Saturday 4 May 2013

கணினியின் மெமரியை அதிகரிக்க இலவச மென்பொருள்


கணினியின் வேகத்தை நிர்ணயிப்பதில் RAM முக்கிய பங்கு வகிக்கிறது. கணினியில் ஒரே நேரத்தில் நாம் பல எண்ணற்ற வேலைகளை செய்து கொண்டு இருப்போம். ஒரு பக்கம் அலுவலக வேலை பார்ப்போம், இன்னொரு பக்கம் நம்முடைய வலைப்பதிவை பார்த்துக் கொண்டிருப்போம். அவ்வாறு செய்து கொண்டு இருக்கும் போது கணினியின் memory அதிகமாக உபயோகப்படுத்தப்படும். அதனால் கணினியும் வேகம் குறைந்து காணப்படும். இதனை எவ்வாறு சரி செய்வது என்று இப்போது பார்ப்போம்.

மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். அதனை கணினியில் install செய்து விட்டால் போதும் கணினியில் நீங்கள் எத்தனை programme ஒரே நேரத்தில் இயங்கினாலும் அதன் memory-யை கட்டுப்படுத்தி கணினியின் வேகத்தை குறையாமல் பார்த்து கொள்ளும்.

Download செய்தவுடன் நமக்கு வந்திருக்கும் free-mim என்ற Setup file வந்திருக்கும். அதை இரண்டு முறை click செய்து மென்பொருளை Install செய்து கொள்ளுங்கள். மென்பொருளை Install செய்ததும் உங்களுக்கு கீழே இருப்பதை போல window வரும்.




மேலே குறிப்பிட்டு காட்டி இருக்கும் இடத்தில் இந்த மென்பொருளின் வசதிகள் இருக்கும். இதில் ஐந்து வகையான பிரிவுகள் நமக்கு தெரியும்.

  • Information Overview
  • Memory Optimization
  • System Tuneup
  • Process Management
  • Configuration and Settings
Information Overview :
இந்த button click செய்தவுடன் நமக்கு கீழே உள்ளதைப் போல window வரும்.




இந்தப் பிரிவில் கணினி இப்பொழுது எவ்வளவு memory உபயோகப்படுத்தபடுகிறது என்ற விவரம் இதில் நமக்கு தெரியும். இந்த window-வில் உங்களுக்கு கீழே Good என்ற இது போல செய்தி வந்தால் உங்களுடைய கணினி போதிய அளவு memory காலியாக உள்ளது என்று அர்த்தம்.

Memory Optimization 
இந்தப் பிரிவில் சென்றால் உங்களுக்கு கீழே இருப்பதைப் போல window வரும்.


இந்த window-வில் Fast Free, Deep Compress என்ற இரு வசதிகள் இருக்கும் இவை இரண்டுமே நம் கணினியின் memory-ஐ கட்டுப்படுத்த உதவும் வசதிகளாகும்.

இதில் உள்ள Fast Free என்பதை click செய்தால் கீழே இருப்பதைப் போல ஒரு message window வரும்.அதில் கணினி இதற்கு முன்னர் எவ்வளவு மெமரியை உபயோகித்தது. இப்பொழுது இந்த மென்பொருள் எவ்வளவு மெமரியை கட்டுப்படுத்தி உள்ளது என்ற விவரம் வரும்.



இதை நீங்கள் ஒவ்வொரு முறையும் செய்ய வேண்டியதில்லை ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் அது தானாகவே இயங்கி கணினியின் மெமரியை கட்டுபடுத்தும்.இடைவெளி நேரத்தை மாற்ற விரும்பினால் அதற்கு Auto Free every என்ற இடத்தில் உங்களுடைய நேரத்தை தேர்வு செய்து Save செய்துவிடுங்கள்.

அடுத்து உள்ள மூன்று பிரிவுகளும் மென்பொருளின் அமைப்பை சரிசெய்வதர்க்கும் கணினியில் எந்த file-கள் எவ்வளவு மெமரியை உபயோகித்துக் கொள்கிறது போன்ற தகவல்கள் கொண்டிருக்கும்.


மென்பொருளை இலவசமாக தரவிறக்க கீழே சொடுக்குங்க


No comments: