தூவிக் கிளறினால் பிஸிபேளாபாத் ரெடி.

வாணலியில் நெய்விட்டு முந்திரி,சிறிதளவு கொப்பரைத் துருவல், கறிவேப்பிலை மூன்றையும் சிவக்க வறுத்து பிஸிபேளாபாத் மேலே தூவவும்.