Saturday 6 February 2016

Natural Remedies!!!இயற்கை வைத்திய அகராதி.1-!!!


இயற்கை வைத்திய அகராதி.1


இயற்கை அல்லது கை வைத்தியம் என்பது மிக எளிதானது, மற்றும் தொன்று தொட்டு பின்பற்ற பட்டு வருவதாகும். பெரியவர்கள் சாப்பாட்டு வகையில் கையாண்ட முறைகளே ஒரு வகை மருந்தாகும். தற்போது எல்லாம் துரித உணவு முறைகள்.

இந்த அகராதி எல்லோருக்கும் தெரிந்து இருக்க வேண்டிய அவசியம் இப்பொழுது. எனெனில், எளிதாக போக வேண்டியதற்கு, நீண்ட வழியில் கொண்டு செல்கின்றனர் வைத்தியர்கள்.

இதை படித்து எளிய முறையில், நம் உணவு முறையில் சிறிய உடல் உபாதைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.


அசீரணம்




கறிவேப்பிலையுடன் சுட்டு புளி, வறுத்த உப்பு, வறுத்த மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டால் பித்த வாந்தி, ஜீரணக் கோளாறுக்ள போன்றவை சரியாகும்.


ஆண்மை




பொன்னாங்கண்ணிக் கீரையுடன் மிளகு, சாம்பார் வெங்காயம் ஆகியவற்றுடன் சிறிது உப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் ஆண்மைக் குறைபாடு பிரச்னை சரியாகும்.




கொடிப்பசலைக் கீரைச் சாறில் பாதாம் பருப்பை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, பாலில் ஒரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.




கானாம்வாழைக் கீரை (உலர்த்தியது – 100 கிராம்) மற்றும் தென்னம்பாளை, கொட்டைப்பாக்கு, முருங்கைப் பிசின் வகைக்கு 100 கிராம் எடுத்துப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் ஒரு கிராம் அளவில் சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும். விந்து முந்துதல் பிரச்னையும் தீரும்.




துத்திக்கீரையுடன், கற்கண்டு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் ஆண்மைக் குறைவு நீங்கும்.




பாலக் கீரையுடன் குடை மிளகாய், பூண்டு கசாகசா ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் ஆண்மைக் குறைபாடு குணமாகும்.




பாலக் கீரையுடன் முளை கட்டிய பச்சைப் பயிரைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.




முள்ளிக் கீரை சாறில் கொள்ளை கொண்டைக் கடலையை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி சாப்பிட்டால், ஆண்மை பெருகும். நரம்புகள் இறுகும்.




பாற்சொரிக் கீரையைத் தொடர்ந்து 21 நாள்கள் சாப்பிட்டால், விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.




சுக்குக் கீரைச் சாறில் முந்திரிப்பருப்பை ஊற வைத்து அரைத்துச் சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும்.




சுக்குக் கீரையுடன் குடை மிளகாயைச் சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் விந்து விரைந்து வெளியேறுதல் பிரச்னை சரியாகும்.

No comments: