புராஜக்ட் அலெக்சாண்டிரியா' புத்தகப் பரிந்துரை தளங்களில் எளிமையானது, ஆனால் சுவாரஸ்யமானது. இது வலைப்பின்னல் பாணியில் நீங்கள் படிப்பதற்கான அடுத்த புத்தகத்தைப் பரிந்துரைக்கிறது.
இதில் இடப்பக்கத்தில் உள்ள தேடல் கட்டத்திலிருந்து உங்கள் தேடலைத் தொட‌ங்க வேண்டும். அதாவது உங்கள் மனதில் உள்ள ஒரு புத்தகம் அல்லது ஆசிரியரின் பெயரை டைப் செய்ய வேண்டும். உடனே அந்தப் புத்தகத்துடன் நெருங்கிய தொடர்புடையை புத்தகங்களை அருகே உள்ள மையப் பகுதியில் வலைப்பின்னல் வடிவில் சித்தரிக்கிறது. அவற்றில் உள்ள ஏதாவது ஒரு புத்தகத்தை கிளிக் செய்து வாசிக்கலாம். புத்தகம் தொடர்பான விவரங்களையும் தெரிந்துகொள்ளும் வழி இருக்கிறது.
புத்தகங்களின் உள்ளடக்கம், அவற்றின் வகைகள், எழுதிய எழுத்தாளர் உள்ளிட்ட அமசங்களைப் பரிசீலித்து லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களுக்கு இடையிலான தொடர்புக் குறிப்புகளைப் புரிந்துகொண்டு இந்தப் பரிந்துரையை வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய புத்தகங்கள் தொடர்பான‌ அறிமுகத்துக்கு இது சுவாரஸ்யமான வழி!
இணையதள முகவரி: http://projectalexandria.net/