Thursday 6 October 2016

ரைஸ் குக்கர் ரெசிப்பிக்கள்!!!

வெல்லம் ஸ்லைஸ்
தேவையானவை:
புழுங்கலரிசி – ஒருகப்
வெல்லம் – முக்கால்கப்
தேங்காய்த்துருவல் – அரைகப்
நெய் – தேவையானஅளவு
unnamed
செய்முறை:
வெல்லத்தை ஒரு கப் தண்ணீரில் ஊறவைத்து மண்ணில்லாமல் கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். புழுங்கலரிசியை 4 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய அரிசியை மிக்ஸியில் சேர்த்து, வடிகட்டிய வெல்லத் தண்ணீரை சிறிது சிறிதாக விட்டு அரிசியை நைசாக அரைக்கவும். கடைசியில் துருவிய தேங்காய் சேர்த்து ஒரு சுழற்று சுழற்றி அரைத்து, நெய் தடவிய தட்டிலோ அல்லது கிண்ணத்திலோ எடுத்து வைக்கவும். எலெக்ட்ரிக் ரைஸ்குக்கர் பேனில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி, மாவு கிண்ணத்தை வைத்து வேக வைக்கவும். குக்கர் கீப்வார்ம் மோடுக்கு வந்ததும் சிறிது நேரம் கழித்து கிண்ணத்தை வெளியே எடுத்து ஆறியதும் சிறிய துண்டுகளாக்கிப் பரிமாறவும்.
முதியா
தேவையானவை :
கடலைமாவு – ஒன்றரைகப்
கோதுமைமாவு – 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – ஒன்றரைடேபிள்ஸ்பூன்
எலுமிச்சைப்பழம் – ஒன்று (சாறுஎடுத்துக்கொள்ளவும்)
நறுக்கியபச்சைமிளகாய் – 2
நறுக்கிய இஞ்சி – சிறிதளவு
மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒருடீஸ்பூன்
சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
வெல்லம் பொடித்தது – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையானஅளவு
ஆப்பசோடா – கால்டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை அல்லது வேகவைத்த கோஸ்/ வெந்தயக்கீரை – சிறிதளவு
தாளிக்க:
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
கடுகு – ஒருடீஸ்பூன்
சீரகம் – ஒருடீஸ்பூன்
வெள்ளைஎள் – ஒருடீஸ்பூன்
unnamed (1)
செய்முறை:
தாளிக்கக் கொடுத்த பொருட்கள் தவிர மேலே கொடுக்கப்பட்டுள்ள தேவையான பொருட்கள் எல்லாவற்றையும் ஒரு பவுலில் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து சிறுசிறுகொழுக்கட்டைகளாகப் பிடித்து வைக்கவும். இது தான் முதியா. எலெக்ட்ரிக் ரைஸ் குக்கரின் உள்ளே ஒரு கப் தண்ணீரை ஊற்றவும். இனி குக்கரின் உள்ளே பொருந்தக்கூடிய தட்டு ஒன்றில் எண்ணெய் தடவி வைக்கவும். பிடித்த வைத்துள்ள கொழுக்கட்டைகளைத் தட்டில் வைத்து அடுக்கவும். குக்கரை மூடி குக்மோடில் வைக்கவும். முதியா வெந்ததும், குக்கர் கீப்வார்ம் மோடுக்கு வந்து விடும். இனி, குக்கரை திறந்து முதியாவை எடுத்து ஆறியதும் சிறு சிறு ஸ்லைஸ்களாக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, சீரகம், வெள்ளை எள் சேர்த்துத் தாளித்து அதில் ஸ்லைஸ்களாக்கிய முதியாவைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். இதை டீ, காபியுடன் சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.
பிஸிபேளாபாத்
தேவையானவை :
அரிசி – ஒருகப்
துவரம்பருப்பு – அரைகப்
தண்ணீர் – ஆறரைகப்
புளி – ஒருஎலுமிச்சைஅளவு
சின்னவெங்காயம் – அரைகப்
துருவியதேங்காய்- 4 டேபிள் ஸ்பூன்
காய்ந்தமிளகாய் – 6
மல்லி (தனியா) – 2 டீஸ்பூன்
மிளகு – கால்டீஸ்பூன்
பட்டை – 2 துண்டு
மராட்டிமொக்குஅல்லதுலவங்கம் – 2
உளுத்தம்பருப்பு – ஒருடீஸ்பூன்
கடலைப்பருப்பு – ஒருடீஸ்பூன்
பெருங்காயம் – சிறிதளவு
மஞ்சள்தூள் – அரைடீஸ்பூன்
நெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையானஅளவு
தாளிக்க:
நெய்அல்லதுஎண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்
கடுகு – ஒருடீஸ்பூன்
கறிவேப்பிலை – 2 ஈர்க்கு
unnamed (2)
செய்முறை:
குக்கர் பேனை தட்டுடன் எடுத்துக் கொள்ளவும். துவரம்பருப்பு, மஞ்சள்தூள், ஒரு டீஸ்பூன் நெய், தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து மூடி குக்மோடில் வைத்து வேகவிடவும். அரைகப் தண்ணீரில் புளியைக் கரைத்துக்கொள்ளவும். சிறிதளவு எண்ணெயில் வெங்காயம், காய்ந்தமிளகாய், மல்லி (தனியா), மிளகு, பட்டை, மராட்டிமொக்கு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம் என ஒவ்வொன்றாக வறுத்துஎடுக்கவும். துருவிய தேங்காயை கடைசியாக வறுத்தெடுக்கவும். வறுத்த அனைத்து சாமான்களையும் மிக்ஸியில் பொடிக்கவும். பருப்பு பாதி வெந்ததும் அரிசி மற்றும் அரைத்த மசாலா பவுடர் சேர்த்து மூடி சமைக்கவும். சாதம் வெந்ததும் புளிச்சாறு சேர்த்துத் தாளிக்கத் தேவையானவற்றைத் தாளித்துச் சேர்க்கவும். சாதம் வெந்ததும் கீப்வாம்மோடுக்கு குக்கர் வந்துவிடும். தேவையானால் 2 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.
மோட்சாபுட்டிங்
தேவையானவை:
வெனிலாகேக்தூள் – ஒருகப்
பால் – ஒன்றரைகப்
கோகோபவுடர்- ஒருடீஸ்பூன்
இன்ஸ்டன்ட்காபிபவுடர் – ஒருடீஸ்பூன்
வெனிலாஎசென்ஸ் – ஒருடீஸ்பூன்
முட்டை – 2 அல்லது 3
சர்க்கரை – 1/3 கப்
அலுமினியம்ஃபாயில்பேப்பர் – ஒன்று
டூட்டிஃப்ரூட்டி – சிறிதளவு
வெண்ணெய் – தேவையானஅளவு
unnamed (3)
செய்முறை:
பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். அதில் கோகோ பவுடரையும், காபி பவுடரையும் சேர்த்துக் கரைக்கவும். இரண்டும் பாலோடு நன்கு கலந்ததும், சர்க்கரையை இத்துடன் சேர்த்துக் கலக்கவும். சர்க்கரை நன்கு கரைந்ததும் அடுப்பை அணைத்து பாலைஆறவிடவும். ஆறியதும் கேக்தூள், நன்கு அடித்த முட்டை, வெனிலா எசென்ஸ் சேர்த்து 15 நிமிடங்கள் நன்கு கலக்கவும். இக்கலவையை வெண்ணெய் தடவிய மோல்டில் ஊற்றி, அலுமினியம் ஃபாயில் பேப்பரால் விடவும். குக்கரில் மூன்று கப் தண்ணீர் விட்டு கொதித்ததும் புட்டிங்கை, இதில் வைத்து வேகவிடவும். குக்கர்தானாக கீப்வார்முக்கு வந்தவுடன் எடுத்துப் பரிமாறவும். மேலே டூட்டிஃப்ரூட்டியால் அலங்கரித்துப்பரிமாறவும்.
கத்திரிக்காய்ஸ்டஃப்
தேவையானவை:
கத்திரிக்காய் – 500 கிராம்
பொடியாகநறுக்கியவெங்காயம் – 4
துருவியதேங்காய் – 4 டேபிள்ஸ்பூன்
வறுத்தவேர்க்கடலை – 2 டேபிள்ஸ்பூன் (கரகரப்பாகப்பொடித்தது)
மிளகாய்த்தூள் – ஒருடீஸ்பூன்
மஞ்சள்தூள் – அரைடீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒருடீஸ்பூன்
சீரகத்தூள் – அரைடீஸ்பூன்
பெருங்காயத்தூள் – கால்டீஸ்பூன்
கரம்மசாலாத்தூள் – ஒருடீஸ்பூன்
வெல்லம்பொடித்தது – ஒருடேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையானஅளவு
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் – அரைகப்
அலுமினியம்ஃபாயில்பேப்பர் – ஒன்று
unnamed (4)
செய்முறை:
கத்திரிக்காய்களைக் கழுவி த்தியால் காம்பின் அடிப்பகுதிவரை நான்காக நன்கு கீறிவிடவும். அலுமினியம் ஃபாயில்பேப்பர்,  எண்ணெய் தவிர்த்து தேவையானவற்றில் உள்ள எல்லா பொருட்களையும் கலந்து கத்திரிக்காயினுள் அடைக்கவும். குக்கர் பேனின் உள்ளே அலுமினியம் ஃபாயில்பேப்பரை விரித்துவைக்கவும். இனி ஸ்டஃப்டுகத்திரிக்காய்க் கலவையை இதில் வைத்து மேலே எண்ணெய் ஊற்றி, அதன் மேல் தண்ணீர் தெளித்து மற்றொரு ஃபாயில் பேப்பரால் மூடி குக்கரை குக்மோடில் வைக்கவும். கத்திரிக்காய் தயாரானதும் குக்கர் கீப்்வாம்மோடுக்கு வந்துவிடும் எடுத்துப் பரிமாறவும்.
குறிப்பு:
பேனில் தண்ணீர் ஊற்றவேண்டாம். கத்திரிக்காயில் இருக்கும் தண்ணீரே போதுமானது.