Monday 16 November 2015

சின்ன சின்ன வீட்டுக் குறிப்புகள் !!!

குழந்தைகளூக்கு ஏற்படும் சளிக்கு (இஞ்சி சாறு) சளி சேர்ந்தால் முதலில் இஞ்சி சாறு முன்று நாட்களுக்கு தொடர்ந்து மாலை 5 மணி வாக்குல எடுத்து கொடுக்கவும். இது இரண்டு வயதிலிருந்து உள்ள பிள்ளைகளுக்கு இரண்டு ஸ்பூன் அளவுக்கு கொடுக்கலாம். குழந்தைகள் என்றில்லை எல்லோருக்கும் குடிக்கலாம். பெரியவர்களுக்கு ஒரு மேசைகரண்டி அளவு இஞ்சி சாறில் தேன் கலந்து கொடுக்கனும் , தேன் இல்லை என்றால் சர்க்கரை கலந்து கொடுக்கவும்.சைட் எஃபக்ட் எதுவும் வராது, இந்த சாறு குடித்த்தும் ஒன்றுசளி வாமிட் மூலம் வெளியாகும், இல்லை மோஷன் மூலமாக வெளியாகும். இஞ்சி சாறு செய்யும் முறை  இரண்டு அங்குல நீளம் உள்ள இஞ்சியை தோலை நீக்கி கழுவி ஆறிய வெண்ணீர் விட்டு அரைக்கவும் பட்டு போல் வேண்டாம் மிக்சியின் பஸ்ஸில் இரண்டு முன்று சுற்று சுற்றினால் போதும். அதை எடுத்து டீ வடிக்கட்டும் ஸ்ட்ரெயினரில் தேங்காய் பால் எடுப்பது போல் பிழியவும். அந்த சக்கையை தூர போட வேண்டாம் ஒரு சின்ன கண்டெயினரில் வைத்தால் இரண்டு முன்று நாட்களுக்கு டீ போட உதவும். மிக்சியில் அரைக்கனும் என்றில்லை கேரட் துருவும் கிரேட்டரிலும் செதுக்கி பிழியலாம். பிழிந்த சாறை பத்து நிமிடம் அப்படியே வைக்கவும், பத்து நிமிடம் கழித்து மேலோடு இருக்கும் சாற்றை மட்டும் வேறு டம்ளரில் தெளிந்தார் போல ஊற்றவும் வடிக்கட்டியதும் அடியில் வெள்ளை நிற படிவம் படிந்த்து இருக்கும் அதை பயன் படுத்த கூடாது அது நஞ்சு. / எடுத்து வைத்துள்ள சாற்றில் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கவும். அதிக காரம் நாக்கில் தட்டாமல் நீங்கள் குடித்து பார்த்து விட்டு கொடுக்கவும். இது முன்று நாள் தொடர்ந்து ஒரு முறை கொடுத்தால் போதும். இதை விட ஒரு சிறந்த மருந்து. அக்கரா (இதுக்கு ஆங்கில பெயர் தெரிந்தால் யாராவது சொல்லவும்) இது இஞ்சி சாறுக்கு அண்ணன் தொண்டையில் உள்ள சளியை அரவே அறுத்து எடுத்துடும், அக்கரா கிடைத்தால் அதில் நிறைய தேன் கலந்து ஒரு ஸ்பூன் முழுவது சாப்பிட கொடுக்கலாம். இது என் கிரான்மாவின் அம்மா வைத்தியம், மொத்தமா திரித்து வைத்து கொள்வோம், எத்தனை வருடம் ஆனாலும் கெடாது. ( பச்ச குழந்தைக்ளுக்கு ஆறு மாத்த்திலிருந்து கொடுக்க கால் டீஸ்பூன் அக்கராவில் வெண்ணீர் ஊற்றி ஊறவைத்து அதை வெள்ளை மல் துணியில் வடிக்கட்டி அதில் தேன் கலந்து கொடுக்கவும்.) சளிதொல்லைக்க்கு என்ன என்ன சாப்பிடலாம் 1. சூப் சிக்கன் (அ) மட்டன் சூப் கொடுக்கவும் ( செய்முறை பின்பு போடுகீறேன் 2. இஞ்சி சாறு 3. உணவில் மிளகு சேர்த்து தயாரித்து கொடுத்தல் 4. ஒரு டம்ளர் பாலை காய்ச்சி அதில் முன்று இதழ் சாப்ரான் ( குங்குமப்பூ) உரைத்து கொடுக்கலாம். 5. இஞ்சி ரசம், வாரம் ஒரு முறை கொடுக்கலாம்.( இது நான் சொல்லி நிறைய் பேருக்கு கேட்டு இருக்கு) இது ஏற்கனவே குறிப்பில் இருக்கு மறுபடி ரீ போஸ்ட் செய்கிறேன்/ 6. சூடாக வெண்ணிர் குடிக்கும் பக்குவத்தில் அடிக்கடி குடிக்க கொடுக்கவும் 7. அக்கரா தேன் கலந்து சாப்பிடலாம். 8. மிளகு பால் காய்ச்சி சிட்டிக்கை மஞ்சள் பொடி போட்டு சர்க்கரை சேர்த்தும் இரவில் குடிக்கலாம். //பேன், ஏசிக்கு நேரா படுக்காதீர்கள் படுக்கும் போது தலைக்கு சிறிது உயரம் வைத்து சரிந்து படுக்கவும். தொண்டை, இரு காது மடலுக்கு பின், முதுகு நடு தண்டில் தைலம் தேய்க்கவும் அழுத்தி தேய்க்காமல் மென்மையாக தேய்க்கவும்/ ஆவி பிடிக்கவும். சூடான வெண்ணிரில் சுக்கு (அ) சிறிது தைலம் சேர்த்து ஆவி பிடிக்கவும். ( பெரியவர்கள் துளசியும் சளிக்கு நல்லது துளசி டீ, சுக்கு, மிளகு டீ, வெரும் மிளகு டீ, சாப்ரான் டீ இது போல் குடிக்கலாம்) மிளகு , அக்கரா, இஞ்சி சாறு ரொம்ப அதிகமாக கொள்ளவேண்டாம் வயிற்றுக்கு ஒத்துக்கொள்ளாமல் லூஸ்மோசஷன் ஆகும்

No comments: