Thursday 6 October 2016

Rasam(soup) for Fever!!!

ஜுரம் வந்தவங்க சீக்கிரம் தேற, இந்த ரசத்தை வச்சுக் கொடுங்க!!!

‘மூலிகை மூதாட்டி’ கல்யாணி சுவாமி

ஊ ரெல்லாம் டைபாய்டு, காலரா, சிக்குன் குனியானு ஒரே ஜுரமா இருக்கில்லையா? பொதுவா டைபாய்டு ஜுரம் வந்தவங்க நோய் நீங்கி, நார்மல் நிலைக்கு வந்தப்புறமும் கொஞ்சம் பலவீனமாவே இருப்பாங்க. அப்படி நோய்லருந்து எழுந்தவங்க சீக்கிரம் தேற, நான் சொல்ற ரசத்தை வச்சுக் கொடுங்க.

அரை டம்ளர் பயத்தம்பருப்பை குழைய வேக வச்சுக்கோங்க! நாட்டுத் தக்காளி ரெண்டை முழுசா வேக வெச்சு, தோலுரிச்சு, மிக்ஸியில அரைச்சு பயத்தம் பருப்போட சேருங்க. தாராளமா பெருங்காயப் பொடி தூவுங்க. இதுல, ஒரு அங்குல நீள இஞ்சித் துண்டை தோல் நீக்கி, பொடியா நறுக்கி சேருங்க. ஒரு டேபிள் ஸ்பூன் சீரகத்தை வெறும் வாணலியில வறுத்து, பொடிச்சுப் போடுங்க. அப்புறம் கொஞ்சமா தண்ணி விட்டு, விளாவி, இதை அடுப்புல வெச்சு சூடு பண்ணுங்க. ருசிக்கு தகுந்த மாதிரி உப்பு போட்டுக்குங்க. ரசம் ஒரு கொதி வந்ததும், கால் டம்ளர் தண்ணி விட்டு விளாவி இறக்கிடுங்க. புளிப்புக்கு ஏத்த மாதிரி எலுமிச்சைச் சாறு ஊத்துங்க. ஒரு டீஸ்பூன் நெய்யில சீரகம் தாளிச்சு கொட்டுங்க.

நல்லா குழைய வடிச்ச சாதத்துல, இந்த ரசத்தை தாராளமா ஊத்தி, கரைச்ச மாதிரி குடிச்சா.. ரெண்டாம் நாளே உடம்புல தெம்பு ஊறி கும்முனு எழுந்து உக்காந்துடுவாங்க. அப்புறம் ஒரு வாரத்துக்கு இதே மாதிரி ரசம் பண்ணி, கூடுதலா அரை டீஸ்பூன் மிளகும் பொடிச்சுப் போட்டு சாப்பிடக் கொடுங்க. வாய்க்கு ருசி... உடம்புக்கும் பலம்!