Monday 16 November 2015

சின்ன சின்ன வீட்டுக் குறிப்புகள் !!!

1. தரையில் எண்ணை கொட்டி விட்டால் அரிசி மாவு அல்லது கோதுமை மாவு
ஏதாவது ஒன்றை சிறிது நேரம் தூவி பிறகு திரட்டி எடுத்தால் எண்ணை கறை
நீங்கிவிடும்.
2. குளிர் நாளில் தயிர் சீக்கிரம் உறையாது. தயிறை தோய்த்து ஃப்ரிட்ஜுக்கு பின்புறம் வைத்தால் சீக்கிரம் உரையும்.
இட்லி மாவு ரொம்ப பொங்கும் போது ஃப்ரிட்ஜ் எல்லாம் நாச்தி ஆகி விடும்.
சிம்பிள் ஐடியா...ஒரு வெற்றிலையை மாவு மீது போட்டு விட்டால் அதிகமாக
பொங்காது
1.கல் நகைகளில் எண்ணை இறங்கி விட்டால் வெள்ளை பூசணிக்காயில் நகைகை
புதைத்து வைத்து ஒரு சில மணி நேரம் கழித்து எடுத்து கழுவவும் நகை பளபள
என்று இருக்கும்.
2. வீட்டில் அதிகமாக ஈ தொல்லை இருந்தால், சிறிது கற்பூரத்தை தண்ணீரில் கலந்து வீட்டை துடைத்தால் ஈ போய்விடும்.
3. ஏறும்பு அதிகமாக இருக்கும் இடத்தில் மஞ்சள் தூள் போட்டால் ஏறும்பு போய்விடும்.
4. பெருங்காயம், இஞ்சி, பூண்டு மூன்றையும் சேர்த்து அரைத்து தண்ணீரில்
கலந்து செடிகளில் தெளித்தால், செடிகளில் உள்ள பூச்சிகளும் போய்விடும்,
பாதிப்பும் ஏற்படாது.
5. கற்பூரத்தை ககிதத்தில் சுற்றி சக்கரை டப்பாவில் போட்டு வைத்தால் ஏறும்பு வராது.
இட்லிப்பாத்திரம் கரை படிந்து விட்டதா?
தண்ணீருடன் பாதி எழுமிச்சைப்பழம் போட்டு கொதிக்கவைத்தால் கரையா அப்படினா என்னன்னு கேட்பீங்க
உங்கள் புத்தக அலமாரியில் கரையான் வரும் என்ற கவலை வேண்டாம்..சிறிது
வசம்பு போட்டு வைத்தால் போதும் கரையான் அண்டாதுகல் உப்பைக் கரைச்சு அந்த
தண்ணியைத் தெளிச்சா கொஞ்சம் நிம்மதி இருக்கும்
ஃப்ரிஜ்ஜில் உள்ள ஃப்ரீசரில், ஐஸ்கட்டிகள் தோன்றாமலிருக்க கல் உப்பை உட்பகுதியில் தடவவும்.
.நன்கு பாலீஷ் செய்யப்பட்ட மரச் சாமான் களில் கறை படிந்துள்ளதா?
அரை லிட்டர் சுடுநீரில், இரண்டு ஸ்பூன் வினிகர் கலந்து, நல்ல சுத்தமான
துணியை இதில் நனைத்து கறை உள்ள இடத்தை துடைக்கவும். ஆயில் அல்லது கிரீஸ்
கறை உள்ள இடத்தில் இவ்வாறு சுத்தம் செய்தால் கறை எங்கே? என்று நீங்களே
தேடுவீர்கள்.
கதவு கிரீச் கிரீச் என சத்தமிடுகிறதா? கரித்துண்டை,அல்லது ஆயில் சத்தம் வரும் இடத்தில் தேய்க்கவும்.
செடிகள் மனதிற்கு அமைதியைத் தருவதோடு, சுற்றுச்சூழலுக்கு அழகை
ஏற்படுத்தும். உங்கள் வீட்டில் நீங்கள் தூக்கி எறியும் சில பொருட்களை,
செடிகளுக்கு உரமாக போடலாம்.
உங்கள் வீட்டில் டீ போடும் போது டீ இலைகள் அல்லது டீத்தூளை குப்பையில்
போடாமல், நீங்கள் வளர்க்கும் செடிகளின் தொட்டிகளில் போட்டால், செடிக்கு அது
நல்ல உரமாக இருக்கும்.
அக்குவாகார்ட் உள்ள வீடுகளில், அதனை சுத்தப்படுத்திய பின் அதிலுள்ள
கரியை தூக்கிப்போடாமல் செடிக்கு போடுங்கள். செடியின் வளர்ச்சிக்கு மிக
உதவியாக இருக்கும்.
பாட்டில்களை மலர்கள் வைத்து அழகுபடுத்தலாம். அறையின் ஓரத்தில் 3அல்லது4
பாட்டில்களை ஒன்றாக வைத்து, அதில் மலர்களை வையுங்கள், வீட்டிற்கு
வருபவர்கள் ஒருமுறைக்கு இருமுறை திரும்பிப் பார்ப்பார்கள்.
பட்டுப்புடவைகளை பாலித்தீன் பைகளுக்குள் போடுவதைவிட துணிப்பைகளுக்குள் போட்டுவைய்பது மிகவும் நல்லது.
புடவைகளை தனித்தனியாக பிரித்து வைக்கவேண்டும்
பட்டுகள்.சிபான்.காட்டன்.பூணம்.சில்க்.ஆர்ட்டட். ஜரிகை.ஸ்டோன் ஒர்க்.ஹேன் ஒர்க் மற்றுமுள்ளவைகள்,எனபிரித்து வைக்கவேண்டும்.
முடிந்தவரை புடவைகளை ஹேங்கரில் தொங்கவிடுங்கள் ஏனென்றால் எடுப்பதற்கும் ஈசியாக இருக்கும் நீண்ட நாளைக்கும் உழைக்கும்
வீட்டில் முகம் பார்க்கும் கண்ணாடி அழுக்காக இருக்கிறதா : ?
வேற ஏதும் தேவை இல்லை நீங்கள் பல் துலக்கும் எந்த பேஸ்டாக
இருந்தாலும் சரி அதை கொஞ்சம் யடுத்து கண்ணாடியில் தேய்த்து
கழுவி பாருங்கள் உங்கள் கண்ணாடி பளிச் பளிச் யன்று மின்னும்
கேசரி
அல்லது பொங்கல் செய்த பாத்திரத்தில் அடி பிடிக்கும் அதை நீக்குவது கடினம்
அதற்கு அந்த பாத்திரத்தில் நீர் விட்டு அடுப்பில் கொதிக்க விடுங்கள் பின்பு
தேய்தால் இலகுவாக இருக்கும்
ஒரு பெரிய பக்கெட் தண்ணீரில் "பிளீச்சிங் பவுடரை" கரைத்து, அதில், கரை
படிந்த பாத்திரத்தைப் போட்டு சிறிது நேரம் ஊற வைக்கவும். பிறகு சோப்பு
பவுடரால் பாத்திரத்தைத் தேய்த்தால் பாத்திரம் சுத்தமாகி விடும்.
அதிக எண்ணெய் பிசுக்குள்ள பாத்திரத்தில் நான்கு சொட்டு வினிகரை ஊற்றித் தேய்த்தால் பிசுக்கு போய் விடும்.
பிளாஸ்டிக் பாத்திரத்தில், சூடு இல்லாத சாம்பார், ரசம், பொரியலைப்
போட்டு வைத்தால் கூட, பிளாஸ்டிக்கில் கரை ஏறும். இதைத் தவிர்க்க,
பிளாஸ்டிக் பாத்திரத்தின் உள் பக்கம் முழுவதும் எண்ணெய் தடவிவிட்டு, உணவு
வகைகளைப் போட்டால் கரை ஏறாது.
.வாழைக்காயை தண்ணீரில் போட்டு வைத்தால் பழுக்காமல் இருக்கும்..
2 .துளசி விதையுடன் உப்பு ,மிளகு சேர்த்து பொடி செய்து சாபிட்டால் அஜீரனம் நீகும்.
3 .இள நரை என்றால் இலேசாக இருக்கும்போதே வெண்ணை தடவி வந்தால் அதை தடுக்கலாம்.
4 .சூடான cooffee இல் தேன் கலந்து குடித்தால் சளி குறைந்து மூக்கடைப்பு நிற்கும்.
5 .வெங்காயத்தை விழக்கெனைஇல் வதக்கி சாப்பிட்டால் மலச்சிக்கல் நீகும்,வயறு சுத்தமாகும்.
6 .பாசிபயறு மாவுடன் சந்தனம் கலந்து முகத்தில் பூசினால் கரும்புள்ளி நீகும்.
7 .வாரம் ஒரு முறை இஞ்சி,தேன் கலந்த சாரை சூடாக்கி குடித்தால் உடல் சுறுசுறுப்பு வரும்.
8 .தேங்காய் எண்ணை,வெந்தையம்,கற்பூரம்,இவைகளை கலந்து தலைஇல் தேய்த்தால் பொடுகு தொல்லை நீகும்.

No comments: