Wednesday 17 July 2019

ஓமக்கஷாயம்!!!

ஓமம் கசாயம்

நுரையீரல் மண்டல  பிரச்சினைகள் அடிக்கடி ஏற்படும் சளி இருமல் தும்மல் காய்ச்சல் மூச்சு விடுவதில் ஏற்படும் சிரமம் குழந்தைகளின் தூக்கமின்மையால் மனதில் ஏற்படும் பிரச்சினைகளையும் தீர்க்கும் அழகான அரு மருந்து இந்த ஓமக் கசாயம்

நெஞ்சு சளி நெஞ்சுக்குள் நிறைய சளி இருந்து வெளியில் வராமல் துன்பப்படுத்தும் ஒரு நிலை

இரண்டாவது ஆஸ்துமா நோய் இருப்பவர்களின் குத்தி குத்தி சளியுடன் கூடிய இருமல்

மேற்கண்ட பிரச்சினைகளால் வரும் பசி இன்மை தொடர்பான பிரச்சினைகள்

குழந்தைகளின் நெஞ்சு சளி மற்றும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு  மிகப்பெரிய சவாலாக இந்த பிரச்சினைகள் அமைந்து விடுகின்றன

உள்ளே இருக்கும் கபமும் சளியும் தேவையற்ற கழிவுகளும் நுரையீரலை விட்டு உடலை விட்டு வெளியேறும்போதுதான் உடல் நலமுடன் இருக்க முடியும்

இருமல், சளி, நெஞ்சு சளி,ஆகியவை  வெளியேறாமல் துன்பப்படுபவர்கள்

இந்தக் கசாயத்தைக் குடித்து உடனேயே இருமும்போதே நெஞ்சுக்குள் இருக்கும் சளி வெளியேறி நுரையீர்ல் சுத்தமடைவதைப் பார்க்க முடியும்

ஓமம் கசாயம் செய்யும் முறை

ஓமம் தூள்  .... இரண்டு கிராம்

கசகசா .... இரண்டு கிராம்

திப்பிலி தூள் .... இரண்டு கிராம்

ஆடாதொடை இலை தூள் .... இரண்டு கிராம்

அல்லது ஒரு ஆடாதொடை இலை

ஆகிய நான்கு  பொருட்களையும் கொடுக்கப் பட்டுள்ள அளவுகளின் படி எடுத்து

நானூறு மில்லி தண்ணீரில் போட்டுக் காய்ச்சி

நூறு மில்லி கசாயமாக சுருக்கி

இறக்கி வடிகட்டி

ஒரு வேளை மருந்தாக உணவுக்கு அரை மணி நேரம் முன்னதாக குடித்து வர வேண்டும்

தேவைப் பட்டால் நாட்டு சர்க்கரை வெல்லம் பனை வெல்லம் பனங்ககற்கண்டு அல்லது தேன் கலந்தும் குடிக்கலாம்

தினமும் காலை இரவு என இரண்டு வேளைகள் உணவுக்கு அரை மணி நேரம் முன்னதாகக் குடித்து வர வேண்டும்

பன்னிரெண்டு வயதுக்கு கீழ் உள்ளவர்கள் தினமும் இரண்டு வேளைகள் ஒரு வேளைக்கு ஐம்பது மில்லி இந்தக் கசாயம் குடித்து வர வேண்டும்

பன்னிரெண்டு வயதுக்கு மேற்பட்டவர்கள் தினமும் இரண்டு வேளைகள் ஒரு வேளைக்கு நூறு மில்லி இந்தக் கசாயம் குடித்து வர வேண்டும்

ஆஸ்துமா நோய் இருப்பவர்களுக்கு அந்த நோயை நிரந்தரமாகக் குணப் படுத்த முடியுமா என்ற சந்தேகம் எப்போதும் உண்டு

ஆனால் இயற்கையாக உண்ணக் கூடிய சிலபொருட்களை மருந்தாகவோ உணவாகவோ தொடர்ந்து சாப்பிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டு வந்தால் அந்த நோய்களில் இருந்தும அதன் பக்க விளைவுகள் தாக்காமல் விடுபட முடியும்

அந்த வகையில் இந்த கசாயம் நுரையீரலில் ஏற்படும் எல்லாவிதமான அழற்சிகளையும் தேவையற்ற கபங்களின் சேர்க்கையையும் குறைத்து உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றது

குழந்தைகளுக்கு ஏற்படும் சளி இருமல் தும்மல் காய்ச்சல் தொடர்பான பிரச்சினைகள்

அடிக்கடி மருத்துவமனை செல்ல வேண்டிய நிலை

வாரம் ஒருமுறைதான் தலைக்கு குளிக்க முடிகிறது

அப்படி குளித்தாலும் தலைக்கு குளித்த உடன் தும்மல் வந்து விடுகிறது மூக்கில் தண்ணீர் வடிக்கிறது

மாலையில் தொண்டை பாதிக்கப் பட்டு இரவில் காய்ச்சலுடன் கூடிய சளியினால் அவதிப் படுகிறார்கள்

என்ற நிலையில் இந்தக் கசாயம் குடித்து வர இந்தப் பிரச்சினைகள் குறைந்து கொண்டே வரும்

தற்போது தூக்கமின்மை பிரச்சினை பெரியவர்களை மட்டுமன்றி குழந்தைகளையும் பாதிக்கின்றது

அதனால் அப்படிபட்ட குழந்தைகள் கோபம் பிடிவாதம் முரட்டுதனமை போன்றவற்றால் பாதிக்கப் படுகின்றனர்

அந்த பிரச்சினைகளில் இருந்து படிப் படியாக விடுபட இந்தக் கசாயம் உதவும்

குழந்தைகளின் மனதில் இருக்கும் எதிர்மறை உணர்வுகள் படிப்படியாக குறைந்து நேர்மறையான எண்ணங்கள் அதிகமாகி படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புவார்கள்

குழந்தைகளின் மன அழுத்தம் மன இறுக்கம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத்தீர்க்கும் அழகான அரு மருந்து இது

இதை மருந்தாக அல்ல மூலிகைத்தேநீராகக் குடித்து வர நலமுடன் நாமும் வாழலாம்

No comments: