Saturday 14 October 2017

Kitchen Tips!!!

🏠ஹோம்🏡 டிப்ஸ் 65
🏠🏢🏣🏤🏫🏪🏩🏨🏧🏬🏰🏭

டிப்ஸ்.. டிப்ஸ்..!பஜ்ஜி, தோசைக்கு மாவு கரைக்கும்போது கட்டி தட்டுகிறதா? கவலை வேண்டாம். மிக்ஸி ஜாரில், வெண்ணெய் எடுக்கும் 'விப்பர்' பொருத்தி, அதில் மாவுக் கலவையை ஊற்றி இரண்டு சுற்று சுற்றினால், மாவு கட்டியே இல்லாமல் நன்கு கரைந்து விடும். பஜ்ஜியும் மிருதுவாக உப்பி வரும்.------------------------------------------------------------------வெந்தயக் கீரை, புதினா, துருவிய முள்ளங்கி சேர்த்துச் செய்யும் சப்பாத்திகளில் பச்சை வாசனை வரும். இவற்றை முதலில் சில நிமிடங்கள் ஆவியில் வேக வைத்து எடுத்து பிறகு மாவில் சேர்க்கலாம்.---------------------------------------------------மிளகாய் பஜ்ஜி செய்யும்போது, மிளகாயில் மாவு ஒட்டிக் கொள்ளும். ஒரு முள் கரண்டியால் மிளகாயின் தோலை லேசாக சுரண்டுங்கள். பிறகு பஜ்ஜி செய்தால் நன்றாக வரும்.--------------------------------------------------------------------------கடிதங்களை எழுதி பசை போட்டு ஒட்டிய பிறகு, உடனடியாகப் பிரிக்க வேண்டுமா? ஒட்டிய பாகத்தைக் கொதிக்கும் தண்ணீரின் ஆவியில் சில விநாடிகள்காட்டி, பிறகு மெதுவாகப் பிரித்தால் பிரிந்து விடும்.-------------------------------------------------------------------------மசால் வடை செய்ய ஒரு சுலப வழி.. ஒரு கப் ஊற வைத்த கொண்டைக்கடலையுடன், வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து, மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். இதில் வடை தட்டினால், சுவை அபாரமாக இருக்கும்.-------------------------------------------------------------------பிசைந்த சப்பாத்தி மாவு கல்லு போல இருக்கிறதா? இப்போது அதில் நேரடியாக தண்ணீர் சேர்க்காமல், கையை தண்ணீரில் விட்டு எடுத்து, மாவை உருட்டிப் பிசையுங்கள்.. இப்படி இரண்டு, மூன்று முறை கையை ஈரப்படுத்தி விட்டுப் பிசைந்தால் மாவு மிருதுவாகி விடும்.--------------------------------------------------------------------மெழுகுவர்த்தி எரியும்போது காற்றில் அணையாமல் இருக்க, பழைய அரிக்கேன் விளக்கு கண்ணாடியின் நடுவில் மெழுகுவர்த்தியைவைத்து விடுங்கள். சுடராய் எரியும். சீக்கிரத்திலும்கரையாது.----------------------------------------------------------------------துவைத்த துணிகளை காய வைப்பதற்கு முன், துணி உலர்த்தும் கொடியை ஒரு ஈரத் துணியால் நன்கு துடைத்து விடுங்கள். இப்படிச் செய்வதால் கொடியில் உள்ள தூசி சட்டையில் படியாது.--------------------------------------------------------------------ஒரு டேபிள்ஸ்பூன் ஜாமில் இரண்டு கரண்டி பால் சேர்த்து மிக்ஸியில் அரையுங்கள். வீட்டில் கைவசம் இருக்கும் பழத்தைத் துண்டுகளாக்கி அதில் அரைத்த ஜாம் கூழை சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்து 'ஜில்' என்று பரிமாறுங்கள். ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் ஃப்ரூட் சாலட் போல் அசத்தலாக இருக்கும்.-------------------------------------------------------------------இரண்டு மூன்று தேங்காயை உடைத்துத் துருவி, அதில் நான்கு முந்திரிப் பருப்புகளை சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரையுங்கள். முந்திரிப் பருப்பை சேர்ப்பதால் தேங்காய் கெட்டியாகி விடும். இதை சிறு கிண்ணங்களில் அல்லது இட்லி தட்டில் நிரப்பி ஃபிரீஸரில் வைத்து விட்டால் பல நாட்கள் கெடாமல் இருக்கும். தேவைப்படும்போதுபயன்படுத்தலாம்.வாழைப்பழத்தை சீப்பாக வைத்திருக்கும்போது நன்கு பழுத்துவிட்டால், காம்பில்இருந்துதனித்தனியாக உதிர்ந்துவிடும். அதோடு, ஈ, சிறு கொசு போன்றவை மொய்க்க ஆரம்பித்துவிடும். இதைத் தவிர்க்க, செம்பழமாக இருக்கும்போதே சீப்பிலிருந்து காம்புடன் தனித்தனியாக பிரித்துவிடுங்கள்.பழங்கள் பழுத்துவிட்டாலும், காம்புடன் இருப்பதால் ஈ மொய்க்காமல் சுகாதாரமாக இருக்கும். சீக்கிரத்தில் அழுகவும் செய்யாது. பிறருக்கு எடுத்துக் கொடுப் பதும் சுலபம்.------------------------------------------------------------------------------பக்குவமாகச் செய்தாலும், ஊறுகாயில் பூஞ்சை காளான் வந்துவிடுகிறதா?கவலையை விடுங்கள். ஊறுகாயின் அளவுக்கேற்ப, சுத்தமாக உலர்ந்த பாட்டில் ஒன்றை எடுத்து, வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் இரண்டு டீஸ்பூன் எண்ணெயை விட்டு, எல்லா இடங்களிலும் பரவும்படி செய்யுங்கள். பிறகு ஊறுகாயை நிரப்புங்கள். பூஞ்சை காளான் கிட்டே நெருங்காது.-------------------------------------------------------------------வெரைட்டி ரைஸ் தயாரிக்கும்போது, சாதத்தை உதிரியாகக் களறீயதும், ஒரு கரண்டியால் மேற்புறம் சிராக அழுத்தி விட்டு, மூடி வைத்து விடுங்கள். இதனால், நெடுநேரம் சூடாக இருப்பதுடன், சுவையும் குறையாமல் ஃபிரெஷ்ஷாகவும் இருக்கும்.----------------------------------------------------------------------------பர்ஃபி, மைசூர்பாக் போன்ற ஸ்வீட்ஸ் செய்யும்போது, கடாயின் அடியில் ஒட்டிக் கொண்டு எடுக்கவே வராது. அதைக் கரண்டியால் சுரண்டாமல், கடாயை மீண்டும் அடுப்பில் வைத்து, மிதமாக சூடு பண்ணி, லேசாகத் தேய்த்தால் ஒட்டிக் கொண்டிருப்பது சுலபமாகப் பெயர்ந்துவிடும்.---------------------------------------------------------------------காலையில் செய்த சாதம், பொரியல் மீந்து விட்டதா? இரண்டையும் நன்றாக மசித்து, வதக்கிய வெங்காயத்துண்டுகளை சேர்த்து கட்லெட்டாக செய்துவிடலாம். மாலை சிற்றுண்டி ரெடி!--------------------------------------------------------------------மாங்காய் தொக்கு வருடம் முழுவதும் சாப்பிட ஆசையா? இரண்டு மூன்று மாங்காய்களை தோல் சீவி துருவிக் கொள்ளுங்கள். இதனுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வெயிலில் நன்றாகக் காய வைத்து ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துவிடுங்கள். தேவைப்படும்போது, இதில்இருந்து சிறிது எடுத்து வெந்நீரில் ஊற வைத்து, வழக்கம்போல நல்லெண்ணெய் தாளித்து, தொக¢கு செய்து கொள்ளலாம்.---------------------------------------------------------------------------தேங்காய் பர்ஃப¤ செய்யும்போது முதலிலேயே சர்க்கரை, தேங்காய் துருவல் இரண்டையும் சேர்த்து அடுப்பில் வைக்காதீர்கள். சர்க்கரையை கம்பிப்பாகு பதம் வரும்வரை காய்ச்சி, பிறகு, தேங்காய் துருவலை சேர்த்தால், அதிகம் கிளற வேண்டிய அவசியமிருக்காது. பர்ஃபியும் சீக்கிரத்தில் கெட்டியாகிவிடும்.--------------------------------------------------------------------------------நாடா பக்கோடா செய்யும்போது அரிசி மாவு, கடலை மாவுடன் 2 டீஸ்பூன் உளுந்து மாவையும் சேர்த்துச் செய்தால், எண்ணெய் அதிகம் குடிக்காது. கூடுதல் 'கரகர மொறுமொறு'வுடன் இருக்கும்.-----------------------------------------------------------------------------------வெள்ளைப் பூசணிக்காய் தோலைத் தூக்கி எரியாதீர்கள். சிறு துண்டுகளாக நறுக்கி காய வைத்து, எண்ணெயில் பொரித்து இட்லிப் பொடியுடன் சேர்த்துஅரைத்தால் சுவையாக இருக்கும். உடம்புக்கு மிகவும் நல்லது.-------------------------------------------------------------------------அவசரமாக சாம்பார் செய்யணுமா? பாசிப்பருப்பை அரை பதத்தில் வேக வைத்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். இதில் பச்சை மிளகாய், தக்காளித் துண்டுகள் தாளித்தால் சாம்பார் ரெடி! இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அற்புதமாக இருக்கும்.------------------------------------------------------------------------அடை வார்க்க போகிறீர்களா? சிறிது நேரம் ஊற வைத்த ஜவ்வரி சியை, அடைமாவுடன் சேர்த்துச் செய்தால் வித்தியாசமான சுவையில் அடை கரகரப்பாக இருக்கும்.---------------------------------------------------------------------------மொறுமொறு தோசை சாப்பிட ஆசையா? ஒரு டம்ளர் ரவையுடன், ஒரு டம்ளர் அரிசி மாவு, ஒரு டேபிள்ஸ்பூன் கடலை மாவு சேர்த்துக் கலந்து தோசை வார்த்து பாருங்கள். பேப்பர் ரோஸ்ட் போல் வருவதுடன், டேஸ்ட்டாகவும் இருக்கும்.-----------------------------------------------------------------------------ஒரு கிலோ வெல்லத்தை உடைத்து கல், மண் நீக்கி பாகு காய்ச்சி, ஏலக்காய்த்தூள் தூவி டப்பா வில் வைத்துக் கொண்டால்... அதை பலவிதங்களில் பயன்படுத்த முடியும். தேவைப்படும்போதுவெல்லத் தூளில் கொஞ்சம் எடுத்து, அதில் அரை மூடி எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டால் பாகு இளகி இருக்கும். இந்தப் பாகில்...தேங்காய்ப் பால் சேர்த்து கலக்கினால் தேங்காய்ப் பால் பாயசம் ரெடி! மாங்காய் வெல்ல பச்சடிக்கு உடனே பயன்படுத்தலாம்.2 கரண்டி பாகில் 4 ஸ்பூன் தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி கமர்கட் போலவும் சாப்பிடக் கொடுக்கலாம்.---------------------------------------------------------------காய்ந்த மிளகாய், சீரகம், தனியா, பொட்டுக்கடலையை மிக்ஸியில் பொடித்து அதனுடன் பெருங்காயத்தூள்சேருங்கள். கொத்தவரங்காய், பீன்ஸ், காராமணி, கேரட் போன்றவற்றில் பொரியல் செய்யும்போது, இந்தப் பொடியைக் கொஞ்சம் தூவி வதக்கினால் டேஸ்ட் சூப்பராக இருக்கும்.---------------------------------------------------------------சிலர், அட்டைப் பெட்டிகளில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களை ஃப்ரிட்ஜில் வைத்து விட்டு, உபயோகப்படுத்த மறந்து விடுவார்கள். அதைப் பயன்படுத்த எண்ணும்போது, தேதி காலாவதி யாகி இருக்கும். எனவே, ஃப்ரிட்ஜை சுத்தப்படுத்தும் போதெல்லாம், அதில் வைத்த, அட்டைப்பெட்டி மீது கண் வைப்பது அவசியம். உணவுப் பொருட்கள் வீணாகாமல் தடுக்கலாம். பணமும் விரயமாகாது.-----------------------------------------------------------------------குக்கரில் இட்லி சுடும்போது, தட்டின் குழிவான பகுதிகளில் ஒட்டிக் கொண்டு இட்லிகள் அடம் பிடிக்கும். அந்தப் பகுதிகளில் எண்ணெய் தடவினால்போதும்... இட்லி முழுமையாக கையில் வந்துவிடும். அதேபோல, இட்லி தட்டின் அடிப்பகுதியிலும் எண்ணெய் தடவினால், கீழ் தட்டில் உள்ள இட்லி அதில் ஒட்டாமல் பூப்போல பெயர்ந்து வரும்.--------------------------------------------------------------------------------சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? ஒரு கிண்ணத்தில் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் கோதுமை மாவை, சிறிது நல்லெண்ணெய் விட்டுக் குழைத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். சப்பாத்தி மாவை வட்டமாக உருட்டியதும், எண்ணெய் சேர்த்துக் குழைத்த கலவையை அதன் நடுவில் சிறிது தடவுங்கள்.பின்பு வழக்கம் போல, சப்பாத்திகளாக உருட்டி சுட்டெடுத்தால்... மிருதுவாகவும், பரோட்டா போல இதழ் இதழாகவும் சப்பாத்தி பிரிந்து வரும். சாப்பிடுவதற்கு சூப்பராக இருக்கும்.--------------------------------------------------------------------------------தேங்காய்ச் சட்னி வழக்கத்தைவிட சற்று கூடுதல் டேஸ்ட்டோடு வேண்டுமா..? வழக்கமாக சேர்க்கும் பொருட்களுடன் கொஞ்சம் போல கடுகு (வறுக்காமல்) சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளுங்கள். பிறகு, வழக்கம்போல கடுகு தாளித்து, சட்னியை அதில் சேர்த்தால் சுவை கூடும். ஃப்ரிட்ஜில் வைத்தால் அடுத்த நாள் வரை கெடாமல் இருக்கும்.--------------------------------------------------------------------------------தினமும் இரவு சமையலறை யைச் சுத்தம் செய்ததும், கொதிக்க வைத்த தண்ணீரை சிங் உள்ளே வேகமாக ஊற்றுங்கள். இதனால் அங்கு தங்கியிருக்கும்பூச்சிகள் அழிவதோடு, அடைப்புகளும் அகன்று விடும்.--------------------------------------------------------------------------------தோசை வார்த்தால் கல்லில் ஒட்டிக் கொண்டு அலும்பு செய்கிறதா...? ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு சில நிமிடம் வதக்கி எடுக்கவும். பின்னர் தோசை வார்த்தால், ஒட்டவே ஒட்டாது. அந்த வெங்காயத்தை, மாவில் சேர்த்தால்... வெங்காய தோசை!--------------------------------------------------------------------------------அடிக்கடி தொலைந்து போகும் க்ளிப்பு மற்றும் கம்மல்களை பத்திரமாக வைக்க ஒரு வழி... குழந்தைகள் எழுதி முடித்த நோட்புக்குகளின்அட்டையில் (அட்டையை இரண்டாக மடித்து கூட விட்டுக் கொள்ளலாம்) ஓட்டைகள் போட்டு, க்ளிப் மற்றும் கம்மல்களை மாட்டி விடுங்கள். அட்டை கனமாக இருப்பதால் எளிதில் தொலைந்து போகாது.--------------------------------------------------------------------------------மாக்கோலம் (நீரில் கரைத்த மாவில்) போடும்போது, அவை கையில் படாமல் இருக்க வேண்டுமா? காலியான பாத்திரம் துலக்கும் லிக்விட் பாட்டிலில், கரைத்த அரிசி மாவை (கரைத்த மைதா மாவு கூட பயன்படுத்தலாம்)ஊற்றி மூடி, மெதுவாகச் சாய்த்துக் கோலம் போட்டுப் பாருங்கள். அற்புதமாக கோலம் போட வரும்.--------------------------------------------------------------------------------மழைக் காலம் ஆரம்பிக்க போகிறது. அவசர தேவைக்கு சிம்னி விளக்கு தேவைப்படுகிறதா?கண்ணாடியிலான ஜாம் (அ) ஊறுகாய் பாட்டிலின் மூடியின் நடுவே ஒரு துளை போட்டுக் கொள்ளுங்கள். பாட்டிலில் மண்ணெண்ணெய் நிரப்பி, மூடியின் துளை வழியாக ஒரு துணியைத் திரித்து (எண்ணெயில் மூழ்கும்படி) செருகி தீ ஏற்றினால், நெடு நேரம் எரியக்கூடிய விளக்கு தயார்.-------------------------------------------------------------------------இரண்டே மணி நேரத்தில் கெட்டித் தயிர் செய்ய ஒரு சுலபமான வழி. ஒரு பாத்திரத்தில் மிதமான சூடுள்ள பாலை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் இரண்டு டீஸ்பூன் தயிரை கலக்குங்கள். இதை அப்படியே 'ஹாட் பேக்'கில் வைத்து மூடிவிடுங்கள். இரண்டே மணி நேரத்தில் அருமையான கெட்டித் தயிர்தயார்.----------------------------------------------------------------------ஹேண்ட் பேக்-ன் ஜிப் வளையத்தினுள், எப்போதும் இரண்டு ஸேஃப்டி பின்களை மாட்டி வையுங்கள். அவசரத்துக்குக் கைகொடுக்கும்.-----------------------------------------------------------------------வெளியூருக்குப் பயணிக்கும்போது பாத்திரம் இல்லாமலேயே நாலு கப் டீ தயாரிக்க ஒரு ஐடியா. இரண்டு கப் கொதிக்க வைத்த பால், இரண்டு கப் வெந்நீர், 8 டீஸ்பூன் சர்க்கரை, நாலு டீ பேக் (டிப் செய்யும் டீ பேக்கின் நூலை கட் பண்ணிவிட்டு உள்ளே போடவும்).. இவை எல்லாவற்றையும் ஃபிளாஸ்கினுள் போட்டு இறுக மூடி விடுங்கள். ஐந்தே நிமிடத்தில் அசத்தலான டீ ரெடி!-------------------------------------------------------------------------சமையலுக்கு எவர்சில்வர் கரண்டிகளை விடவும் மரக்கரண்டிகளையேபயன்படுத்துவது நல்லது. கிளறுவது சுலபம். பாத்திரத்தில் கோடு விழாது. கையிலும் சூடு தாக்காது.--------------------------------------------------------------------------வீடு துடைக்கப் பயன்படுத்தும் 'மாப்'-ன் கைப்பிடி அடிக்கடி கழன்று விடுகிறதா? மேல் பகுதியை இணைக்கும் துவாரத்தினுள் பழைய துணியை அடைத்துப் பயன்படுத்துங்கள். இறுகப் பிடித்துக் கொள்ளும்.-----------------------------------------------------------------------சப்பாத்தி, பூரிக்கு மாவை உருட்டி தேய்க்கும்போது மைதா மாவுக்கு பதிலாக கார்ன்ஃப்ளார் மாவை பயன்படுத்துங்கள். நன்றாகத் தேய்க்க வரும்.பொரிக்கும்போதும் தனியாக உதிராது.-------------------------------------------------------------------உருளைக்கிழங்கு,கோஸ், கேரட் இவற்றை வேக வைக்க ஒரு ஈஸி வழி. பிரஷர் பேனில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், காய்களை போட்டு உப்பு, காரம் சேர்த்து லேசாக ஒரு முறை வதக்கி, வெயிட் போடாமல் மூடுங்கள். அடுப்பை 'சிம்'மில் வைத்து, ஆவி வந்ததும் 'வெயிட்' போட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். சட்டென்று காய்கள் வெந்துவிடும்.-------------------------------------------------------------------------ஒரு டெய்ரி மில்க் சாக்லேட்டை தயிரில் போட்டு, 5 முதல் 10 நிமிடம் ஊற வையுங்கள்.இதில்சிட்டிகை உப்பு சேர்த்து மிக்ஸியில் சுற்றி, ஃப்ரீஸரில் வைத்து எடுத்தால் அசத்தலான சாக்லேட் லஸ்ஸி தயார்!-------------------------------------------------------------------------பயறு வகைகளை ஊற வைக்கும்போது, தனித் தனி பாலீதின் பைகளில் பயறுகளைப் போட்டு தண்ணீர் விட்டு, இறுக்கமாகக் கட்டி வைத்து விடுங்கள். விரைவாகவும், ஒரே மாதிரியாகவும் ஊறிவிடும்.-----------------------------------------------------------------------------கடலைப்பருப்புடன், வேக வைத்த சர்க்கரைவள்ளிக்கிழங்கு, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து போளி செய்து பாருங்கள். புது சுவையில் நாவை சுண்டியிழுக்கும்.பஜ்ஜி செய்ய, விருந்துகளில் அலங்கரிக்க வெங்காயத்தை வட்டமாக நறுக்குவது வழக்கம். வெங்காயத்தின் தோலை உரிக்காமலேயே வட்டங்களாக வெட்டி விட்டுப் பிறகு உரித்தால் வெங்காயம் பிரியாமல் அப்படியே இருக்கும்.----------------------------------------------------------------------------பஞ்சு போன்ற இட்லி வேண்டுமா? கிரைண்டரில் உளுத்தம்பருப்பைஅரைக்கும்போது, அது பாதி மசிந்ததும், ஏழெட்டு ஐஸ் கியூப்களைப் போட்டு¢ அரையுங்கள். மாவும் அதிகம் வரும். இட்லியும் மெத்தென்று மென்மையாக இருக்கும்.-------------------------------------------------------------------நான்-ஸ்டிக் கல்லில் தோசை வார்க்கும்போது எண்ணெய் சீராக பரவ ஒரு வழி.. மாவைக் கல்லில் வட்டமாக ஊற்றி பரப்பி, ஏதேனும் ஒரு ஓரத்தில் மட்டும் எண்ணெயை விடவும். தோசைக் கல்லின் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு லேசாகச் சரித்தால், எண்ணெய் தோசையின் எல்லா இடங்களிலும் பரவி விடும்.-------------------------------------------------------------------சுண்டல் செய்வதற்குமுன் கடலையை ஊற வைக்க மறந்து விட்டாலும் கவலை இல்லை. வெறும் கடாயை சூடாக்கி, அதில் கடலையைப் போட்டு ஐந்தாறு நிமிடங்கள் நன்றாக வறுங்கள். இருமடங்கு தண்ணீரைக் கொதிக்கவைத்து அதில் சூடான கடலையைப் போட்டு குக்கரில் வைத்தால் கடலை நன்றாக வெந்து விடும்.-------------------------------------------------------------------குக்கரை திறந்து சாதத்தை எடுக்கும்போது சில நேரங்களில் தட்டின் மீது நீர் தேங்கியிருக்கும். உடனே மீண்டும் குக்கரை மூடி, வெயிட் போடாமல் ஐந்து நிமிடங்கள் எரிய விடுங்கள். அதிகப்படி தண்ணீர் ஆவியாகி சாதம் சரியாக வெந்துவிடும்.------------------------------------------------------------------பூரி மொறுமொறுப்புடன்இருக்க.. மாவைப் பிசைந்து தேய்த்த பிறகு அதை ஒரு டப்பாவில் போட்டு, அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். பிறகு எடுத்துப் பொரித்தால் பூரி க்ரிஸ்பியாக இருப்பதுடன் எண்ணெயும் அதிகம் குடிக்காது.-----------------------------------------------------------------காபி மேக்கரில் (அ) ஃபில்ட்டரில் சீரகத்தைப் போட்டு, வெந்நீரை விடுங்கள். சில நிமிடங்களில் அருமையான சீரகத் தண்ணீர் ரெடி! சீரகத்தை வடிகட்ட வேண்டியதும் இல்லை. வயிற்றுப் பிரச்னைக்கும் விடிவு பிறக்கும்.-------------------------------------------------------------------ஹெல்த்தியான சப்பாத்தி செய்ய.. கோதுமை மாவுடன், நான்கில் ஒரு பங்கு சத்து மாவு, ஒரு டீஸ்பூன் வெந்தயப்பொடி கலந்து கொள்ளுங்கள். இதில் சிறிது வெந்தயக்கீரையை வதக்கியும் சேர்க்கலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது இந்த சப்பாத்தி---------------------------------------------------------------------மீந்து போன சாதத்தில் தண்ணீர் ஊற்றினால், சாதம் ஊறி மாவு போல் கூழாகிவிடும். தண்ணீருடன் இரண்டு டீஸ்பூன் மோர் கலந்து விட்டுப் பாருங்கள். மறுநாளும் சாதம் மல்லிகைப் பூப்போல உதிர் உதிராக இருக்கும்.------------------------------------------------------------------------ருசியாக ரிப்பன் பக்கோடா செய்ய ஒரு ஈஸி வழி. நறுக்கிய வெங்காயத்துடன் 3 காய்ந்த மிளகாய், உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து, மிக்ஸியில் அரைத்து வடிகட்டுங்கள். இதை ரிப்பன் பக்கோடாவுக்கான மாவுடன் சேர்த்துப் பிசைந்து, அச்சில் இட்டு, குறைந்த தீயில் பொரித்தெடுங்கள். சுவையான ரிப்பன் பக்கோடா ரெடி!வடிகட்டப்பட்ட பொருளையும் வீணாக்காமல் அதில் சிறிது கடலை மாவு கலந்து பக்கோடாவாகப் பொரிக்கலாம்.------------------------------------------------------------------------பாட்டில்களை சோப் (அ) லிக்விடால் கழுவும்போது நுரை சீக்கிரத்தில் வெளியேறாது. இதற்கு, முதலில் பாட்டில்களில் தேவையான தண்ணீர் விட்டுக்குலுக்கி சுத்தம் செய்யவும். பிறகு, குழாயை மெதுவாக திறந்து விட்டு, அதனடியில் பாட்டில்களைப் பிடித்தால், பாட்டில் நிறைந்து எல்லா நுரையும் வெளியேறிவிடும்.கழுவுவதும் ரொம்ப ஈஸி.-------------------------------------------------------------------ரோஜா, சாமந்தி பூக்களை வாங்கும்போது சில சமயம் காம்பு ஒடிந்து போய் தலையில் வைக்கவோ.. சுவாமி படத்துக்கு மாட்டவோ முடியாமல் போக லாம். ஊதுவத்தி கொளுத்தி மிஞ்சியிருக்கும் குச்சியை பூவின் நடுவில் சொருகி விட்டால் போதும். பூ சூட்டுவதும், சூடிக் கொள்வதும் எளிது.------------------------------------------------------------------பிரெட்டை ஸ்வீட் அயிட்டமாக மாற்ற ஒரு சூப்பர் ஐடியா. ஒரு டம்ளர் பாலில் மூன்று (அ) நாலு டீஸ்பூன் மைதா, சர்க்கரை, சிறிது ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும். அதில் பிரெட்டை நனைத்து தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு, தீயைக் குறைத்து இரு பக்கமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும். பிரெட் மொறுமொறுப்புடன்அட்டகாசமாக இருக்கும்.-------------------------------------------------------------------கறிவேப்பிலை காய்ந்து போகாமல் பசுமையாக இருக்க.. கறிவேப்பிலையை உருவி சுத்தம் செய்து, ஈரப்பசை இல்லாமல் உலர்த்தி எடுக்கவும். பிறகு மிக்ஸியில் நன்றாகப் பொடித்து ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு, ஃப்ரிட்ஜில் வைத்து விடவும். வாரக் கணக்கில் நிறம் மாறாமல் இருக்கும்.-------------------------------------------------------------------வெயில் காலத்தில் இட்லி மாவு சீக்கிரத்தில் புளித்துவிடும்.இட்லி, தோசைக்கு அரிசி, பருப்பைக் கழுவி ஊற வைக்கும்போது, ஒரு மணிநேரத்தில்அந்தத் தண்ணீரை வடித்து விட்டு, வேறு புதிய தண்ணீரை ஊற்றவும். இப்படி இரண்டு (அ) மூன்று முறை தண்ணீரை மாற்றி ஊற வைத்தால் மாவு சீக்கிரம் புளிக்காது.-------------------------------------------------------------------மைதா, கோதுமை, அரிசி மாவுகளை தண்ணீர் விட்டுக் கரைக்கும் போது கட்டி கட்டியாகி விடும். இதற்கு, மாவை பாத்திரத்தில் போட்டு, அதன் மேல் தண்ணீரைப் பரவலாக விட்டு உடனே கலக்காமல் அப்படியே விட்டு வையுங்கள். 5 நிமிடங்கள் கழித்துக் கலக்கினால் மாவு கட்டியில்லாமல் கரைந்துவிடும்.----------------------------------------------------------------பாட்டில், டப்பாவின் மூடிகளைத் திறக்க முடியவில்லையா? கையில் விபூதியை நன்றாகத் தடவிக் கொண்டு திறந்தால், ஈஸியாக திறக்க வரும்.-------------------------------------------------------------முழு முந்திரிப் பருப்புகளை அப்படியே பாட்டில்களில் வைத்தால் அதில் பூச்சிகள் வந்து விடும். பருப்புகளை இரண்டாக உடைத்து வைத்துவிடுங்கள். நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருக்கும். இரண்டு கிராம்புகளை போட்டு வைத்தால் இன்னும் பாதுகாப்பாக இருக்கும்.---------------------------------------------------------------பழைய பிளாஸ்டிக் ஸ்கிரீன்கள், மேஜை விரிப்புகளை தூக்கி எறியாதீர்கள். அவற்றை சரியான அளவில் வெட்டி, ஃபிரிட்ஜில் ஊறுகாய், ஜாம் பாட்டில்கள் வைக்கும் இடத்தின் கீழே விரித்து வைத்தால் கறை படியாது. அவ்வப்போது, இந்த பிளாஸ்டிக் துணிகளை மட்டும் எடுத்துக் கழுவி மீண்டும் விரித்து வைக்கலாம்.--------------------------------------------------------------------மைதா மாவு, பிரெட்தூள் இல்லாமல் சுலபமாக கட்லெட் செய்ய ஒரு வழி இருக்கிறது. காய்கறி கலவையில் சிறிது கடலை மாவைச் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளுங்கள். கடாயில் எண்ணெய் விட்டு, இந்தக் கலவையைப் போட்டு இரண்டு நிமிடங்கள் வதக்கி, கெட்டியானதும், எண்ணெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்துங்கள். பிறகு விரும்பிய வடிவில் வெட்டி, தோசைக்கல்லில் சுட்டு எடுங்கள். கட்லெட் ரெடி.----------------------------------------------------------------------சமையல் செய்யும்போது துருவிய தேங்காய் மீந்துவிட்டால்,அதனுடன் அரை டீஸ்பூன் (ஒரு கப் தேங்காய்த் துருவலுக்கு) உப்புத்தூளை சேர்த்துப்பிசிறி ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு, மூடி வைத்து விடுங்கள். ஃபிரிட்ஜில் வைக்காமலேயே, மூன்று நாட்கள் வரை தேங்காய் கெடாமல் இருக்கும்.----------------------------------------------------------------------வீட்டிலுள்ள குளிர் சாதனப் பெட்டி, 'மைக்ரோ வேவ் அவன்', மிக்ஸி போன்றவற்றை சுத்தம் செய்ய சூப்பர் ஐடியா. டூத் பேஸ்ட்டை சிறிது எடுத்து அரை டம்ளர் தண்ணீரில் கரைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பாஞ்சை நனைத்துப் பிழிந்து, பொருட்களைத் துடைத்து விட்டு, கடைசியில் உலர்ந்த துணியால் துடைத்து விட்டால் போதும். பொருட்கள் பளிச்சிடும்.--------------------------------------------------------------------------சமையல் அறை, பூஜை அறையில் எண்ணெய் ஊற்றி வைக்கும் தூக்கு, பாட்டில்களில் கையில் எடுக்க முடியாத அளவுக்கு பிசுக்கு ஏறி விடும். இதைப் போக்க பாட்டிலை இறுக மூடி, அரிசிமாவால் நன்றாக தேய்த்ததும் உலர்ந்த துணியால் துடைத்து விடுங்கள். பிசுபிசுப்பு நீங்கி பளபளக்கும்.---------------------------------------------------------------------------சுடிதார் செட் பழசானாலும் துப்பட்டா புதுசாகவே இருக்கும். அதை வீணாக்காமல் இரண்டாக கட் பண்ணி ஓரங்களை கடையில் கொடுத்துத் தைத்துவிடுங்கள். இந்தத் துணியை குளிர் காலத்துக்கு ஸ்கார்ப்பாகவும், ஹெல்மெட் போடும் முன் தலையில் கட்டுவதற்கும் பயன்படுத்தலாம்.-------------------------------------------------------------------முல்லை, மல்லிகளை உதிரிப்பூவாக வாங்கி தொடுக்கும்போது இடையிடையே சாட்டின் ரிப்பன் அல்லது உல்லன் நூலை மடித்து வைத்து கட்டினால் உடுத்தும் உடைக்கு மேட்சாக இருப்பதுடன், பார்க்க அம்சமாக இருக்கும்.---------------------------------------------------------------ஃபிரெட்டில் ஜாம், தேன், வெண்ணெய் தடவி சாப்பிடுபவரா நீங்கள்? முதலில் பிரெட்டில் ஜாம் தடவிய பிறகு தேன், அதன் பிறகு வெண்ணெய் தடவினால் பிரெட்டில் எல்லாம் சீராக பரவும். சாப்பிடும்போது சிந்தாமல் இருப்பதோடு, ஃபிரெட் வாயிலும் ஒட்டிக் கொள்ளாது.

No comments: