வேலை விஷயமாகவோ - சுற்றுலாகவோ நாம் வட மாநிலங்களுக்கு செல்கையில் இந்திமொழியை கொஞ்சமாவது அறிந்துகொள்வது அவசியம்.சின்ன சின்ன ஆங்கில வார்த்தைக்கு ஏற்ற இந்தி வார்த்தைகளை இந்த சின்ன சாப்ட்வேர் மூலம் அறிந்துகொள்ளலாம்.5 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும். இதனை கிளிக் செய்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் கொடுக்கப்பட்டுள்ள Type English word here என்கின்ற கட்டத்தில் நீங்கள்அறிந்துகொள்ள விரும்பும் ஆங்கில வார்தையை தட்டச்சு செய்யவும்.
Meaning in Hindi என்கின்ற கட்டத்தில் உங்களுடைய வார்த்தைக்கு ஏற்ப இந்தி வார்த்தை தெரியவரும்.சில மாதிரி வார்த்தைகள் கீழே:-
இந்தி வார்த்தையை எழுத்துக்கூட்டி படிக்க தெரிந்தால் போதும் ஒவ்வொரு புதுபுதுவார்த்தைகளை நாம் அறிந்துகொள்ளலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.


