Sunday, 22 February 2015

வீடியோவில் வரும் வாட்டர்மார்க் லோகோவினை நீகக!!!


  • Reply with quote
  • Report post to moderator or admin
  • Lock post for new reports

வீடியோவில் வரும் வாட்டர்மார்க் லோகோவினை நீகக









யூடியூபிலிருந்தோ - இணையத்தில் இருந்தோ வீடியோ பைல்களைபதிவிறக்கம் செய்கையில் அதில் லோகோ அல்லது இணையதள முகவரிகள் நேரடியாகவோ -வாட்டர்மார்காகவோ கூடவே ஒளிபரப்பாகும். சமயத்தில் நமக்கு அது எரிச்சலை தரலாம். சில சப்டைடிலுடன் போடப்படும் படங்களின் சப்டைடில் உடன் இவ்வாறான விளம்பரம் வந்து நமக்கு எரிச்சலை தரலாம். இதனை தவிர்க்க நாம் வீடியோவில் உள்ள லோகோவினை நீக்கிவிடலாம். இவ்வாறான லோகோவினை நீக்க இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட http://www.mediafire.com/download/1bkldzohdyzl7ql/VideoLogoRemover.exe செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.







 இதில் உள்ள லோட் வீடியோ பைலில் உங்களுக்கான வீடியோவினை தேர்வு செய்யவும்.




 உங்களுக்கான வீடியோ படம் தெரியும் இதில் வரும் லோகோவினை கர்சர் மூலம் தேர்வு செய்யவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.





வீடியோவின் லோகொ அமைந்துள்ள இடத்தினை நீங்கள் கர்சர் மூலம் தேர்வு செய்ததும் ஹரிசான்டல் மற்றும் வெர்டிகல் பெசிஷனை அறிந்துகொள்ளலாம். மேலும் லோகோ அமைந்துள்ள அகலம் மற்றும் உயரம் ;அறிந்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.







என்;டர் தட்டியவுடன் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.




 வரும் விண்டோவில் ரிமூவ் லோகோ கிளிக் செய்யவும். லோகோ நீக்கப்பட்ட இடத்தினை தேர்வு செய்வதுமட்டுமல்லாது கீழே உள்ள பார்மெட்டில் உங்களுக்கு எந்த  பார்மெட்டில் வீடியொ வேண்டுமோ அந்த பார்மேட்டினை தேர்வு செய்யவும்.








 செயல் நடைபெறுவதற்கான விண்டோ உங்களுக்கு தோன்றும் கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.இ




 அனைத்து பணிகளும் முடிந்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.




ஒ.கே.கொடுத்து வெளியேறுங்கள். இப்போது நீங்கள் சேமித்துவைத்த இடத்தில் சென்று பார்த்தால் உங்களுக்கான வீடியோ லோகோ இல்லாமல் இருப்பதை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.

Friday, 13 February 2015

ரசகுல்லா!!!

ரசகுல்லா 

ரசகுல்லா தேவையானவை பால் – 1 லிட்டர் பால் மைதா – 1 டீஸ்பூன் மைதா எலுமிச்சம் பழம் – 1 சீனி – 21/2 கப் நீர் – 5 கப் செய்முறை முதலில் பாலை கொதிக்கவிடவும். கொதிக்கின்ற பாலில் எலுமிச்சம்பழத்தை பிழிந்துவிட பால் திரிந்துப் போகும். திரிந்தப் பாலை ஒரு மெல்லிய துணியில் வடிகட்ட வேண்டும். நீர் இறங்கி பால் திரட்சிகள் துணியில் தங்கிவிடும். அதை அப்படியே ஒரு மூட்டையாகக் கட்டி, அதன் மீது அம்மிக்குழவி போன்ற ஏதாவதொரு ஒரு கனமான பொருளை வைத்தால். மிச்சமிருக்கும் நீரும் இறங்கிவிடும். இது பனீர். பனீரை நன்றாக பிசைந்து வைக்கவும். இந்த பனீர் 1 டீஸ்பூன் மைதாவைப் போட்டு நன்கு பிசைந்து கோலி வடிவத்தில் சின்னச்சின்னதாய் உருட்டிக் கொள்ளவும். தண்ணீர்விட்டு சீனியை காய்ச்சவேண்டும். பாகு இறுக இறுக அவ்வப்போது தண்ணீர் விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். பாகு நன்கு கொதித்தக் கொண்டிருக்கும் பொழுதே, செய்து வைத்தள்ள பனீர் கோலியை அதில் போட வேண்டும். ரசகுல்லா வாசனையாக இருக்க வேண்டுமெனில், சீனிப் பாகில் உங்களுக்குப் பிடித்த ஏதாவதொரு எஸன்ஸை சேர்த்தக் கொள்ளலாம். 

பாஸந்தி 


பாஸந்தி தேவையான பொருட்கள் பால் – 1½ லிட்டர் பொடித்த சர்க்கரை – 350 கிராம் முந்திரிப் பருப்பு – 20 கிராம் பிஸ்தாப்பருப்பு – 20 கிராம் சாரைப்பருப்பு – 20 கிராம் பச்சைக் கற்பூரம் – சிறு துண்டு ஏலக்காய் பொடி – ½ டீஸ்பூன் செய்முறை அடிகனமான அகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி சிறி தீயில் காய்ச்சவும். பால் கொதித்து ஏடு படியும் பொழுது பாத்திரத்தின் ஓரங்களில் ஒதுக்கி விடவும். பாலை கெட்டியாக ஏடு, ஏடாக காய்ச்சியதும் அடுப்பிலிருந்து இறக்கி பொடித்த சர்க்கரையை சேர்க்கவும். ஏலக்காய்ப் பொடியையும், பச்சைக் கற்பூரத்தையும் சேர்க்கவும். வேறொரு பாத்திரத்தில் எடுத்து மேலாக மெல்லிய வில்லைகளாக நறுக்கி வைத்து இருக்கும். பருப்புகளைத் தூவி விடவும். பாஸந்தியை அப்பொழுதே அல்லது குளிர் சாதனப் பெட்டியில் வைத்தோ ஜில்லென்று பரிமாறலாம். 



பால் பாயாசம்



பால் பாயாசம் நல்ல பச்சை அரிசி மூன்று தேக்கரண்டி எடுத்துத் தண்ணீர் விட்டு அலம்பிக் கொண்டு வடிய வைத்துக் கொள்ளவும். ஒரு லிட்டர் பசும்பாலை இரண்டு லிட்டர் கொள்கிற பாத்திரத்தில் வைத்து அடுப்பிலேற்றி, கொதிக்க விடவும். பால் நன்றாகக் கொதித்ததும், சுத்தம் செய்து வைத்திருக்கும் அரிசியைப் பாலில் போட்டு சாதம் போல் அரிசி வேகும் வரையில் கிளறிக் கொண்டே இருக்கவும். அரிசி வெந்ததும். சர்க்கரை முழுவதும் கரைந்ததும். தோல் போக்கிய வாதுமைப் பருப்பை நீளவாக்கில் நறுக்கி நெய்யில் வறுத்து பாயசத்தில் போடவும். சாரைப் பருப்பு இருபது கிராம் சிறிது நெய்யில் வறுத்துப் போடவும். பிறகு ஏலக்காய் இரண்டு. சாதிப்பத்திரி ஒருதுண்டு ஆகியவற்றை நன்றாகப் பொடி செய்து பாயசத்தில் போட்டுக் கலக்கி மூடவும். இளம் சூட்டில் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். 


.








Saturday, 7 February 2015

Click on the Disease & U will get a Video Explanation!!!

Click on the Disease & U will get a Video Explanation......

It is better to have a heart without words than words without a heart. 





The tutorials listed below are interactive health education resources from the 
Patient Education Institute. Using animated graphics each tutorial explains a procedure or condition in easy-to-read language. You can also listen to the tutorial. 

JUST CLICK ON AN AILMENT


NOTE:
 These tutorials require a special Flash plug-in, version 6 or above... If you do not have Flash, you will be prompted to obtain a free downloadof the software before you start the tutorial.
Surgery and Treatment Procedures