Monday, 16 November 2015

9 Web Applications!!!

அறிந்து இருக்கவேண்டிய ஒனபது தளங்கள் (Web Applications) களை கீழே பார்ப்போம். 1 . Save paper & ink printing only what you want «
 நீங்கள் சில வலைப்பக்கங்களை பிரிண்ட் எடுக்க வேண்டி வரும். அப்படியான சந்தர்ப்பங்களில் உங்களுக்கு தேவையான விடயங்கள் மட்டு மன்றி உங்களுக்கு தேவையற்ற அப்பக்கத்தில் உள்ள விளம்பரங்கள், வெற்று இடம் என்பனவும் பிரிண்ட் ஆகும்.ஆனால் சில செக்கன் களில் உங்களுக்கு வேண்டியதை மட்டும் பிரிண்ட் பண்ணி எடுத்துக் கொள்ள ஏற்றவாறு அந்த பக்கத்தை மாற்றி உங்களுக்கு இந்த தளம் உதவி செய்யும். 2 . The Free Reminder Service | Alertful  உங்களுக்கு வேண்டிய ஒன்றை நினைவூட்ட வேண்டுமா?உதாரணமாக ஒருவரின் பிறந்த நாள்.நீங்கள் செய்ய வேண்டியது இது தான். இந்த தளத்துக்கு சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் உங்களுக்கு நினைப்பூட்ட வேண்டிய விபரத்தையும் வழங்கினீர்கள் என்றால் அது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு எப்போது உங்களுக்கு நினைப்பூட்ட வேண்டுமோ அந்த நேரம் நினைவூட்டலை வழங்கும் 3 . http://www.pdfunlock.com  சில PDF files களை நீங்கள் பார்த்தால் சில கட்டுப்பாடுகள் கொண்டதாக இருக்கும்.உதாரணமாக கொப்பி, பிரிண்ட், எடிட் பண்ண முடியாதிருக்கும் .கவலையை விடுங்கள் இந்த தளத்துக்கு சென்று குறித்த PDF file ஐ கொடுத்தால் எல்லா கட்டுப்பாடுகளையும் உடைத்து உங்களுக்கு விரும் பியவாறு அதாவது உங்கள் கோப்பு போன்று எப்படி வேண்டுமானாலும் மாற்றி கொள்ளலாம். 4 . http://www.daileez.com  இது ஒரு நினைவுக்குறிப்பு போன்றது.அதாவது இன்றைய நாள் முடிவில் நீங்கள் செய்ததை டயரி இல் எழுதுவீர்கள். அதை ஒரு ஒரு சின்னமாக அதாவது Icon ஆக காட்டினால் எப்படி இருக்கும். இத்தளம் மூலம் அதை நீங்கள் செய்து கொள்ள முடியும்.உங்கள் செயலை நீங்கள் எழுத நினைப் பதை காட்டக்கூடிய அந்த Icon இக்கு விரும்பினால் ஒரு சிறிய விளக் கத்தையும் சேர்த்துக்கொள்ள முடியும் 5 . Is it raining in your city?  இந்த கணம் ஒரு குறிப்பிட்ட நகரம்(பெரிய) ஒன்றில் மழை பெய்கிறதா என நீங்கள் கண்டு பிடிக்க வேண்டுமா.இந்த தளத்துக்கு சென்று அந்நகரத்தின் பெயரை வழங்கினால் நீங்கள் அறிந்து கொள்ளலாம். அதுமட்டுமல்ல நீங்கள் வழங்கிய நகரத்தின் இக்கண weather conditions களையும் அறிந்து கொள்ள முடியும். இந்த தளம் உலக வானிலை அறிக்கையே உங்கள் காலடியில் கொண்டு வந்து சேர்க்கும். 6 . Learn to Type | Free Typing Tutor | Typing Lessons  இது ஒரு ஆன்லைன் தட்டச்சு பயிற்சி வழங்கும் இலவச தளமாகும். பலவகை திறன் மட்டங்களை கொண்டவர்களுக்கும் வெவ்வேறு மட்டங் களில் பயற்சி வழங்கக்கூடிய தளமாக இது அமைந்தது உள்ளது.இன்றைய யுகத்தில் விரைவான டைப்பிங் திறமையும் பல வேலைவாய்ப்புகளை தீர்மானிக்கும் ஒரு தகுதியாக இருப்பதால் இத்தளம் நிச்சயம் அப்படிபட்ட வர்களுக்கு ஒரு நல்ல ஒரு வாய்ப்பாக அமைகிறது. 7 . Gedoo  இந்த தளம் ஒரு தேடல் தளமாக அதாவது கூகுல் போன்று உங்களுக்கு விரும்பிய ஒன்றை பற்றி தேடு தளமாக உள்ளது.நீங்கள் ஒன்றை பற்றி தேடினால் அது தானாக கூகுல் இல்ருந்து தேடி தரும். ஆனால் நிங்கள் 4300 தேடு தளங்களில் ஒன்றை தெரிவு செய்து அதிலிருந்து தேடி தருமாறு செய்யலாம்.இந்த தளம் 4300 தேடு தளங்களில் உங்களுக்கு பிடித்ததில் தேடி தரும். அதவாது புரோக்கர் போல.ஹிஹிஹி 8 . Create professional resumes online for free - CV Maker  வேலை ஒன்றுக்கு அப்ளை பண்ணும் பொது தரமான Cv ஒன்றை ரெடி பண்ணுவது மிக முக்கியம்.எல்லா தகவல்கள் தகமைகள் இருந்தும் அதை எப்படி வடிவமைப்பது என மூளையை கசக்கி பிழிந்து கொண்டு இருப் பீர்கள்.இக்கவலை போக்க இத்தளம் உதவி செய்கிறது.சில நிமிடங்களில் ஒரு அழகான professional ஆன Cv ஐ ரெடி பண்ணி கையில் தரும். 9 . Zoom.it  இணையதளங்களில் உள்ள சில படங்கள் குறிப்பாக google search படங்களின் URL இனை இந்த தளத்துக்கு வழங்கினால் நீங்கள் வழங்கிய படத்தை மிக மிக தரமான ஒரு படமாக மாற்றி தரும்.அது மட்டுமல்ல மாற்றப்பட்ட படத்துக்குரிய ஒரு url முகவரியையும் தரும் . நீங்கள் அதை பயன்படுத்தி கொள்ள முடியும். எனவே ஒரு சாதாரணமான படத்தை மாறுப்பட்ட ஒரு அனுபவத்தை தரும் படமாக மாற்றும்.

சூப்பர் குறிப்புகள்

சூப்பர் சமையல் குறிப்புகள்!!! ஜவ்வரிசியை சிறிது நேரம் ஊற வைத்து, அடை மாவுடன் சேர்த்து வார்த்தால், வித்தியாசமான ருசியோடு, மொறுமொறுப்பாகவும் இருக்கும். மாவைப் பிசைந்து, நீண்ட நேரம் கழித்து பூரி பொரித்தால் எண்ணெயை அதிகமாக உறிஞ்சும். பிசைந்த சிறிது நேரத்திலேயே பொரித்தால் எண்ணெய் மிச்சமாகும். புட்டு செய்ய மாவு பிசையும்போது, சிறிது பீட்ரூட் அல்லது கேரட் துருவிச் சேர்த்தால் சுவை கூடும். உடம்புக்கும் நல்லது. இட்லி மாவு புளித்து விட்டதா... குறைவாக இருக்கிறதா? இரண்டு பிடி வடித்த சாதத்துடன் பால் சேர்த்து மிக்ஸியில் மசிக்கவும். அதை இட்லி மாவில் கலந்து மிதமான தீயில் தோசையாக வார்க்கவும். பேப்பர் ரோஸ்ட் போலவே பிரமாதமாக இருக்கும். டிபன் செய்ய அவசரத்துக்கு ஒன்றும் இல்லையா? கஞ்சி மாவில் (ராகி, பொட்டுக்கடலை, கோதுமை, புழுங்கல் அரிசி, ஜவ்வரிசி அனைத்தும் வறுத்து அரைத்தது) சிறிது அரிசி மாவைக் கலக்கவும். அதில் தேவையான வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கிப் போடவும். கடுகு, சீரகம் தாளித்து தோசை வார்க்கவும். பட்டுப் போல இருக்கும் தோசை! குருமா செய்யும்போது, தேங்காயு டன் ஒரு கரண்டி பொரி அரிசி, வெங்காயம், கொத்தமல்லி சேர்த்து அரைத்தால் புதுச்சுவை கிடைக்கும். ஒரு டீஸ்பூன் நெய்யை சூடுபடுத்தி, அதில் கைப்பிடி முருங்கை இலை போட்டு வறுக்கவும். மொறுமொறுப்பானவுடன் அதைக் கையால் நொறுக்கி, தோசை மாவில் கலக்கவும். தோசையாக வார்க்கவும். குட்டீஸுக்கு பிடிக்கும் இந்தச் சுவை! இட்லி மிளகாய்ப்பொடியுடன் சிறிது வெங்காயம் வெட்டிப் போட்டு அரைத்தெடுத்தால் திடீர் வெங்காயச் சட்னி தயார்! தேங்காய் சட்னிக்கு அரைக்கும்போது, பச்சை மிளகாயை சிறிது எண்ணெயில் வதக்கிச் சேர்த்து அரைக்கவும். சிறிதளவு இஞ்சி, அரை டீஸ்பூன் சர்க்கரையை சேர்த்து அரைக்கவும். சுவை கூடும். பாதி வெங்காயத்தை எண்ணெயில் தோய்த்து, அதை தோசைக்கல்லில் தேய்த்த பின் தோசை வார்த்தால் விண்டு விடாமல் இருக்கும். வெங்காய மணம் கமகமக்கும். கொழுக்கட்டைக்கு மாவு பிசையும்போது, நீருடன் சரி பாதி பால் ஊற்றினால் சுவையாக இருக்கும். கொழுக்கட்டை பார்ப்பதற்கு வெண்மையாகவும் இருக்கும். சப்பாத்தி மாவு பிசையும் போது, கால் டம்ளர் பால் விட்டுப் பிசையவும். ஒரு துளி கூட எண்ணெய் விடாமலே ‘புஸ்’ என்று மிருதுவான சப்பாத்தி கிடைக்கும். நல்லெண்ணெய் கலந்து ஊற்றி தோசை வார்த்தால் கல்லில் ஒட்டாது. கொஞ்சமாக எண்ணெய் ஊற்றினாலும் நிறைய ஊற்றியது மாதிரி இருக்கும். உளுந்து வடை மாவு நெகிழ்ந்து விட்டால், அரிசி மாவு சேர்க்க வேண்டாம். ஒரு பிடி மெது அவலை கலந்து தட்டவும். தட்டுவதற்கு லகுவாகவும் மிருதுத்தன்மை குறையாமலும் இருக்கும். பூரி மசாலா செய்யப் போகிறீர்களா? வெந்த உருளைக்கிழங்கை மாவாக்கிச் சேர்க்கும் போது, பொட்டுக்கடலை மாவு அல்லது கடலை மாவைக் கரைத்து ஊற்றினால் மசாலாவுடன் சேர்ந்து சுவையாக இருக்கும்.

Wednesday, 4 November 2015

English Grammar Thru Tamil!!!

ஆங்கில இலக்கணத்தை நாம் தமிழ் மூலம் எளிதில் அறிந்து கொள்ள இந்த தளம் நமக்கு உதவுகின்றது. இந்த தளம் காண இங்கு கிளிக் செய்யவும்.இந்த தளம் கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 

http://www.tamildiction.org/


இதில் உள்ள Tences Dictionary கிளிக் செய்து Verb -ஐ தட்டச்சு செய்யவும். உங்களுக்கு உங்களுடைய Verb ஆனது Simple Tense, Continuous Tense,Perfect Tense.Perfect Continuous Tense என 12 மில்லியன் வார்த்தைகள் தொகுத்துள்ளார்கள். 


அடுத்து Principal Part of Verbs  கிளிக் செய்ய verb வகைகளை பட்டியலிட்டுள்ளார்கள். 


அடுத்துள்ள Simple Sentences கிளிக் செய்ய சுமார் 5 ஆயிரம் வார்த்தைகளுக்கு தமிழ் ஆங்கில விளக்கம் கொடுத்துள்ளார்கள்.. 

அடுத்துள்ள Proverb கிளிக் செய்ய சுமார் 300 பழமொழிகள் தமிழ் -மற்றும் ஆங்கிலத்தில் கொடுத்துள்ளார்கள்.இதில் உள்ள சர்ச் பாக்ஸில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து  அதற்கான பழமொழியை தமிழில் அறியலாம். தமிழில் தட்டச்சு செய்து அதற்கான பழமொழியை ஆங்கிலத்தில் அறியலாம். மொத்தத்தில் ஆங்கிலம் பயில விரும்புவோர்களுக்கு இந்த தளம் பயனுள்ளதாக இருக்கும். பயன்படுத்திப்பாருங்கள்.