Sunday 15 December 2019

Navarathri Prasadam!!!

*🕉நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் எந்தெந்த பிரசாதம் செய்ய வேண்டும்? அதனால் உண்டாகும் பலன்கள் என்ன தெரியுமா?* ☘🌻☘🌻☘🌻☘🔔🔔🔔🔔🔔🔔🔔 நவராத்திரி பண்டிகை 9 நாட்களும் ஒவ்வொரு விதமான பிரசாதங்களை வைத்து படைக்க வேண்டும். நவக்கிரக பலன்களைக் கருதி, அந்தந்த கிழமைக்கேற்ப நவதானியங்களில் ஏதேனும் ஒன்றைச் சுண்டலாகச் செய்து, வெற்றிலை பாக்குடன் விநியோகிப்பது நல்லது. *முதல் நாள்:* வெண்பொங்கல், மொச்சை சுண்டல் பிரசாதமாகக் கொடு ப்பது உகந்தது. இதன்மூலம் வறுமை நீங்கி, வளம் பெருகும். ஆயுள் விருத்தி உண்டாகும். *இரண்டாம் நாள்:* புளியோதரை, வேர்க்கடலை சுண்டல் பிரசாதமாகக் கொடுக்கலாம். இதன்மூலம் நோய்கள் நீங்கும். உள்ளத்தில் அமைதி கிடைக்கும். *மூன்றாம் நாள்:* கோதுமை சர்க்கரைப் பொங்கல், காராமணி சுண்டல். இதனால் தானிய விருத்தி உண்டாகும். வாழ்வு சிறப்படையும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். *நான்காம் நாள்:* பலவிதக் காய்களும், பருப்பும் கலந்த கதம்ப சாதம், பட்டாணி சுண்டல் பிரசாதமாக கொடுக்கலாம். இதனால் பகை விலகும். எதிர்ப்புகள் அகலும். இன்னல்கள் தீர்ந்து இன்பம் சேரும். *ஐந்தாம் நாள்:* தயிர் சாதம், பூம்பருப்பு சுண்டல் பிரசாதமாக கொடுக்கலாம். இதன் மூலம் விரும்பிய செல்வங்களைப் பெறலாம். *ஆறாம் நாள்:* தேங்காய் சாதம், பச்சைபயறு சுண்டல் பிரசாதமாக வழங்குவது சிறந்தது. இதனால் கவலைகள் நீங்கி தனம் பெருகும். எதிர்ப்புகள் விலகும். *ஏழாம் நாள்:* எலுமிச்சை சாதம், கொண்டைக்கடலை சுண்டல் பிரசாத மாக அளிக்கிறோம். இதனால் கல்வி வளர்ச்சியும், ஞான விருத்தியும் உண்டாகும். *எட்டாம் நாள்:* பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்த பருப்பு பாயசத்தை, வடையுடன் நிவேதனம் செய்ய வேண்டும். கேட்கும் வரங்கள் எளிதில் கிடைத்து நலம் பெறலாம். *ஒன்பதாம் நாள்:* சர்க்கரைப் பொங்கலில் நெய் அதிகம் சேர்த்த அக்கார வடிசல், வேர்க்கடலை சுண்டல் நிவேதனம் செய்யலாம். இதனால் குழந்தை வரம் பெறலாம். *பத்தாம் நாள்:* விஜயதசமி, மூன்று சக்திகளும் தீய சக்தியை அழித்து, வெற்றி கொண்ட அனைவருக்கும் நன்மைகளை அள்ளித்தந்து அருள்பாலிக்கும் சுபநாள். அன்று தொடங்கும் எல்லாக் காரியங்களும் வெற்றி மீது வெற்றி பெறும். பால் பாயாசம், காராமணி சுண்டல் மற்றும் இனிப்பு வகைகளை நைவேத்தியம் செய்யலாம். 🌷🍁🌷🍁🌷🍁🌷 🌸💐🌸💐🌸💐🌸

No comments: