Thursday 26 April 2018

சளி!!!

மழைக்கால சளி

உடல் குளிர்ச்சியாக இருப்பதால் உருவாகும் சளி பச்சை அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கும் சளியை மூக்கு வழியாக வெளியேற்ற முடியும்.

இதனால் உருவாகும் சளியை வெளியேற்ற வேண்டுமே தவிர எந்த வித ரசாயன மருந்துகளோ எடுத்துக் கொள்ளக்கூடாது.

இதற்கு இரண்டு மிளகு, நான்கு சீரகம் போட்டு தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். இந்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் சளி வெளியேறிவிடும்.

சளி பிடித்து விட்டால் இயற்கையான முறையில் அதை வெளியேற்ற வேண்டுமே தவிர, இராசயன மருந்துகளின் மூலம் அதை நம் உடலுக்குள்ளேயே வைக்ககூடாது!

×××××
கோடை சளி

உடல் சூடாக இருப்பதனால் உருவாகும் சளி, மூக்கு வழியாக வெளியேறாது, தொண்டைக்கும், மூக்குக்கும் இடையே இருக்கும், வறட்டு இருமல் இருக்கும், மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த சளியை வாய் வழியாகவே வெளியேற்ற வேண்டும்.

அப்போது தூதுவளை எடுத்துக் கொண்டால் உடல் சூடு அதிகமாகி வறட்டு இருமல் அதிகமாகுமே தவிர சளி குறையாது.

அந்த மாதிரியான நேரங்களில் நாட்டு மாதுளம் பழச்சாறு(மெல்லிய மஞ்சள் நிறத்தோலுடன் சேர்த்து) காலை 11 மணி மற்றும் மதியம் 3 மணியளவில் சாப்பிட வேண்டும்.

இதனுடன் நாட்டு சர்க்கரை, வெல்லம் கருப்பட்டி தேன் கலந்து குடிக்க வேண்டும்.

No comments: