Sunday, 4 October 2015

விரும்பின இசையை கேட்டு ரசிக்க!!!



விரும்பின இசையை கேட்டு ரசிக்க புதிய வழியை மட்டும் அல்ல புதுமையான வழியை அறிமுகம் செய்திருக்கிறது தி நாஸ்டால்ஜியா மிஷின் இணையதளம்.  அப்படி இந்த தளம் என்ன செய்கிறது என்று கேட்டால் ,காலத்தால் பின்னோக்கி அழைத்துச்சென்று அந்த காலத்தி இசையை கேட்டு லயிக்க வைக்கிறது. அந்த வகையில் இது சாதாரண இணையதளம் அல்ல, இசைக்கான கால இயந்திரம்.
இப்போது இசைப்பிரியர்களுக்கு இந்த தளம் என்ன செய்கிறது என்பது இசை மின்னலாக தோன்றியிருக்குமே !
சிறு வயதிலோ அல்லது இளம் பருவத்திலோ கேட்டு ரசித்த பாடல்கள் எல்லோர் மனதிலும் இருக்கும் அல்லவா? இந்த பாடல்களை கேட்கும் போதே அந்த கால நினைவுகளில் மூழ்கிவிடலாம். இந்த பிளேஷ்பேக் அருமையான அனுபவம் . இதே அனுபவத்தை தான் இந்த இணையதளம் வழங்க முற்படுகிறது.  இதன் முகப்பு பக்கத்தின் மையத்தில் உள்ள கட்டத்தில் கடந்த காலத்தில் நாம் விரும்பும் ஆண்டை தேர்வு செய்து கிளிக் செய்தால் போதும் இந்த தளம் அந்த காலத்தில் பிரபலமான போக்காக இருந்த பாடல்களை பட்டியல் போட்டு காட்டுகிறது.
ஒவ்வொருவரும் அவர்களுக்கு விரும்பிய ஆண்டை தேர்வு செய்து கொள்ளலாம். அந்த கால இசை நினைவுகளில் மூழகலாம். அருமையான இணைதளம் இல்லையா? என்ன ஒரே குறை , எல்லா பரிந்துரைகளுமே பாப் பாடல்கள் மற்றும் மேற்கத்திய மெட்டுகள் தான். நம்மூர் இசையையும் சேர்த்திருந்தால் நன்றாக இருக்கும். அல்லது நம்மூர் இசை தளங்கள் இதே போன்ற சேவையை முயற்சிக்கலாம். 70 களை கிளிக் செய்து இளையராஜாவின் அன்னக்கிளியை கேட்பதோ 60 களை கிளிக் செய்து டிஎம்.எஸ் ஹிட்களை கேட்பதோ சுகமாக இருக்கும்  அல்லவா?
இசை நினைவில் மூழ்க; http://thenostalgiamachine.com/

விடைத்தாள்களை மதிப்பீடு செய்யவும் எளிதான வழி!!!

மாணவர்களுக்குக் காலாண்டுத் தேர்வுகள் முடிந்துவிட்டன. தேர்வை எழுதி முடித்த திருப்தியோடு மாணவர்கள், விடுமுறையைக் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். ஆனால் ஆசிரியர்களுக்குஇப்போதுதான் வேலையே தொடங்கி இருக்கிறது. விடுமுறையில்தான் எல்லா ஆசிரியர்களுக்கும் விடைத்தாள்களைத் திருத்தி, ஒவ்வொரு மாணவருக்கும் ரேங்க் / கிரேடுகளைப் போடும் வேலை இருக்கும். இணைய யுகத்தில் எல்லாமே எளிதாகிவிட்ட நிலையில், விடைத்தாள்களை மதிப்பீடு செய்யவும் எளிதான வழிமுறைகள் வந்துவிட்டன.
1 முதல் 8- ஆம் வகுப்பு வரையிலான மதிப்பெண்கள் மதிப்பீடு
*******************************************************************************************
www.way2cce.com என்ற இணையதளத்தில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்களை மதிப்பீடு செய்ய முடியும். உங்கள் பள்ளியின் பெயர், மாவட்டத்தின் பெயர், பின்கோடு, மதிப்பெண் ஆகியவற்றைப் பதிவு செய்தாலே போதுமானது. கடவுச் சொல்லை உருவாக்கி நமது ஐடியைப் பதிவு செய்த உடனே FA, SA, Total Grade ஆகிய எல்லாவற்றையும் அதுவாகவே செய்து சமர்ப்பித்து விடுகிறது. இதை ஆன்லைனில் மட்டுமே பயன்படுத்தமுடியும்.
9-ம் வகுப்புக்குப் பயன்படும் மதிப்பீட்டுக் கருவி
************************************************************************
ஒன்பதாம் வகுப்பிற்குப் பயன்படும் இந்த மதிப்பீட்டுக் கருவி மைக்ரோசாஃப்ட் எக்ஸல்ஷீட்டில் தயாரிக்கப்பட்டிருக்கிறது.http://www.kalvisolai.info/2012/08/kalvisolai-cce.html என்ற இணைப்புக்குச் சென்று இதனை இலவசமாகத் தரவிறக்கம் செய்ய முடியும்.
அதில் மாணவர்களைப் பற்றிய விவரம், மதிப்பெண்களை மட்டும் பதிவு செய்தால், மிக எளிதாகவும் விரைவாகவும் மதிப்பீட்டு விவரங்களைப் பெற முடியும். அப்படியே பிரிண்ட் எடுத்து சமர்ப்பித்து விடலாம். இது அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவரால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்துவதற்கு இணையம் தேவையில்லை; கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. ஒரு முறை இதனை உங்கள் கணினியில் நிறுவினால் போதும். அப்படியே பயன்படுத்தலாம்.
பொதுவான செயலி
*******************************
'சிசிஇ கிரேடு கால்குலேட்டர்' என்கிற ஆன்ட்ராய்ட் செயலியைப் பயன்படுத்தியும் கிரேடைக் கண்டுபிடிக்கலாம். இதுவும் ஓர் அரசுப் பள்ளி ஆசிரியரின் கண்டுபிடிப்பே. உங்கள் ஆன்ட்ராய்ட் போனில் இலவசமாகத் தரவிறக்கம் செய்து இந்தச் செயலியைப் பயன்படுத்தலாம்.
இதைப் பயன்படுத்த https://play.google.com/store/apps/details… என்ற இணைப்பைச் சொடுக்கவும். இந்த செயலி மூலம் மதிப்பெண்களை வைத்து, FA, SA, Total Grade மற்றும் மொத்த மதிப்பெண்களைக் கண்டறிய முடியும்.
*********************************************************************************************
அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர், மெலட்டூர்.

Thursday, 1 October 2015

புழுத்தொல்லை!!!(Worms)

புழுத்தொல்லை உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்பொழுதும், இனிப்பு சார்ந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளும்போதும், வேறு சில புழுக்கள் மற்றும் கிருமிகள் சுகாதாரமற்ற நீர் மற்றும் கெட்டுப்போன உணவுகள் மூலமாக உடலில் நுழையும்பொழுதும், தங்களை காத்துக்கொள்வதற்காக குடல் புழுக்களும் பெருகுகின்றன.இதனால் உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. * தோலில் தடிப்பு, அரிப்பு, மலவாயில் எரிச்சல் மற்றும் வெடிப்பு, மலச்சிக்கல் அல்லது கழிச்சல், தலையில் பொடுகு, வாயில் புண்கள் மூக்குத்துளை ஓரங்களில் அரிப்பு, முகம் மற்றும்... கன்னப்பகுதிகளில் ஒரு வித வெளுப்பு, * வாயில் துர்நாற்றம், மலம் கழிக்கும்பொழுதும், அபானவாயு பிரியும்பொழுதும் துர்நாற்றம், புழுக்கள் இனப்பெருக்க பாதையில் தொற்றை ஏற்படுத்தி வெள்ளைப்படுதல், மாதவிலக்கு திரவம் மற்றும் வெள்ளையில் சிறுசிறு புழுக்கள் வெளியேறுதல், * சிறுநீர்ப்பாதையில் அரிப்பு, மலவாயைச் சுற்றி துளைகள் ஏற்பட்டு பவுத்திரம், மூலம் உண்டாதல், சில நேரங்களில் அந்த துளைகளிலும் புழுக்கள் வெளியேறுதல் மற்றும் ஆசனவாய் வெடிப்பு ஆகியன புழுக்களால் உண்டாகின்றன. * அது மட்டுமின்றி தொடை இடுக்கு மற்றும் வயிற்றுப்பகுதிகளில் நெறி கட்டுதல், சிறு சுரம், அடிக்கடி குமட்டல், வாந்தி போன்ற சில தொல்லைகளுக்கும் வயிற்றுப்புழுக்கள்தான் காரணம். * அவசியமற்ற குடற்புழுக்களை நீக்கி, வலிமையையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் தரும் மூலிகைதான் யானை திப்பிலி. பைப்பர் சாபா என்ற தாவரவியல் பெயர் கொண்ட, பைபரேசியே குடும்பத்தைச் சார்ந்த கொடிகளின் உலர்ந்த பூ தண்டுகளே, யானை திப்பிலி என்று வழங்கப்படுகின்றன. * நாட்டு மருந்துக்கடைகளில் யானை திப்பிலி விற்பனை செய்யப்படுகின்றன. இதன் தண்டுகளில் பைப்பரின், பைப்பலார்டின், பைப்பலோரின்ஸ் மற்றும் பலவித ஒத்த பியூட்டைல் அமைடுகள் காணப்படுகின்றன. * இவை குடல் பகுதியிலுள்ள மென்மையான சளிச்சவ்வு படலத்தை தூண்டி, குடற்புழுக்களை வெளியேற்றுகின்றன. அது மட்டுமல்லாமல் குடற்பாதையில் உறுத்தலை ஏற்படுத்தும் பாக்டீரியா, வைரஸ் போ ன்ற நுண்கிருமிகளையும் நீக்குகின்றன. * யானை திப்பிலி, அரிசி திப்பிலி, வேப்பிலை, சுக்கு, சீந்தில் தண்டு, நிலவேம்பு, சுண்டை வற்றல் ஆகியவற்றை நன்கு உலர்த்தி, சுத்தம் செய்து, சம அளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து, பின் ஒன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். * 10 கிராம் பொடியை 500 மிலி நீரில் போட்டு கொதிக்கவைத்து 100 மிலியாக சுண்டியபின் வடிகட்டி, அதிகாலை வெறும் வயிற்றில் 7 நாட்கள் குடித்துவர, வயிற்றுப்புழுக்கள் வெளியேறும். * புழுத்தொல்லையினால் ஏற்பட்ட தோல் தடிப்பு, வெள்ளை நிற மாவு படிதல், மலவாய் அரிப்பு, பலவிதமான வயிற்று உபாதைகள் நீங்க யானைத்திப்பிலியை இளவறுப்பாக வறுத்து, பொடித்து 1 கிராம் அளவு எடுத்து தேனுடன் குழப்பி, 3 முதல் 7 நாட்கள் சாப்பிட்டுவர வயிற்றுப்புழுக்கள் மலத்துடன் வெளியேறும்.