Monday 31 December 2018

To Stop Vomit!!!

பித்த மயக்கமரும் பேத்தியோடு வாந்தியும் போம்
சுத்தவிரத் தக்கடுப்பும் தோன்றுமோ – மெத்த
இலவங்கங் கொண்டவருக் கேற்ற சுகமாகும்
மளமங்கே கட்டு மென வாழ்த்து
சுக்கிலநட் டங்கர்ன்ன சூலைவியங்க லாஞ்சனந்தாம்
சிக்கல் விடாச் சர்வாசியப் பிணியு மக்கிக்குட்
டங்கப்பூ வோட்டு தரிபட்டுந் தோன்றிணலில்
வாங்கப்பூ வோடுரைத்து வா
---- அகத்தியர் குணவாகடம்
நறுமணமூட்டிகளில் அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்களைக் கொண்டது கிராம்பு. ஆரம்பநிலை பல்வலியைப் போக்க, கிராம்புத் தைலத்தைப் பஞ்சில் நனைத்துத் தடவும் மருத்துவம் இன்றைக்கும் உதவுகிறது. பல் மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் களிம்புகளில் கிராம்பின் நுண்கூறுகள் நிச்சயம் இடம்பிடித்திருக்கும். பிரியாணியில் தொடங்கி அடிப்படை இனிப்புகள் வரை கிராம்பின் பங்களிப்பு உறுதி.
லவங்கம், உற்கடம், அஞ்சுகம், சோசம், திரளி, வராங்கம் போன்ற வேறு பெயர்களும் உண்டு. காரத்தோடும் சிறிது இனிப்புச் சுவையோடும் விறுவிறுப்புத்தன்மை கொண்டிருக்கும் கிராம்பு மயக்கம், வாந்தி, பேதி, வாய்வுக் கோளாறுகள், ஆசனவாய் எரிச்சல், தசைப்பிடிப்பு, செவி நோய்கள், சரும நோய்கள் என பலவற்றை நீக்கும் திறன் கொண்டது.
கிராம்பை நீர் விட்டு மைபோல் அரைத்து நெற்றியில் மூக்குத் தண்டு கன்னப் பகுதிகளில் பற்றுப்போட நீர் ஏற்றம் மூக்கடைப்பு நீங்கும். தணலில் வெதுப்பி வாயிலிட்டுச் சுவைக்க தொண்டைப்புண் ஆறும் ஈறுகளில் புண் ஏற்ப்பட்டு ஆடும் பற்கள் வலி நீங்கி வலுவடையும்.
`சீனத்தின் பொற்காலம்’ எனப்படும் `ஹான் ராஜ்ஜியத்தில்’ அரசரிடம் நிறைகுறைகளைக் கூற வேண்டுமென்றால், பொதுமக்கள் வாயில் கிராம்பை அடக்கிக்கொண்டுதான் பேச வேண்டுமாம். கிருமிகள் வாய்மூலம் பரவி அரசரைத் தாக்காமல் இருக்க இந்த ஏற்பாடு!
120 ml வெந்நீரில், கிராம்புதூள் 8 to 10 gm சேர்த்து அரைமணி நேரம் வரையில் மூடிவைத்து வடிகட்டி 20 மில்லி முதல் 30 மில்லி வரை விதம் உட்கொள்ள, மந்தாக்கினி (பசிமந்தம்), கர்ப்பிணிகளின் வாந்தி கிராணி நீங்கும்

No comments: