Wednesday, 14 April 2021

கஷாயங்கள்!!!

#கஷாயம்_வாரம் - தினந்தோறும் என்ன கஷாயம் குடிக்கலாம்

#திங்கட்கிழமை: ☕வெற்றிலை – 4, மிளகுத்தூள் ¼ தேக்கரண்டி, கொதிக்க வைதுக்குடித்தல் நாக்கு சுத்தமாகும், கபம் சேராது.

#செவ்வாய்க்கிழமை: ☕ கடுக்காய் பொடி மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் உடல் உஷ்ணம் சீராக இருக்கும்.

#புதன்கிழமை: ☕ தூதுவளை, கற்பூரவல்லி, துளசி இம்மூன்றையும் சமஅளவு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் சளி சேராது, இருந்தாலும் மலத்துடன் வெளியேறிவிடும்.

 
#விழயாகிழமை: ☕ சுக்கு, மிளகு, சீரகம், ஓமம் சேர்த்து வறுத்து பொடிசெய்து வைத்துக்கொண்டால், ஒரு தேக்கரண்டி போட்டு பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் ஜீரணம் நன்றாக ஆகும், வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் தீரும்.

#வெள்ளிக்கிழமை: ☕ வெந்தயம், தனியா சமஅளவு சேர்த்து வறுத்து பொடிசெய்து வைத்துக்கொண்டால், ஒரு தேக்கரண்டி போட்டு பனங்கற்கண்டு, சிறிது உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் பித்தநீர் வெளியேறிவிடும்.

#சனிக்கிழமை: ☕ முருங்கைக்கீரை, வெங்காயம், தக்காளி, பூண்டு, மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால், உடலுக்கு இரும்பு சத்து கிடைக்கும்.

#ஞாயிற்றுக்கிழமை: ☕
சுக்கு மல்லி காபி குடிக்கலாம்.

இப்படி பழகிக்கொண்டால் எந்த வியாதியும் வராது, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.-

Tuesday, 30 March 2021

மூலிகை!!!

அடடடா...!
இத்தனை நாளாய் இது தெரியாமல் போச்சே....!

*"வெப்பம் + இல்லை :  வேப்பிலை.! உடல் வெப்பத்தை இல்லை என்று ஆக்கும் அதுதான் வேப்பிலை.!"*

*"கரு + வெப்பம் + இல்லை : கருவேப்பிலை.! கருப்பை வெப்பத்தை இல்லை என்று ஆக்கும் அதுதான் கருவேப்பிலை.!"*

*"அகம் + தீ :  அகத்தீ உடலின் உள்ளே அகத்தின் தீயைக் குறைக்கும் அதுதான் அகத்தி.!"*

*"சீர் + அகம் : சீரகம்… More அகத்தின் சூட்டைச் சீராக்கும் அதுவே சீரகம்.!"*

*"காயமே இது பொய்யடா., வெறும் காற்றடைத்த பையடா.!  காயத்தின் காற்றை வெளியேற்றும் பெருங்காயம்.!"*

*"வெம்மை + காயம் : வெங்காயம் உடலின் வெம்மையைப் போக்கும் அதுவே வெங்காயம்.!"*

*"பொன் + ஆம் + காண் + நீ அதுதான் பொன்னாங்கண்ணி.! அதை நீ உண்டால் உடல் பொன் ஆகும் காண்நீ.!"*

*"கரிசல் + ஆம் + காண் + நீ அதுதான் கரிசலாங்கண்ணி காய்ச்சிய எண்ணெய் கூந்தலில் தேய்த்தால் கூந்தலை கரிசலாக்கும் காண்நீ.!"*

*இப்படிப்பட்ட சொற்களுக்குள் தான் மருத்துவத்தை வைத்தார்கள் நமது மகத்தான பாட்டன்மார்கள்.!*

"செம்மொழி" தமிழ்ச் சொற்களை மறந்தோம்.!

நமது பாரம்பரிய மருத்துவத்தை மறந்தோம்.!!

அவைகளைச் சொன்ன பாட்டியையும் மறந்தோம். பாட்டனையும் மறந்தோம்.!"

Tuesday, 16 March 2021

மூக்கிரட்டை கீரை!!!

நீரிழிவு நோய்க்கு மருந்துகள் சாப்பிட்டு இரண்டு சிறுநீரகமும் செயலிழந்து விட்டநிலையில் எப்போது வேண்டுமானாலும் உயிர் பிரியலாம் என்ற நிலை. உடல் முகம் உயிர் நிலை கால்கள் எல்லாம் வீங்கிய நிலையில் சொந்த ஊருக்கு கொண்டு வந்து உறவுகளை இறுதியாக பார்க்க அழைக்கின்றனர். ஊரே அழுகிறது. அந்த ஊரைச்சேர்ந்த உறவினர் ஒருவர் தன் மகனை அழைத்துக் கொண்டு அவரை பார்க்க சென்றார்... கண்ணீர் விட்டு அழுதுவிட்டு ஆறுதல் கூறி ஆயிரம் ரூபாயை அவரிடம் அளித்தார். அப்போது அவர் மகன் (தான் படித்த...நம் முன்னோர்களின் அற்புத ஆய்வு தந்த அறிவை மற்றவர்களும் பயன்பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்)ஒரு வார்த்தை தந்தையிடம் ஒப்புதல் பெற்று பேசினார்...
"மூக்கிரட்டை இலைகளை" அரைத்து சாறெடுத்து பழைய கஞ்சியில் (சோற்றை பிழிந்து எடுத்து விட்டு) மூக்கிரட்டை சாறு கலந்து" 1 வாரம் குடித்து வரச்சொன்ன அந்த இளைஞர்... நம்பிக்கையோடு மேற்கண்ட மருந்தை உட்கொள்ளுங்கள் பரிபூரண குணமாவீர்கள் என்றார். மூன்று நாளில் ... எழுந்து அவராக நடந்து சிறுநீர் கழித்ததாகவும் ...2 நாளில் முகம் உடல் வீக்கம் குறைந்ததாகவும், நேற்று தோசை உணவுகள் சாப்பிட்டு நன்றாக உள்ளார் என்பதை கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்தார்... இன்று பரிபூரண குணம் அடைந்து விட்டார்.

"உணவே மருந்தென்று" வாழ்ந்த தமிழனின் பெருமையை சொல்வேனா? அதிசயம் அற்புதம் ஆச்சரியம் ஆனால் உண்மை சிறுநீரகம் பாதித்தோர் பல கோடி செலவழிக்க வேண்டாம். மூக்கிரட்டை இலைச் சாறு பழைய கஞ்சி போதும்.
நன்றி:
மேலும் தொடர்புகொள்ள:
25 ஆண்டு மருத்துவப் பணியில் மக்கள் சேவகன்
Dr.G .S. ராஜதுரை.,M.B.B.S ., P.G.DIP.Us G /G.S.
கிளினிக்
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம் .9865224588

மூக்கிரட்டை இலையின் படம் கீழே காண்க.