Saturday 4 May 2013

வேதனை தரும் வெள்ளை சீனி. . .

வேதனை தரும் வெள்ளை சீனி. . .

சீனி உட்கொள்ளும்பொழுது நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், நம்முடைய உள்ளுறுப்புக்களின் இயக்கத்தில் கோளாறுகளை ஏற்படுத்தி ஆரோக்கியத்தைச் சீர்குலைக்கிறது. வில்லியம் டப்டி 1975ல் எழுதிய சுகர் ப்ளுஸ் (Sugar Blues) என்ற புத்தகம் அனைவராலும் படிக்கப்பட வேண்டியது. அவர் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட தகவல்கள் வருமாறு:-

கரும்பிலிருந்து எடுக்கப்படும் சீனியில், கரும்புச் சாறில் உள்ளதைப் போன்று எந்த சத்துக்களும் இல்லை.
அளவுக்கு அதிகமான சீனி, உடலின் சீரான இயக்கத்தில் தடுமாற்றங்களை ஏற்படுத்துகிறது. இந்தத் தடுமாற்றத்தைச் சரிப்படுத்தும் முயற்சியில் உடல் சோடியம், பொட்டேஸியம், மெக்னீஸியம், கால்சியம் போன்ற தாதுப்பொருட்களை ஈர்த்துக் கொள்கிறது. இரத்தத்தில் உள்ள அமில-கார தன்மையைச் சரிப்படுத்தும் முயற்சியே இது.

தினந்தோறும் சீனி உட்கொள்ளும்பொழுது பிரச்னை தீவிரமடைகிறது. உடலில் அமிலத்தன்மை தொடர்ச்சியாக அதிகரிக்கும்பொழுது அதனைச் சரிப்படுத்துவதற்காக இன்னும் நிறைய தாதுப்பொருட்களும் வைட்டமின்களும் ஈர்த்துக்கொள்ளப்படுகின்றன. இந்த நேரத்தில் பற்களிலிருந்தும் எலும்பிலிருந்தும் நிறைய கால்சியம் அபகரிக்கப்படுகிறது. மொத்தத்தில் உடல் பலவீனமடைகிறது.

அளவுக்கு அதிகமான சீனி உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் பாதிப்பை உண்டாக்குகிறது. ஆரம்பத்தில் சீனி குளுக்கோஸ் (கிளைக்கோஜன்) வடிவத்தில் ஈரலில் சேமித்து வைக்கப்படுகிறது. ஈரலின் சேமிப்புத் தன்மைக்கு ஒரு வரையறை இருப்பதால், தினந்தோறும் சீனி உட்கொள்ளும் பட்சத்தில் ஈரல் பலூன் மாதிரி விரிகிறது. ஈரலில் இடமில்லாத பட்சத்தில், கூடுதல் கிளைக்கோஜன் கொழுப்பு அமிலங்களாக இரத்தத்தில் சேமித்து வைக்கப்படுகின்றது. இவை எல்லா உறுப்புகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு அதிகம் இயங்காத பாகத்தில் (வயிறு, பிட்டம், மார்பகம், தொடை) சேமித்து வைக்கப்படுகின்றன.

இந்தப் பாகங்களிலும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துபோகும்பொழுது, அவை இருதயம், சிறுநீரகம் போன்றவற்றிலும் சேமித்து வைக்கப்படுகின்றன. இதனால் அவற்றின் இயக்கம் குறைந்துவிடுகிறது. அதீத இரத்த அழுத்தம் உருவாக்கப்படுகிறது.

இதனால் இணைப்பரிவு நரம்பு மண்டலமும் (parasympathetic nervous system) அதன் கண்காணிப்பில் இருக்கும் சிறுமூளை போன்ற உறுப்புக்கள் சுறுசுறுப்பை இழக்கின்றன அல்லது செயலிழக்கின்றன. வெள்ளை செல்கள் பெருகுகின்றன. திசு உருவாக்கம் தாமதமாகிறது.

நம்முடைய எதிர்ப்புச் சக்தி குறைந்துபோய் சூடு, குளிர்ச்சி, கொசுக்கடி, கிருமிகள் பாதிப்பு என்று எதுவாக இருந்தாலும் நம்மை விரைவில் பாதிக்கிறது.

அளவுக்கு அதிகமான சீனி, மூளை இயக்கத்தில் பாதிப்பை உண்டாக்கும். பெரும்பாலான காய்கறிகளில் உள்ள குளுட்டமிக் அமிலம்தான் சீரான மூளை இயக்கத்திற்குத் துணை புரிகிறது. அவற்றில் உள்ள 'பி' வைட்டமின்கள்தான் இந்த வேலையைச் செய்கின்றன.

சிம்பையோட்டிக் பாக்டீரியாக்களால் உருவாக்கப்பட்ட 'பி' வைட்டமின்கள் நம்முடைய குடலில் வாழ்கின்றன. சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சீனியை ஒவ்வொரு நாளும் உட்கொள்ளும் பொழுது இந்த பாக்டீரியாக்கள் வாடி இறந்துபோகின்றன. நம் உடலில் உள்ள 'பி' வைட்டமின்களின் அளவு குறைகிறது.

அளவுக்கு அதிகமான சீனி தூக்கத்தை ஏற்படுத்துகிறது. கணிதத் திறனும் நினைவாற்றலும் குறைய ஆரம்பிக்கின்றன. சுத்திகரிக்கப்பட்ட சீனி வாயிலோ அல்லது வயிற்றிலோ ஜீரணிக்கப்படுவதில்லை. மாறாக நேரடியாக கீழ் குடலுக்குச் சென்று நம் இரத்தத்தில் கலக்கிறது. இதனால்தான் சீனி உட்கொண்ட பிறகு "திடீர் சக்தி" ஏற்படுகிறது.

இரத்த நாளங்களில் இப்படித் திடுமென சுக்ரோஸ் சேருவது நன்மையைவிட தீமையையே அதிகம் விளைவிக்கிறது. சீனி வயிற்றில் நிகழும் இயல்பான இயக்கத்தில் ஊறு விளைவிக்கும் ஆற்றல் கொண்டது. ரொட்டி, இறைச்சி, கோக் பானங்கள் போன்ற வேறு உணவுகளோடு சீனியைச் சேர்த்து உண்ணும் பொழுது வயிறு சீனியைச் சிறிது நேரம் தக்க வைத்துக்கொள்கிறது.

இறைச்சி ஜீரணம் ஆகும் வரைக்கும் ரொட்டி மற்றும் கோக் பானத்தில் உள்ள சீனி அங்கு தங்கிவிடுகிறது. இறைச்சியில் உள்ள புரதம் செரிக்கும் வரை சீனி அங்கேயே புளித்துப்போய்விடுகிறது. புரதத்தைச் சீனியோடு சேர்க்கும்பொழுது அவை நொதித்துப்போய் விஷமாகின்றன.

சீனியில் 5 விதமான கோளாறுகள்

1. சீனி செயற்கையான இரசாயனம். சீனி தயாரிப்பின்பொழுது அதில் உள்ள வைட்டமின்கள், தாதுப்பொருட்கள், புரதம், செரிபொருள் மற்றும் இதர எல்லா சத்துக்களும் அழிக்கப்பட்டு விடுகின்றன.

மாறாக, சீனியாக மாற்றம் செய்யப்படும் கரும்பில் நிறைய வைட்டமின்களும் தாதுப்பொருட்களும் உள்ளன. கரும்பில் 14% தாதுப்பொருட்கள், வைட்டமின்கள், பச்சையம் எல்லாம் இருக்கின்றன. இந்தச் சத்துக்கள் உடலை வளப்படுத்துகின்றன.
ஆனால் இந்த சத்துக்கள் எல்லாம் முற்றிலும் அகற்றப்பட்ட சீனி, ஒரு போதைப்பொருளாகவும் வெள்ளை நஞ்சாகவும் செயல்படுகிறது.

2. ஹெரோயின் போதைப்பொருளைப் போன்றுதான் சீனி தயாரிக்கப்படுகிறது. சீனி தயாரிப்பிலும் ஹெரோயின் போதைப்பொருள் தயாரிப்பிலும் கிட்டத்தட்ட ஒரே முறையைக் கையாளுகிறார்கள்.

ஹெரோயின் போதைப்பொருள் தயாரிப்பின்பொழுது அதன் விதையில் இருந்து ஓப்பியம் எடுக்கப்படுகிறது. பிறகு ஓப்பியத்தைச் சுத்திகரித்து மோர்பினாக மாற்றுகிறார்கள். இந்த மோர்பினில் சில இரசாயன மாற்றங்கள் செய்யப்பட்டு ஹெரோயின் போதைப்பொருளாக தயாரிக்கப்படுகிறது.

இதே முறையைத்தான் சீனி தயாரிப்பிலும் பயன்படுத்துகிறார்கள். கரும்பிலிருந்து சாறைப் பிழிந்து எடுக்கிறார்கள். பிறகு அது கருப்புச் சீனியாக மாறுகிறது. பிறகு அதனை இரசாயன மாற்றம் செய்து வெள்ளை சீனியாக மாற்றுகிறார்கள். சீனிக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் இரசாயனப் பெயர் வருமாறு : C12H22O11

3. சீனி மதுவுக்கு ஒப்பானது. ஒரே ஒரு இரசாயன மூலக்கூறைத் தவிர்த்து சீனியில் இருக்கும் மற்ற எல்லா இரசாயனங்களும் மதுவிலும் இருக்கின்றன.

4. சீனி அடிமையாக்கும். பயனீட்டாளர்கள் ஆக அதிகமாக அடிமைப்பட்டுக் கிடக்கும் பொருளில் சீனியும் ஒன்றாகும். சிலர் சீனி ஹெரோயின் போதைப் பொருளைப் போன்று அடிமைப்படுத்தும் என்று கூறுகிறார்கள். மது குடிப்பவர்கள் திடீரென அந்தப் பழக்கத்தை நிறுத்தினால் நடுக்கம், தலைவலி, எரிச்சல் ஏற்படும். இதே மாதிரியான பாதிப்புக்கள்தாம் சீனி உட்கொள்வதை நிறுத்தும் பட்சத்தில் ஏற்படுகின்றன.

5. சீனி அமைதியாகவும் சாதூரியமான வகையிலும் உடலைச் சேதப்படுத்துகிறது. சீனி உட்கொண்ட பிறகு, உடலில் உள்ள ஆரோக்கியமான செல்களில் இருந்து முக்கியமான சத்துக்கள் சீனியின் செரிமானத்திற்காக ஈர்த்துக்கொள்ளப்படுகின்றன. உடலின் பல பாகங்களில் இருந்து கால்சியம், சோடியம், பொட்டேஸியம், மெக்னீஸியம் போன்றவை எடுக்கப்படுகின்றன.

இப்படிக் கால்சியம் நிறைய வெளியாக்கப்படுவதால் எலும்புகளில் கால்சிய இழப்பு ஏற்பட்டு எலும்புச் சிதைவு ஏற்படுகிறது. பற்சிதைவும் இதே முறையில்தான் ஏற்படுகிறது. சீனி சுத்திகரிப்பில் எல்லா சத்துக்களும் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்ட காரணத்தால், சீனியைத் தொடர்ந்து சாப்பிடும்பொழுது உடலில் அமிலத்தன்மை அதிகமாகிறது. இந்த அமிலத்தன்மையைச் சரிகட்டுவதற்கு இன்னும் நிறைய சத்துக்கள் உடலிலிருந்து ஈர்த்துக்கொள்ளப்படுகின்றன.

சீனி - போதைப்பொருள் இரண்டுமே விஷம்தான்

உடலுக்குள் செலுத்தப்பட்ட எந்த வஸ்துவும் நோயை வரவழைக்கும் என்றால் அது நஞ்சாகக் கருதப்படும். இப்படிப் பார்க்கும் பட்சத்தில் போதைப்பொருள் ஒரு நஞ்சு. அப்படியானால் சீனியும் நஞ்சுதான். போதைப்பொருளைப் போன்று சீனியும் அடிமைப்படுத்துகிறது. (மிகை துறுதுறுப்பிலிருந்து மன அழுத்தம் வரைக்கும் இட்டுச் செல்கிறது). போதைப்பொருளைப் போன்றே சீனியும், அதனை உட்கொள்வதை நிறுத்தும் பட்சத்தில் பல விதமான தடுமாற்றங்களை, உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது.

சுத்திகரிக்கப்பட்ட சீனி ஓர் உணவு அல்ல. தாவரங்களிலிருந்து பெறப்படும் ஒரு வகை இரசாயனம்தான் சீனி. கொகைனுக்கு உள்ள தன்மைகள் இதற்கும் உள்ளன.

டாக்டர் டேவிட் ரூபன் என்ற ஊட்டச்சத்து நிபுணர் சீனியைப் பற்றி இவ்வாறு கூறுகிறார். "சீனியின் உண்மைப் பெயர் சுக்ரோஸ். அதன் இரசாயன மூலக்கூறு C12H22O11. சீனியில் 12 கார்பன் அணு (atom), 22 ஹைட்ரோஜன் அணு, 1 ஆக்ஸீஜன் அணு உள்ளது. இதனைத் தவிர்த்து வேறு எதுவும் சீனியில் கிடையாது. கொகைனின் இரசாயன மூலக்கூறு C17H21NO4. இரண்டிற்கும் அவ்வளவாக வேறுபாடு கிடையாது. சீனியில் நைட்ரோஜன் அணு மட்டும் இல்லை என்பதே சிறிய வேறுபாடு.

சீனி ஏற்படுத்தும் பக்க விளைவுகள்

இரத்தத்தில் சீனியின் அளவை அதிகரிக்கிறது
l உடல் கட்டுப்பாட்டை இழத்தல் (நீரிழிவு நோய்)
l நோய் எதிர்ப்பாற்றல் குறைதல்
l விரைவில் முதுமைத் தோற்றம்
l உடல் பருமனை ஏற்படுத்தும்
l மூட்டு வலி, ஆஸ்துமா போன்ற நோய்களோடு தொடர்புடையது
l தலைவலி, ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்தலாம்
l மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம்
l மதுவைப் போன்று அடிமைப்படுத்தும்
l பல்லீறு நோய்களை ஏற்படுத்தும்
l கழிவை வெளியேற்றும் குடல்களின் செயல்திறனைக் குறைக்கும்
l பார்வைக் கோளாறுகளை ஏற்படுத்தும்
l புற்றுநோய் செல்கள் உருவாக்கத்தைத் துரிதப்படுத்துகிறது
l குழந்தைகளுக்கு படை நோயை ஏற்படுத்தும்

ஒருவருடைய மொத்த உணவில் சீனியின் அளவு 20-25% இருக்கும் பட்சத்தில் அவருக்கு பல விதமான நோய்கள் ஏற்படுகின்றன என்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஆகையால் சீனிக்குப் மாற்றுப்பொருள் நிறையவே இருக்கின்றன. கருப்பட்டி, வெல்லம், பனங்கல்கண்டு போன்ற இனிப்புகளை உங்கள் பானங்களுக்கு சுவையூட்டப் பயன்படுத்திக்கொள்ளலாம். இவற்றில் சத்துக்களும் நிறைந்துள்ளன.