Sunday 15 October 2017

அரிசி பாயசம்!!!


தேவையான பொருட்கள்:

சீரக சம்பா அரிசி - 200 கிராம்
பால் - 2 லிட்டர்
அரைத்த முந்திரிப் பருப்பு விழுது - 100 கிராம்
குங்குமப்பூ - 5 அல்லது 6 இழை
வெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்
கிராம்பு - 2
தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 150 கிராம்

செய்முறை:

அடி கனமான பாத்திரத்தில் பாலை, குங்குமப்பூ சேர்த்துக் காய்ச்சவும். ஒரு லிட்டர் பாலைத் தனியே எடுத்து வைக்கவும். இன்னொரு அடுப்பில் 2 டேபிள்ஸ்பூன் வெண்ணெயில் அரிசியை வறுக்கவும். அது பிஸ்கட் கலரில் மாறிப் பொரிய ஆரம்பிக்கும் போது எடுத்து, கொதித்துக் கொண்டிருக்கிற பாலில் போட்டுக் கிண்டவும். அரிசி உடைந்து வேக ஆரம்பிக்கும். அப்போது முந்திரி விழுது சேர்க்கவும். தனியே எடுத்து வைத்துள்ள ஒரு லிட்டர் பாலை, கால் லிட்டர், கால் லிட்டராக - 5 நிமிட இடைவெளி விட்டுச் சேர்த்துக் கெட்டியாகக் கிளறவும். சர்க்கரை, கிராம்பு சேர்க்கவும். கலவை பஞ்சாமிர்தப் பதத்துக்கு வரும் வரை கிளறி, அடுப்பை அணைக்கவும். 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெயை அதில் சேர்க்கவும். மீதி 1 டேபிள்ஸ்பூன் வெண்ணெயில் தேங்காய் துருவலை பொன்னிறத்துக்கு வறுத்துச் சேர்க்கவும். லேசான மஞ்சளும் பழுப்பும் கலந்த கலரில் இருக்கும். இந்தப் பாயசத்தை குளிர வைத்துப் பரிமாறவும்.

No comments: