Sunday 10 November 2013

7 Websites for you to pursue Free Learning!!!



ஒரு ஏழு வெப்சைட் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.. உங்களுக்கு இதில் எந்தத்துறை ஆர்வமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கின்றதோ அதனை தேர்ந்தெடுத்து இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். உங்களுக்கு போட்டோகிராபியில் அதிகம் ஈடுபாடு இருக்குமேயானால் அதை பற்றி அடிப்படையில் இருந்து தெளிவாக கற்றுக்கொள்ள www.photo.net என்ற இணையதளத்தை நீங்கள் பயன்படுத்தலாம். போட்டோகிராபியில் இன்னும் பல புதுமைகளை தெரிந்துக்கொள்ள www.deepreview.comமற்றும் photography tutorials போன்றவைகளை பயன்படுத்தலாம். உங்களுக்கு கம்ப்யூட்டர் புரோகிராமிங்கை பற்றி தெரிந்துக்கொள்ள விரும்பினால் www.codecademy.com என்ற இணையதளம் இலவசமாக கற்றுக்கொள்ளலாம். உங்களுக்கு ஏதாவது ஒரு மொழியை கற்றுக்கொள்ள விருப்பமிருந்தால்www.opencultre.com இந்த இணையதளத்தை பயன்படுத்தலாம். சமையல் செய்வதில் ஆர்வம் உள்ளவர்கள் www.simplyrecipes.comமூலம் சமையல் செய்வதற்க்கு டிப்ஸ்களை பெறலாம். ஓவியம் எப்படி வரைவது, வண்ணங்களை எப்படி தீட்டுவது போன்றவற்றை தெரிந்துக்கொள்ள www.artyfactory.comமற்றும் www.instructables.com ஆகிய இணையதளங்களை பயன்படுத்தலாம். உங்கள் பாதுகாப்புக்காக தற்காப்பு போன்ற கலையையும் ஆன்லைன் மூலம் இலவசமாக கற்றுக்கொள்ளலாம். அதற்கு நீங்கள் www.lifehacker.comஇணையதளத்தை பயன்படுத்தலாம். உங்களுக்கு நடனத்தில் அதிகம் ஆர்வம் உள்ளது என்றால் www.dancetothis.com மூலம் அதை கற்றுக்கொள்ளலாம். இந்து ஏழு இணைய தளமும் தன்னுடைய சேவையை முற்றிலும் இலவசமாக வழங்குகின்றது.. யாருக்கு எதில் ஆர்வமோ அதனை முயற்சித்து பாருங்களேன்..!!! (உங்கள் நண்பர்களுடனும் இதை share செய்து கொள்ளுங்கள். பலருக்கும் இது பயனுள்ள பதிவாக இருக்கும்.)