Saturday 14 December 2013

இயற்கை முறையில் கொசுக்களை விரட்ட சில டிப்ஸ்...!

இயற்கை முறையில் கொசுக்களை விரட்ட சில டிப்ஸ்...!

தேங்காய் நார்கள்
தேங்காய் உடலுக்கு மட்டும் நன்மை தராமல் வீட்டில் பல செயல்களுக்கு பயன்பட்டு நன்மை தருகிறது. எப்படியென்றால் தேங்காய் நார்கள் வீட்டில் பாத்திரங்கள் கழுவ பயன்படுவதோடு, வீட்டில் இருக்கும் கொசுக்களை விரட்டவும் பயன்படுகிறது.

எவ்வாறென்றால் இந்த காய்ந்த தேங்காய் நார்களை எரித்தால் அதில் இருந்து வரும் புகை கொசுக்களை எளிதில் விரட்டிவிடும். தற்போது தேங்காய் நார்கள் கடைகளில் கூட கிடைக்கிறது.

மாலை நேரத்தில் நெருப்பில் காட்டி, அனைத்து ரூம்களுக்கு புகையை காட்டி, சிறிது நேரம் கழித்து பார்த்தால் கொசுக்களை மாயமாய் மறைந்துவிடும். இயற்கை நார்களில் இருந்து வரும் புகையால் எந்த பாதிப்பும் வராது.

பச்சை கற்பூரம்
கொசுக்கள் அழிவதற்கு முக்கியமாக பொருள் சல்பர், இந்த சல்பர் இருக்கும் எங்கு இருந்தாலும் கொசுக்கள் வெளியில் தான் இருக்கும். கற்பூரம் இந்த சல்பரினால் ஆனது.

ஒரு பாத்திர தண்ணீரில் பச்சை கற்பூரத்தை போட்டு வைத்தால் அதில் இருந்து வரும் வாசனையால் கொசுக்கள் அருகில் வராது.

கெரோஷின் மற்றும் கற்பூரம்
இந்த இரண்டுமே கொசுக்களை அழிப்பதில் வல்லமைமிக்கது. கொசுக்களை அழிக்க கடைகளில் விற்கும் மிசின்களில் உள்ள காலி டப்பாக்களில் கெராஸினை விட்டு சிறிது கற்பூரத்தையும் கலந்து பிளக்கில் மாட்டி விடவேண்டும். அதனால் ஏற்படும் வாசனையால் கொசுக்கள் வராமல் இருப்பதோடு, உடலுக்கும் எந்த தீங்கும் ஏற்படாது.