Saturday 14 October 2017

ரவா கேசரி!!!

நிறைய பேரு ரவா கேசரி செய்யறப்போ, ரவையை லைட்டா வறுத்துட்டு, குளிர்ந்த தண்ணீர் ஊற்றி ரவை வெந்ததும், சர்க்கரையைப்போட்டு, நெய்சிறிது சிறிதாவிட்டு, பக்குவம் வந்ததும் வறுத்த முந்திரி, திராட்சை ஏலப்பொடி தூவி வெந்ததும் இறக்கிப்பறிமாறுவார்கள்.. இதுல பெரிசா டேஸ்ட் எதிர்பார்க்க முடியாது. இந்த விதத்துல செய்யாம சற்றே மாத்தி செஞ்சுப்பாருங்களேன்..

1:1:1.5 Ratio.. அதாவது ரவை மற்றும் நெய் சம அளவு, சர்க்கரை அரைமடங்கு கூடுதல். ஒரு கடாயில் ரவை முந்திரி, திராட்சை, நெய் எல்லாவற்றையும் போட்டு வறுக்கவேண்டும். இப்படி வறுக்கும் போதே அருகில் இன்னொரு பாத்திரத்தில் தண்ணீர் தேவையான அளவு (1:2 ரவை ஒரு பங்கு தண்ணீர் 2மடங்கு) கொதிக்கவிட வேண்டும்.

இந்நிலையில் முந்திரி பொன்னிறமாகும் வரை வறுப்பதுதான் பக்குவம். அப்படி வரும்போது கொதிக்கும் நீரை அந்த கலவையில் ஊற்ற வேண்டும். இப்போது நெய் ரவை எல்லாம் கொதிக்கும் தண்ணீரில் சேர்ந்து ரவையானது உடனே வெந்துவிடும். அதன்பின்னர் சர்க்கரையை கலந்து கேசரி கலர், ஏலப்பொடி சேர்த்து சிறிது நேரம் கெட்டியாகும் வரை கிளறி இறக்கி டேஸ்ட் செஞ்சு பாருங்க..

வாயில் போட்டவுடன் கேசரி உள்ளே போவதே தெரியாது. சுவை அபாரமாக இருக்கும்.. எல்லாத்தையும் ஒன்றாக போட்டு வறுத்து கொதி தண்ணீர் ஊற்றுவதும் சமையல் வல்லுனர்களின் ‍சூட்சுமம்தான்..

No comments: