Tuesday 10 October 2017

Homeopathy Tips!!!

ஹோமியோபதி நன்முத்துக்கள் -2 1. இதயம் பாதிக்கப்பட்டதால் ஏற்படும் நீர்ச்சுரப்பிற்கு டிஜிடாலிஜை (DIGIT) விட அபோசினமே(APOC) சிறந்தது –DR..C.HERING. 2. கரப்பான் அல்லது தோல்படை (ECZEMA) நோயில் ரஸ்டாக்சை(RHUS.T) தவிர வேறு மருந்துகள் அநேகமாகத் தேவைப்படுவதில்லை-DR.HUGHES. 3. வீட்டைவிட்டு வெளியில் இருக்கும் போதும், பிரயாணத்தின் போதும் ஏற்படும் மலச்சிக்கலுக்கு பிளாட்டினா (PLAT) ஒரு நல்ல மருந்து-DR.ROBERTS. 4. டைப்பாய்டு சுரத்தால் பாதிக்கப்பட்டு , நலமடைவோம் என்ற நம்பிக்கை இழந்து , உடல் நலிந்தவர்களுக்கு சோரினம் (PSOR) உயர்ந்த வீரியம் நல்ல பலனைக் கொடுக்கும்-DR.E.B.NASH. 5. நாட்பட்ட ஆஸ்த்துமா நோயில் ஹீப்பார்- சல்பூரிக்கம் (HEP) மற்றும் நேட்ரம் சல்பூரிக்கம் (NAT-S) மருந்துகள் ஒத்திருக்கும் . ஹீப்பார்-சல்பூரிக்கம் மருந்தில் வறண்ட குளிர்காலத்தில் ஆஸ்த்துமா அதிகரித்து ஈரப்பதமான குளிர்காலத்தில் குறையும். ஆனால் நேட்ரம் சல்பூரிக்கம் மருந்து டல்கமாரா (DULC) போல் இதற்கு எதிரிடையானது- DR.E.B.NASH. 6. சுரத்தில் பாப்டீசியா(BAPT) மற்றும் பைரோஜினம் (PYROG) மருந்துக்குறிகள் ஒத்திருந்தாலும் , சுரம் 106 டிகிரிக்கு மேல் கூடும் போது பைரோஜினமே கொடுக்கப்பட வேண்டும்-DR.J.T.KENT. 7. மாதவிடாயிற்கு முன்பும், பின்பும் தொந்தரவு இருக்கும். ஆனால் மாதவிடாய்ப் போக்கின் போது தொந்தரவு இருப்பதில்லை. இந்நிலைக்கு லாக்கசிஸ்(LACH) ஒரு நல்ல மருந்து -DR.J.T.KENT. 8. குழந்தைகளுக்கு விரையில் ஏற்படும் நீர் ஏற்றங்களுக்கும் , தொப்புளிலிருந்து இரத்தம் வடிதலுக்கும் அப்ரோட்டனம் (ABROT) ஒரு சிறந்த மருந்து. DR.J.T.KENT. 9. கண்களிலிருந்து காட்டமில்லாத நீரும் , மூக்கிலிருந்து காட்டமான நீரும் வடியும் போது அல்லியம் சீபா (ALL-C). மூக்கிலிருந்து சாதாரண நீரும் , கண்களிலிருந்து காட்டமான நீரும் வெளிப்படும் போது யூப்பரேசியா(EUPR)-DR. PIERCE. 10. பற்கள், ஈறுகளின் நோய்களுக்கும் , பெண்களுக்கு உண்டாகும் துர்வாடையுள்ள , பட்ட இடங்களில் புன்னை உண்டாக்கும் தீட்டுகளுக்கும் , வெள்ளைப் போக்கிற்கும் இம்மருந்தை மறக்கலாகாது. அம்மருந்து கிரியோசோட்டம் (KRESOT)-DR.E.B.NASH. 11. வயது வந்தவர்கள் குழந்தைகள் போல் பேசுவதற்கும் , நடிப்பதற்கும் மற்றும் உடல் வளர்ச்சிக்கேற்ப புத்தி வளர்ச்சி இல்லாதவர்களுக்கும் பாரிடா கார்பானிகம்(BAR.C) நன்றாக வேலை செய்யும்-DR.J.T.KENT. 12. வளர்பிறையில் அதிகரித்து , தேய்பிறையில் குறைந்து விடும் சிரங்குகளுக்கு கிளேமாட்டிஸ் (CLEM) ஒரு நல்ல மருந்து. DR.C.M.BOGER. 13. வலிகள் திடீரென தோன்றி திடீரென மறையும்-BELL. சிறுகச் சிறுக அதிகமாகி சிறுகச் சிறுக குறையும்-STANN. சிறுகச் சிறுக அதிகமாகி திடீரென குறையும்-SULPH-AC - DR.E.B.NASH 14. இடது கால் சூடாகவும், வலது கால் குளிர்ச்சியாகவும் இருப்பதற்கு- லைகோபோடியம்(LYC). ஒரு கை குளிர்ச்சியாகவும் அடுத்த கை சூடாகவும் இருப்பதற்கு -சைனா, டிஜிடாலிஸ் , இபிக்கா மற்றும் பல்சாட்டில்லா. (CHIN; DIGIT;IP;PULS)- DR.J.T.KENT. 15. மூத்திரப்பையின் வாயில் ஏற்படும் அழற்சிகளுக்கும் , கோல வீக்கங்களுக்கும் ஒரு மருந்து வேண்டுமென்றால் அது காஸ்டிகம்(CAUST)- DR.T.K.MOORE. 16. தலையின் இடது பக்கம் வளர்ச்சி குறைந்திருந்தாலும் , வலது கண்ணைப் பார்க்கிலும் இடது கண் சிறுத்திருந்தாலும் ப்ளுவாரிக் ஆசிட்(FLOUR-AC) கொடுக்கலாம்- DR.J.T.KENT. 17. புகைப் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த கலாடியம் (CALAD)- DR.J.T.KENT. 18. இளநரை , மயிர் உதிர்வதற்கு ஆசிட்-பாஸ்-1X (PH-AC). BY PRACTICE. 19. குறட்டை விடும் பழக்கமுள்ளவர்களுக்கு ஒப்பியம் (OP). BY PRACTICE. 20. அதிக உழைப்பினால் வலிவு இழந்தவர்களுக்கும் , உற்சாகம் இழந்தவர்களுக்கும் , மனம் தளர்ந்து வேலையில் கவனமில்லாதவர்களுகும் கல்கேரியா-பாஸ்(CALC.P) கொடுப்பதினால் நல்ல பலனடைவார்கள்.-

No comments: