Wednesday 20 November 2013

ஆன்ட்ராய்டு போனில் இருந்து புகைப்படங்களை டெஸ்க்டாப் கம்ப்யூட்டருக்கு!!!

 http _www.coolphototransfer.com_ 

கூல் ஃபோட்டோ டிரான்ஸ்பர் செயலி(அப்) ஆன்ட்ராய்டு போனில் இருந்து புகைப்படங்களை டெஸ்க்டாப் கம்ப்யூட்டருக்கு எளிதாக இடமாற்றம் செய்து அசத்துகிறது.இந்த செயலியை பயன்படுத்தும் போது  வழக்கமாக செல்போனில் உள்ள புகைப்படங்களை கம்ப்யூட்டருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால் யூஎஸ்பி கேபில் தேவைப்படும் அல்லவா? ஆனால் இந்த செயலி கேபில் எதுவும் இல்லாமலேயே வைபீ மூலமாக புகைப்படங்களை கம்ப்யூட்டருக்கு மாற்றி விடுகிறது.

இது புகைப்படங்களை மாற்றுவதற்கான சுலபமான வழி மட்டும் அல்ல, விரைவான வழியும் கூட என்கிறது இந்த செயலி.
அது மட்டும் அல்ல சும்மா ஜாலியாக
புகைப்படங்களை மாற்றலாம் என்கிறது. அதாவது விதவிதமான முறையில் ப‌டங்களை ,அனிமேஷன் பாணியில் படங்களை மாற்றலாம். எப்படி தெரியுமா? செல் போனில் உள்ள புகைப்படத்தின் மீது கையை வைத்து அப்படியே தள்ளிவிட்டால் அது கம்ப்யூட்டருக்குள் போய்விடும். அல்லது போனை கம்ப்யூட்டர் மேலே வைத்து மானிட்டர் மீது வைத்தாலும் புகைப்படம் இடம் மாறிவிடுகிறது.

இதே போல போனை குலுக்கினாலும் புகைப்படல் கம்ப்யூட்டருக்குள் போய் உட்கார்ந்து கொள்கிறது. புகைப்படத்தை கைகளால் பெரிதாக்கி அப்படியே தள்ளி விட்டாலும் புகைப்படம் கம்ப்யூட்டருக்கு சென்று விடுகிறது. உங்களுக்கு விசில் அடிக்க தெரியுமா? அடித்து பாருங்கள். அசந்து போவீர்கள். காரணம் விசில் அடித்தாலும் புகைப்படம் இடம்மாறிவிடுகிறது.

இந்த அனிமேஷன் வசதிகளை தான் புகைப்படங்களை கம்ப்யூட்டருக்கு மாற்ற கூலான வழி என கூல் ஃபோட்டோ டிரான்ஸ்பர் வர்ணிக்கிறது. இதற்கான விளக்க வீடியோவே சூப்பராக இருக்கிறது.ஆன்ட்ராய்டு போன் இருந்தால் பயன்படுத்தி பாருங்கள்.

டவுண்லோடு செய்ய:http://www.coolphototransfer.com/