Sunday 15 December 2013

குழந்தைகளுக்கு உணவுகள்!!!

குழந்தைகளுக்கு உணவுகள்!!!

குழந்தை பிறந்தது , ஒரு 4,5 மாதங்களில் semi solid என்று சொல்லப்படுகிற கூழ் வகை உணவுகளை நாம் ஆரம்பிப்பது நல்லது. அது பின்னர் குழந்தைக்கு அரிசி சாதம் சாப்பிட வைக்க உதவுவதாகவும் இருக்கணும், நாம் நாம் வீடுகளில் சாதாரணமாக சாப்பிடும் உணவை ஒட்டி யும் இருக்கணும். அப்ப தான், குழந்தை 1 வயது வரும்போது, சுலபமாக நம் சாப்பாட்டு முறைக்கு மாறும். இங்கு சில semi solid உணவுகளை பார்க்கலாம்.                   
சத்துமாவு கஞ்சி :




இது ரொம்ப சத்தான கஞ்சி . வீட்டிலேயே தயார் செயலாம் ; கடைகளிலும் பாக்கெட் போட்டு
விற்பதைக்காட்டிலும் நாமே செய்து கொடுப்பது சிறந்தது புன்னகை இனி செய்முறை யை பார்க்கலாம் .
தேவையானவை :
வேர்கடலை 1 கப்
புழுங்கல் அரிசி 1 கப்
சம்பா கோதுமை 1 கப்
பொட்டுக்கடலை 1 கப்
கேழ்வரகு 1 கப்
பயத்தம் பருப்பு 1 கப்
செய்முறை :
வாணலி இல் ஒவ்வொரு ஐட்டமாக போட்டு பொன் வறுவலாக வறுக்கணும்.
தனித்தனியாக வறுத்து ஒரு தாம்பாளத்தில் கொட்டவும்.
ஆறினதும் மாவு மிஷின் இல் மாவாக அறக்கவும்.
காற்று புகாத டப்பாவில் சேமிக்கவும்.
தேவை படும் போது, கஞ்சி தயாரித்து தரவும்.
குழந்தை இன் விருப்பத்தை பொறுத்து பால் சர்க்கரை அல்லது மோர் + உப்பு போட்டு தரலாம் .
குறிப்பு: கஞ்சி செய்ய : குழந்தைகளானால் 1 ஸ்பூன்; பெரியவர்களானால் 2 – 3 ஸ்பூன் போட்டு கஞ்சி தயாரிக்கவும். பெரியவர்களும் குடிக்கலாம். பெரியவர்கள் மோர் விட்டு உப்பு போட்டு குடிக்கலாம் அல்லது ரசம், சாம்பார் ஊறுகாய் ஏதாவது ஒன்று சேத்து குடிக்கலாம். அருமையாக இருக்கும் , நல்லா பசி தாங்கும்.
உருண்டை தயாரிக்க : விரத நாட்களில் இந்த பொடி இல் கொஞ்சம் நெய் விட்டு சர்க்கரை சேர்த்து உருண்டை செய்தும சாப்பிடலாம் புன்னகை                                                               
இதை நாங்கள் 11 நாளிலிருந்து தருவோம். குழந்தைக்கு சளி பிடிக்கும் என்கிற பயம் இருந்தால், வெந்நீரில் பிழிந்து தரவும்.
தேவையானவை :
சாத்துக்குடி 1
சக்கரை 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
சத்துக்குடியை நறுக்கி பிழியவும்.
சக்கரை , வெந்நீர் சேர்த்து கலக்கவும்.
வடிகட்டி குழந்தைக்கு தரவும்.
குறிப்பு: இது ரொம்ப நல்லது . விட்டமின் ‘சி’ நிரம்பியது. தெம்பாக இருக்கும் 
   



ஒரு 6மாதம் 7 மாதம் ஆனதும் , இட்லி பொங்கல் தரலாம். மசிஞ்ச சாதத்தில் துளி ரசம், பருப்பு, நெய் விட்டு தரலாம் .
ஒரு உணவை அல்லது கறிகாய்யை தரும்போது, 1 வாரம் முழுக்க தரவேண்டும், அப்ப தான் அது குழந்தைக்கு பிடிக்கிறதா, ஒத்த்துக்கொள்கிறதா என தெரியும். அதை பார்த்து விட்டு பின் அதுத்த உணவுக்கு போகலாம். இல்லா விட்டால் எது குழந்தைக்கு அலர்ஜி என கண்டு பிடிக்க முடியாது.
இட்லி தரும்போது, துளி சக்கரை தொட்டு தரலாம். கையால் நன்கு மசித்து தான் எதையுமே தரணும்.
பொங்கல் தருவதானால், நாம் தாளிக்கும் முன்பே தனியே கொஞ்சம் எடுத்து வைத்து விட்டு பிறகு துளி உப்பு போட்டு கலக்கவும். பிறகு ஒரு துளி நெய்யை அந்த மிளகு சீரகம் வறுத்த வாணலி இல் விட்டு , அதை இந்த , தனி யே எடுத்து வைத்துள்ள பொங்கலில் போட்டு கலந்து தரலாம். ஏன் என்றால், நாம் சாப்பிடும் பொங்கல் குழந்தைக்கு காரமாக இருக்கும்.