நேத்து ஆபீசுல மெயில் செக் பண்ண வேண்டி
இருந்துச்சு. ஆன் பண்ணி பாஸ்வோர்ட் தந்தா அதுல சில எழுத்துக்கள் வேலை
செய்யல. சம்பந்தப்பட்ட துறைக்கு போன் செய்து பிரச்னையை சொன்னேன். அவங்க சரி
பண்ணித்தர்றோம்னு சொன்னாங்க. அப்புறமா எந்த எழுத்து வேலை செய்யலன்னு
கேட்டாங்க. நான் சொன்னேன். அதுக்கு சார்ட்கட் கீ இருக்கு. சொல்றேன் நோட்
பண்ணிக்க சொன்னாங்க. நானும் அந்த சார்ட்கட் கீ யூஸ் பண்ணி பார்த்தேன்.
ஒர்க் ஆச்சு. ஆக, ஆங்கில எழுத்துகள் வேலை செய்யாட்டியும் அவசரத்துக்கு யூஸ்
பண்ண இந்த சார்ட்கட் பட்டன்கள் உதவுமே?
-ALT பட்டனை HOLD பண்ணிட்டு தேவையான எண்கள்
பட்டனை அழுத்திவிட்டு கடைசியாக ALT பட்டனை UNHOLD செய்யதால் தேவையான ஆங்கில
எழுத்து கிடைக்கும். விஷயம் தெரியாதவங்க தேவைப்படும் சமயத்தில்
பயன்படுத்தி பாருங்க. ஆனால் small letter தான் வரும். அவ்வளவே...
-
பி.கு: ALT+65 முதல் 90 வரையில் capital letter வரும்.
- a - alt+97 (alt பட்டனை hold செய்து 97 என்ற இரண்டு எண்கள் பட்டனை அழுத்திய பிறகு alt பட்டனை unhold செய்யவும்)
- b - alt+98
- c - alt+99
- d - alt+100
- e - alt+101
- f - alt+102
- g - alt+103
- h - alt+104
- i - alt+105
- j - alt+106
- k - alt+107
- l - alt+108
- m - alt+109
- n - alt+110
- o - alt+111
- p - alt+112
- q - alt+113
- r - alt+114
- s - alt+115
- t - alt+116
- u - alt+117
- v - alt+118
- w - alt+119
- x - alt+120
- y - alt+121
- z - alt+122
- -


!["பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்”..!
மிளகு (Black pepper, பைப்பர் நிக்ரம், Piper nigrum):-
"பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்” என்பது சித்தர்கள் சத்தியவாக்கு. மிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது. "சீதச்சுரம், பாண்டு, சிலேத்மங்கிராணி, குன்மம், வாதம், அருசி பித்தம், மாமூலம் -ஓது சந்தி யாச மபஸ் மாரம், அடன் மேகம், காசமிவை நாசங் கறி மிளகினால்" என்று சித்தர் தேரையர் கூறியுள்ளார்.
உணவில் தினமும் மிளகு இரசம் இடம்பெற்றாலே போதுமானது. இது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கால்சியம, இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் தாராளமாக உள்ளன.
இவை அனைத்தும் நரம்புத்தளர்ச்சி, நரம்புக்கோளாறு முதலியவற்றை அகற்றி நரம்புகளுக்கு ஊக்கம் தருகிறது. நரம்பு மண்டலம் துடிப்பாக இருந்தால் சிந்தனையும் அதைத்தொடர்ந்து செயது முடிக்கும் வேகமும் சீராகத் தொடரும்.
காய்ச்சலுடன் வயிற்று பொருமலையும் மிளகு தணிக்கிறது. ஜீரண உறுப்புகள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டுத் தொந்தரவில்லாமல் செயல்பட உதவுகிறது. காரசாரமான மிளகு உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கிறது. ஜீரணக் கோளறும் உடனே குணமாகிறது. உணவும் நன்கு செரிக்க ஆரம்பிக்கிறது.
வீட்டில் எப்போதும் கறுப்பு மிளகுத் தூள் இருப்பது நல்லது. ஜீரணம் ஆகாதபோதும், நிறையச் சாப்பிட பிறகும் கால் தேக்கரண்டி மிளகுத் தூளை மோரில் கலந்து குடித்தால் உடன் ஜீரணமாகும். இல்லையெனில் வெல்லக்கட்டியில் ஆறு மிளகை வைத்து பொடித்து அந்தப் பொடியை தண்ணீருடன் சாப்பிடலாம்.
ஜலதோஷத்துடன் கூடிய காய்ச்சலுக்கு இதேபோல் ஆறு மிளகைத் தூள் செய்து தண்ணீருடன் சாப்பிடவும். இல்லையெனில் பாலில் மிளகுத்தூளைக் கொதிக்க வைத்து அருந்தலாம். தும்மல் மற்றும் சளியுடன் ஜலதோஷம் என்றால் இருபது கிராம் மிளகுத்தூளை பாலில் கொதிக்க வைத்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து தினம் ஒரு வேளை வீதம் மூன்று நாட்கள் மட்டும் சாப்பிடவும். இது ஒரு சூப்பர் நிவாரணி.
சோம்பலாகவும், மந்தமாகவும் இருப்பவர்களும், ஞாபக மறதிக் குழந்தைகளும் மற்ற வயதுக்காரர்களும் ஒரு தேக்கரண்டித் தேனில் ஒரு சிட்டிகை மிளகுத்தூளைக் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வரவும். சோம்பல் போயே போச்சு. மிளகில் உள்ள பாஸ்பரஸ் மூளையை விழிப்புடன் வைத்திருக்கும். உடம்புவலி, பற்சொத்தை உள்ளவர்களும், மிளகை தினசரி உணவில் சேர்ப்பது நல்லது.
ஆண்மைக் குறைபாடு உள்ளவர்களும், பெண்மைக் குறைபாடு உள்ளவர்களும் தினமும் நான்கு பாதாம் பருப்புகளுடன் ஆறு மிளகையும் தூளாக்கி பாலுடன் இரவில் அருந்தி வருவது நல்லது. குறைபாடுகள் குணமாகும். குழந்தையும் பிறக்கும்.
பற்சொத்தை, பல்வலி, பேசும் போது நாற்றம், பல் கூச்சம் உள்ளவர்கள் சில நாட்களுக்கு மிளகுத் தூளும் உப்பும் கலந்த பற்பொடியை வீட்டில் தயாரித்துப் பல்துலக்கி வரவும். மிளகு இரசமும், மிளகு சோந்த உணவு வகைகளும் ஆரோக்கியத்தைத் தருவதுடன் மூளையின் கூர்மையையும் அதிகரிக்கும் என்பது உறுதி.
திரிகடுகு எனப்படும் [சுக்கு மிளகு திப்பிலி]மருந்தை காலை, மாலை உணவுக்குப்பின் தேனில் 500 மி.கி அளவு சாப்பிட வயிற்றுநோய்களும் சுவாசம் சம்பந்தமான நோய்களும் அணுகாது. மிளகுடன் வெற்றிலை சேர்த்து லேசாக இடித்து நீரில் கொதிக்கவைத்து வடித்த குடிநீரை குடித்துவர மருந்துகளால், உணவுப்பண்டங்களால் ஏற்பட்ட நச்சுத்தன்மை நீங்கும்.
மிளகுத்தூள்+வெங்காயம்+உப்பு இவற்றை கலந்துஅரைத்து புழுவெட்டு[ALOPECIA] உள்ள இடத்தில் தொடர்ந்து பூசிவர முடிமுளைக்கும்.
பச்சை மிளகு கிடைக்கும் சீசனில், வாங்கி கெட்டித் தயிரில் உப்பு போட்டு ஊற வைத்து அப்படியே உபயோகிக்கலாம். அல்லது மோர் மிளகாய் போல் காயவைத்தும் தயிர் சாதத்திற்க்கு தொட்டுக் கொள்ளலாம். உடம்புக்கு மிகவும் நல்லது.](https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-ash4/379686_549318458494811_530608065_n.jpg)
![சீரகம்=சீர்+அகம்..!
"எட்டுத்திப்பிலி ஈரைந்து சீரகம்
கட்டுத்தேனில் கலந்துண்ண
விக்கலும் விட்டுப்போகுமே
விடாவிடில் நான் தேரனும் அல்லவே"
- ஆசான் தேரையர்
தமிழ்ச்சித்தர்கள் எதையும் காரணப் பெயர் கொண்டே அழைப்பர். சிலவற்றைச் சூட்சமப் பெயர் (அவர்களுக்கே விளங்கும் குறிச்சொல்/ மறைபொருள்/ பரிபாசை) கொண்டும் அழைப்பர். இங்கே அகத்தைச் சீர் செய்வதால் தமிழ்ச்சித்தர்களால் சீரகம் என அழைக்கப்பட்டது. அகத்தைச் சீர்செய்யும் சீரகம் (Cuminum cyminum) ஒரு மருத்துவ மூலிகையாகும்.
இந்தியாவில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது. உலகம் முழுவதும் முக்கியமாக அரேபியாவில் மசாலா பொருள்களில் இது நீண்ட காலமாக உபயோகிக்கப்படுகிறது. குமின் என்ற வார்த்தையே அராபிய வார்த்தையாக கூறப்படுகிறது. சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்து உபயோகிக்கப் பட்ட வரலாறு சான்று சிரியாவில் இருந்து கிடைத்துள்ளது.
தமிழர்கள் இதை நீண்ட நெடுங் காலமாக உபயோகித்து வந்தனர் என்பது தெரிகிறது. திருஅண்ணாமலையில் கிடைத்த ஒரு கல்வெட்டில் நெல்லுக்கு பதிலாக சீரகம் அடைக்காய் முதலிய வாங்கிய செய்தி கிடைத்துள்ளது .
எட்டுத்திப்பிலி ஈரைந்து சீரகம்
கட்டுத்தேனில் கலந்துண்ண
விக்கலும் விட்டுப்போகுமே
விடாவிடில் நான் தேரனும் அல்லவே
என தேரையர் என்ற சித்தர் சவால் விட்டுக் கூறுவதாக பாடல் ஒன்று உண்டு .
சீரகத்திலிருந்து 56% Hydrocarbons ,Terpene,Thymol போன்ற எண்ணெய்ப்பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இதில் Thymol –[anthelminticagaint in HOOK WORM infections,and also as an Antiseptic] வயிற்றுப்புழுக்களை அழிக்கவும், கிருமிநாசினியாகவும் பல மருந்துக்கம்பனிகளின் மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.
BOTONICAL NAME Cuminum Cyminum
FAMILY Apiaceae
சீரகத்திற்கு ஆங்கிலத்தில் ‘குமின்’ என்று பெயர். இந்தியில் ஜீரா, தெலுங்கில் ஜீலகாரா,
கன்னடத்தில் சீரகே, மராத்தியில் சிரே, குஜராத்தியில் ஜிரு, அசாமியில் கொத்த ஜீரா, ஒரியாவில் ஜிர்கா, காஷ்மீரியில் ஜையுர் என்று பெயர்.
சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.
திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.
அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.
மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.
சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.
சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச்செய்யும்.
உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.
சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும். ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும். சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.
சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு பங்கு வகிக்கிறது. செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து.
சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.
உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.
திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும்.
சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.
அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநிலை மனநோய் குணமாகும்.
சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.
ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.
பொதுவாக சீரகம்:
வெப்பமுண்டாக்கி stimulant
பசிதூண்டி stomachic
துவர்ப்பி astringent
வாய்வு அகற்றி carminative
மனித குலத்திற்கு நீண்ட காலமாக தெரிந்த ஒரு மூலிகை !
உணவை சுவையாக்கவும் செரிக்கவும் சீரிய ஒரு மூலிகை..!](https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-ash3/1535443_549314238495233_1413805981_n.jpg)

து வெண்கலப்பானையில் 1 டம்ளர் நீர்விட்டு வெல்லத்தைச் சீவிப் போடவும். வெல்லம் நன்கு கரைந்ததும் அதை மறுபடியும் வடிகட்டினால் அதிலுள்ள மண் நீங்கிவிடும். பிறகு அவ் வெல்லத் தண்ணீருடன் 1ரு டம்ளர் நீரைக் கூடுதலாகச் சேர்த்து அத்துடன் துருவிய தேங்காய், பொடித்த ஏலக்காய் சேர்த்து வெல்லவாசனை போக கொதிக்கவிடவும்.

அவரை, மொச்சை, தட்டைக்காய், புடலை, பீர்க்கு, பாகல், சேனைக் கிழங்கு சேர்த்து வேகவைத்து புளிவிட்டு கொதிக்கவிடவும். இதனுடன் பச்சை மிளகாய் 10 கீறிப்போட்டு உப்புப்போட்டு நன்கு புளி வாசனை போன உடன் பெருங்காயம் சேர்த்து அத்துடன் 1 அச்சு வெல்லத்தையும் சேர்ப்பார்கள். கூட்டு நீர்க்க இருந்தால் திருவாதிரைக் களிக்கு அரைத்த மாவில் 1 ஸ்பூன் எடுத்து நீரில் கலக்கி இதனுடன் சேர்ப்பார்கள். காய்கறிக் கூட்டு கெட்டியானதும் கீழே இறக்கி கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்ய வேண்டும்.



