Saturday 12 January 2019

Dhall Makhani!!!

*🥘டால் மக்ஹனி :-*

*💠தேவையான பொருட்கள் :-*

ராஜ்மா – 2௦௦ கிராம்
உளுத்தம் பருப்பு – 15௦ கிராம்
கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்
இஞ்சி – 1௦ கிராம்
வெங்காயம் – 1௦௦ கிராம்
பச்சை மிளகாய் – பத்து
கொத்தமல்லி – ஒரு கொத்து
சீரகம் – இரண்டு டேபிள்ஸ்பூன்
மிளகாய் தூள் – மூன்று தேகரண்டி
உப்பு – தேவைகேற்ப
வெண்ணெய் – தேவையான அளவு

*👨‍🍳செய்முறை :-*

ராஜ்மா மற்றும் உளுத்தம் பருப்பை கழுவி இரவு முழுவதும் நன்றாக ஊறவைக்கவும்.

காலையில் ஒரு பாத்திரத்தில் இரண்டு பருப்புகளையும் போட்டு நன்றாக வேகவிடவும்.

வெந்தவுடன் எடுத்து மசித்து கொள்ளவும்.

கடாயில் வெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் போட்டு தாளிக்கவும்.

பிறகு, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

பிறகு, மிளகாய் தூள், உப்பு, மசித்த பருப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

பிறகு, இறக்கி கொத்தமல்லி துவி பரிமாறவும்.

                   *🥗 🥗*
                                

No comments: