Sunday 29 October 2017

Pagoda Kulambu!!!

பக்கோடா #குழம்பு
.
#தேவையான_பொருட்கள்:
கடலைப்பருப்பு - 200 கிராம்
தக்காளி - 150 கிராம்
பச்சை மிளகாய் - 10
தேங்காய் - 1 மூடி
எலுமிச்சம்பழம் - 1
மல்லித்தூள் - 3 ஸ்பூன்
மசாலா தூள் - அரை ஸ்பூன்
பொட்டுக்கடலை - 50 கிராம்
பல்லாரி - 200 கிராம்
மஞ்சள் தூள் - சிறிதளவு
பட்டை, கிராம்பு - சிறிதளவு
பூண்டு - 10 பல்
.
#செய்முறை:
கடலைப்பருப்பை 2 மணிநேரம் ஊற வைக்கவும். தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். 5 பல் பூண்டு, சிறிதளவு இஞ்சியை விழுதாக அரைக்கவும். தேங்காயை மிக்ஸியில் நைசாக அரைக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பை தாளித்து, இஞ்சி பூண்டு விழுதை நன்றாக வதக்கவும். இத்துடன் நறுக்கிய தக்காளி, வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாயை போட்டு வதக்கவும். 
.
பின்னர் மல்லித்தூள், மஞ்சள்தூள், மசாலாத்தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். 15 நிமிடம் கழித்து அரைத்த தேங்காயையும் சேர்த்து கொதிக்க விடவும். கிரேவி பதத்துக்கு வந்ததும் எலுமிச்சம்பழத்தை பிழிந்து இறக்கி வைக்கவும். இப்போது ஊற வைத்த கடலைப்பருப்புடன், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும். 
.
இத்துடன் பொடியாக நறுக்கிய பல்லாரி, கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்த்து பிசைந்து கொள்ளவும். வாணலியில் 200 கிராம் எண்ணெய் ஊற்றி, மாவை பக்கோடா அளவு பிடித்து வேக விடவும். வெந்ததும் குழம்பில் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும். அவ்வளவுதான்.. பக்கோடா குழம்பு ரெடி.

No comments: