Monday 10 June 2013

மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி!!!


Enlarge this image



இந்தியாவில் மொபைல் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் இருக்கும்
ஒரு பிரச்சினை தேவை இல்லாத Service - களை மொபைல் நிறுவனங்கள் Activate செய்து பணம் பறிப்பது. பேங்க் கொள்ளைகளை விட, இதில் தான் நிறைய பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கும். இந்த பிரச்சினையில் இருந்து எளிதாக தப்பிக்கும் வழியை பார்ப்போம்.

இப்படி நமக்கு Activate
செய்யப்படும் சர்வீஸ்களுக்கு VAS (Value Added Services) என்று பெயர்.
Dialer Tune/Caller Tune, Wallpaper, SMS (Joke, Devotional மற்றும் பல) மற்றும் பல இதில் வரும். இம்மாதிரி பிரச்சினை எந்த நெட்வொர்க்கில் வந்தாலும் நீங்கள் 155223 என்ற
அலைபேசி எண்ணுக்கு அழைத்தால் நீங்கள் எந்த Service Activate செய்து உள்ளீர்களோ அதை Cancel
செய்து விடலாம். இதை அழைக்க கட்டணம் எதுவும் கிடையாது. தவறுதலாக எடுக்கப்பட்டிருந்து நீங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு கொண்டு Complaint செய்தால் உங்கள் பணம் திரும்ப கொடுக்கப்பட்டு விடும். 24 மணி நேரத்திற்கு பின் நீங்கள் Call செய்தால் சர்வீஸ் மட்டும் கான்சல் செய்யப்படும்.
நீங்களாக Activate செய்த
சர்வீஸ்களையும் இதில் Deactivate செய்யலாம். அநேகமாக அனைத்து நிறுவனங்களும்
தற்போது இதை கொண்டு வந்துவிட்டன.

உங்கள் நெட்வொர்க்குக்கும்
இது வந்து விட்டதா என்று அழைத்து பாருங்கள்.உங்கள் பதிலை இங்கே பதியுங்கள்...

அழைக்க வேண்டிய எண் - 155223

plz Tag youself to help your friends to know this service.

தங்களது நண்பர்களுக்கும் இதை தெரிவிக்க தங்களை Tag செய்து கொள்ளுங்கள்..இவர்களின் கொள்ளையை தடுத்து நிறுத்துங்கள்...

No comments: