Tuesday 21 July 2015

அலைபேசிகளை பாதுகாக்க அண்டிராய்டில் சிறப்பான புதிய வசதி - On-body detection!!!





கூகுள் நிறுவனம் அண்டிரொய்டு இயங்குதளத்தில் புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ‘ஆன்-பாடி டிடெக்சன்’ (On-body detection) என்ற சிறப்பான இந்த வசதி மூலம் பயனர்கள் திறன்பேசிகளை தங்கள் கைகளில் வைத்திருக்கும் போது தானாகவே ‘அன்லாக்’ (Unlock) செய்துகொள்ளும். அதே சமயத்தில் திறன்பேசிகள் கைகளில் இல்லாத தருணங்களில் தானாக லாக் செய்து கொள்ளும்.

இந்த புதிய வசதியின் முக்கிய நோக்கம், ஒருவரின் திறன்பேசிகள் தொலைந்துபோனால் தவறானவர்களின் கைகளில் கிடைத்து விடக் கூடாது என்பதாகும். இதற்காக அண்டிரொய்டில் பிரத்யேக ‘ஆக்சிலரோமீட்டர்’ (Accelerometer)-ன் செயல்முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து அண்டிரொய்டு வட்டாரங்கள் கூறுகையில், “இந்த புதிய லாக் வசதியின் மூலம் வேறு நபர்கள் திறன்பேசிகளை எடுத்துச் சென்றாலும், அதனை பயன்படுத்த முடியாது. வழக்கமான ‘பேட்டர்ன்’ (pattern) மற்றும் ‘கடவுச்சொல்’ (Password) பயன்பாடுகளை விட இந்த செயல்முறை வலிமையானது”.

“பயனர்கள் தங்கள் திறன்பேசிகளை கீழ் வைத்த அடுத்த நொடியில் திறன்பேசிகள் தன்னிச்சையாக லாக் செய்து கொள்ளும்.அதன் பின்னர் கடவுச் சொல்லை பயன்படுத்தி தான் மீண்டும் திறன்பேசிகளை பயன்படுத்த முடியும்” என்று தெரிவித்துள்ளன.

இந்த புதிய வசதியை பயனர்கள் கூகுள் ப்ளே சர்வீஸ் 7.0.97-ல் பெறலாம். எனினும், இந்த வசதி அண்டிரொய்டு 5.0 மற்றும் அதன் பிறகு வெளிவந்த மேம்பட்ட அண்டிரொய்டு இயங்குதளங்களில் மட்டுமே பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.