Wednesday 22 November 2017

Mysore Masal Dosai!!!


மைசூர் மசாலா தோசை 

தேவையானவை:

ஜவ்வரிசி  100 கிராம்

சர்க்கரை  ஒரு டீஸ்பூன்

தோசை மாவு  அரை கிலோ

காய்ந்த மிளகாய்  10

பூண்டு  5 பல்

உப்பு  தேவையான அளவு

மஞ்சள்தூள்  கால் டீஸ்பூன்

கடுகு, உளுந்து  அரை டீஸ்பூன்

கடலைப்பருப்பு  ஒரு டீஸ்பூன்

சீரகம்  அரை டீஸ்பூன்

எண்ணெய்  தேவையான அளவு

பொடியாக நறுக்கிய  

பெரிய வெங்காயம்  ஒன்று

உருளைக்கிழங்கு  150 கிராம்

தக்காளி  ஒன்று

இஞ்சி  ஒரு துண்டு

பச்சைமிளகாய்  ஒன்று

பெருங்காயம்  சிறிதளவு

செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்துக் கொள்ளவும். ஜவ்வரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து, சிறிது உப்பு, சர்க்கரை சேர்த்து அரைத்து, தோசை மாவுடன் கலந்து கொள்ளவும். காய்ந்த மிளகாய், பூண்டு சிறிது உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, உளுந்து, சீரகம், பெருங்காயம், கடலைப்பருப்பு சேர்த்துத் தாளிக்கவும். பிறகு வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், தக்காளி, மஞ்சள் தூள், அரைத்த பூண்டுக் கலவையைச் சேர்த்து கலவை ஒன்றாகும் வரை வதக்கவும். இத்துடன் சிறிது தண்ணீர் ஊற்றி 3 நிமிடம் கொதிக்கவிடவும். பிறகு வேகவைத்த உருளைக்கிழங்கைப் பாதியாக நறுக்கிச் சேர்க்கவும். கலவை கெட்டியானதும் இறக்கவும். சூடான தோசைக்கல்லில் தோசைமாவை ஊற்றி ஒருபுறம் வெந்ததும் அதன் மீது உருளைக்கிழங்குக் கலவையை வைத்து  தோசைக்கல்லிலேயே ரோலாக சுருட்டி எடுத்து தட்டில் வைத்துப் பரிமாறவும்

No comments: