Thursday 17 August 2017

கஷாயப்பொடி!!!

கசாயப்பொடி !!
(அலர்ஜி, ஆஸ்த்துமா, இருமல், ஈஸிணோபிலியா, சைனஸ், மண்டைவலி, காய்ச்சல், குணமடைய இந்த உலகில்) இதுவே சிறந்த மருந்து !
சுக்கு, மிளகு, திப்பிலி, தாளிச்ச பத்திரி, சித்தரத்தை, பேரரத்தை, அதிமதுரம் முதலியவற்றை சரிவிகித எடையில் கலந்து பொடியாக தயாரித்து பொடியாக வைத்துக்கொள்ளவும்.
இந்தப்பொடியில் ஒரு கிராம் (கால் தேக்கரண்டி) அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிடலாம். தண்ணீரில் கலந்தும் சாப்பிடலாம். அல்லது கொதிக்கும் தண்ணீரில் போட்டு வெல்லம் சேர்த்து வடிகட்டி காபி குடிப்பது போல குடிக்கலாம்.
மூக்கு ஒழுகும் உள்ள நேரத்திலும் சளி, இருமல், காய்ச்சல் சமயத்திலும் தினசரி ஐந்து தடவை காபி மாதிரி சாப்பிட வேண்டும். சாப்பிட சுவையாக இருக்கும்படி தயாரித்து குடிக்கவும்.
காரம் அதிகமாக இருந்தால் தண்ணீர் கலந்து சுவையாகத்தான் சாப்பிட வேண்டும். காரமாக சாப்பிடக்கூடாது.
அலர்ஜி, ஆஸ்த்துமா, இருமல், ஈஸிணோபிலியா, சைனஸ், மண்டைவலி, காய்ச்சல், குணமடைய இந்த உலகில் இதுவே சிறந்த மருந்தாக வேலை செய்யும் என்பதில் சந்தேகமே இல்லை.

No comments: