Monday 9 March 2020

உணவு, தண்ணீர் எதுவும் இல்லாமல் நம்மாலும் இருக்க முடியுமா?!!!

சித்தர்கள் உணவு, தண்ணீர் எதுவும் இல்லாமல் பல நாட்கள் இருப்பது போல நம்மாலும் இருக்க முடியுமா? அதற்கு என்ன வழி? என்று யோசித்து தேட ஆரம்பித்தேன்.  அப்போது தற்செயலாக ஒரு வயதான சித்த வைத்தியரை சந்தித்தேன்

நான் சந்தித்த அந்த வைத்தியர் முதியவராக இருந்தாலும் பல முற்போக்கான கருத்துக்களை கொண்டவராக இருந்தார். அவர் பசிதாகம் இல்லாமல் பல மணிநேரம் நம்மாலும் இருக்க முடியும் என்று கூறி ஒரு மூலிகை முறையை எனக்கு சொன்னார்.

குளத்து தாமரையை பற்றி கேள்விபட்டிருக்கிறோம். கல் தாமரை என்று ஒன்று இருக்கிறது என்ற சங்கதி நம்மில் பலருக்கும் தெரியாது. எனக்கும் கூட அப்போது நிலைமை அப்படிதான். 

அந்த கல்தாமரையை கொண்டு வந்து சுத்தமான தண்ணீரில் பனிரெண்டு மணிநேரம் ஊறவைத்து குடித்துவிட்டால் அடுத்த பனிரெண்டு மணிநேரத்திற்கு பசியே எடுக்காது. தாகம் வராது. உடலில் சோர்வு என்பதே தெரியாது என்று சொன்னார். 

அதே நேரம் ஒருமணிநேரம் ஊற வைத்தால் ஒருமணி நேரம் பசிக்காது. இரண்டுமணி நேரம் வைத்தால் அந்த மணிநேரம் வரை பசி எடுக்காது. நீ எவ்வளவு நேரம் ஊற வைக்கிறாயோ அவ்வளவு நேரம் அது வீரியத்தை காட்டும் என்றார். 

கல் தாமரை எங்கே கிடைக்கும் என்று அவரிடம் கேட்டேன். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும் என்று சொன்னார்.

உடனேயே என் பரிசோதனையை ஆரம்பித்து விட்டேன். நாட்டுமருந்து கடையில் கல்தாமரையை வாங்கினேன். தாமரை என்றவுடன் அது பூவை போல இருக்கும். ஒருவேளை பதப்படுத்தி சருகு போல இருக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் 

இந்த கல்தாமரை காய்ந்து போன பாசிபோல் இருந்தது. அதை தண்ணீரில் போட்ட பத்தாவது நிமிடம் புத்தம் புதிதாக விரிந்து விட்டது. மலர்ச்சியாகவும் இருந்தது. பத்துமணி நேரம் ஊறவைத்து அதிகாலை நேரத்தில் குடித்து விட்டேன். 

உண்மையில் அன்றைய  பகல் முழுவதும் எனக்கு பசி இல்லை. அதே நேரம் சாப்பிடாமல் இருக்கிறோமே என்ற எண்ணமும் இல்லை. சோர்வும் இல்லை. தாகமும் இல்லை. உண்மையில் அசந்து போய்விட்டேன்...

தொடர்ந்து பலமணிநேரம்
தவம் செய்ய விருப்பம் உள்ளவர்கள்... இந்த கல்தாமரையை பயன்படுத்தலாம்....தொடர்ந்து தரத்தில் அமரும் பட்சத்தில் உடல் சூடாவதும் கால்கள் சூகை பிடிப்பதும் இயற்கை..

இந்த கல்தாமரையை பயனபடுத்தும் போது உடல் சூடாவதில்லை...கால்கள் சூகை பிடிப்பதில்லை...
தியானம் செய்ய அருமையான மூலிகை இந்த கல்தாமரை.....

சித்தர்களின் அருளால்
(சிவசம்போ)

No comments: