Friday 8 January 2016

அக்குபங்சர்!!!

அக்குபங்சர் மருத்துவம் .!!!


இன்றைய நவீன மருத்துவத்தில், அறுவை சிகிச்சை சிறந்த மருத்துவ பிரிவாக மதிக்கப் படுகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் மனதிலும், அறுவை சிகிச்சை பற்றி ஒர் உயர்வான மதிப்பீடு உள்ளது என்பதனை மறுக்க இயலாது.
நமது மண்ணின் மருத்துவமான, சித்த மருத்துவத்தில் அறுவை சிகிச்சை பயன்பாட்டில் இருந்ததற்கான குறிப்புகள் உள்ளன. அகத்தியர் குணபாடம் எனும் சித்த மருத்துவ நூலில் அறுவை சிகிச்சைக் கருவிகள் குறித்து குறிப்புகள் உள்ளன. அதேபோல் ஆயுர்வேத மருத்துவர் சுஸ்ருதர் இன்றைய நவீன அழகு சிகிச்சையான ‘பிளாஸ்டிக் சர்ஜரி’க்கான மூலவர் என்று நவீன மருத்துவம் குறிப்பிடுகிறது. இதிலிருந்து பல்வேறு மருத்துவ முறைகளிலும் அறுவை சிகிச்சை பயன்பாட்டில் இருந்துள்ளது என்பது வெள்ளி டைமலை. இருப்பினும் நமது நாட்டில் ஏற்பட்ட அரசியல் நிகழ்வுகள் நமது மருத்துவத்தை வளர்த்தெடுக்க பெருந்தடையாக இருந்து மண்ணுக்குள் புதைத்து விட்டது என்பதனை நாம் உணரவேண்டும். இன்றும் அதே நிலை தொடர் கிறது என்பதுதான் வேதனைக்குரிய செய்தி...
சீன நாட்டின் மக்கள் மருத்துவமான அக்குபங்சர் மருத்துவம் பஞ்சபூத கோட்பாடின் அடிப்படையில் உடலியக்கதை சீர்படுத்தும் ஒரு முழுமையான மருத்துவமுறையாகும். அதாவது உடலில் பரவிச் செல்லும் சக்திபரிமாற்றத்தை ஒழுங்கு செய்து. அதன் வழி உடல் உள்ளுறுப்புகளின் இயக்கத்தை செம்மைபடுத்தி நோய்களைக் களையும் ஒர் அற்புத இயற்கை வழி அறிவியலாகும்.
உடல் உள்ளுறுப்புக்களின் இயக்கத்தை இரு பெரும் பிரிவாகப் பிரிக்காலம். 1. உள்வாங்குதல் 2.வெளித்தள்ளுதல். அதாவது நாம் உள்ளிழுக்கும் காற்று, உணணும் உணவு, அருந்தும் நீர் ஆகிய வற்றிலுள்ள சதுதுகளையும், சக்தியையும் உள்வாங் குதல் முதல்பணி, அடுத்து இரண்டாவதாக உள்ளி ழுக்கப்பட்ட பொருட்களில் இருந்து கிடைக்கும் சக்தி மற்றும் சத்துகள் தவிர்த்து பொருட் களையும், அணுக்களில் நடந்த வேதிமாற்றங்களுக் குப் பின் உண்டாகும் கழிவுகள் (Toxins), அணுக் களின் அழிவு (Dead cells), ஆகியவற்றால் உண்டா கும் அனைத்துக் கழிவுகளையும் சளி, மலம், சிறுநீர், வியர்வை ஆகிய வழிகளில் உடல் வெளித்தள்ளுகிறது.
இவ்விரு பெரும் பணிகளில் ஏற்படும் தடை கள், சுணக்கம், சத்து அல்லது சக்தி பற்றாக்குறை, சக்தி அல்லது கழிவுகள் தேக்கம் ஆகியன நோய்நிலையை தோற்றுவிக்கறது உள்வாங்குதல் மற்றும் வெளித்தள்ளுதல் ஆகிய இருபணி களையும் மேற்கொள்ளும் உறுப்புகளை பட்டி யலிடுவோம்.
1. நுரையீரல் - பெருங்குடல்
2. சிறுநீரகம் - சிறுநீர்ப்பை
3. கல்லீரல் - பித்தப்பை
4. இருதயம் - சிறுகுடல்
5. இருதயஉறை - மூவெப்பக்குழி
6. மண்ணீரல் - இரைப்பை
6 இணை உறுப்புகள் தம்முள் இணைந்து செயலாற்றிய முன் குறிப்பிட்ட இரு பெரும் பணிகளை மேற்கொள்கின்றன.
அக்குபங்சர் மருத்துவத்தின் அடிப்படை விதிகளின்படி இந்த 12 உறுப்புகளை உடலின் மேற்புறம் அமைந்துள்ள அக்குபங்சர் புள்ளிகளை தூண்டுதல் அளிப்பதன் வாயிலாக உள்ளுறுப்புகள் தம் பணிகளை இயல்புப் போக்கில் மேற்கொண்டு, உள்வாங்கலும், வெளித்தள்ளுதலும் ஒருங்கே நடைபெற்று உடலானது தம்மை ஒழுங்கு செய்துகொள்கிறது இதன்வழி, உடல் முழுமையும் தன்னை அனைத்து நிலைகலும் புதுப்பித்துக் கொள்கிறது. அதனால் நோய்நிலை மறைந்து விடுகிறது.
இவ்வாறு உடல் இயக்கத்தை சீர் செய்வதன் வழியாக அறுவை சிகிச்கை செய்துதான் குணப் படுத்த இயலும் எனக் கருதப்படும் நோய்களை அக்குபங்சர் மருத்துவம் செய்தே குணப்படுத்தி விடலாம்.
1) கண்புரை நோய் (Cataract):
உடலின் அமிலத்தன்மை அதிகரிப்பில் தோன்றும் கண் வெண்படலமே இந்நோய். இதனை கண் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை யின் மூலம் படலத்தை அகற்றுகின்றனர். துவக்க நிலை கண்புரை நோயினை அக்குபங்சரில் சிகிச்சை மேற்கொண்டு குணப்படுத்தலாம். தீட்டிய வெள்ளை அரிசி, மைதா, வெள்ளைரவை, வெள் ளைச் சீனி உணவுப்பட்டியலுக்கு வந்த பின்பே இந்த நோய் அதிகரித்திருக்கிறது.
புள்ளிகள் : ST1,GB2,ST43,SP10,GB14,GB21,SP9,ST37,EX2,UB2,LI4,LI11,LIV3
2) டான்சில் கோள அழற்சி ( Tonsititis) :
ஒழுங்கற்ற உணவுப்பழக்கம், பருவ மாறுதலை தாங்கும் திறன் இன்மை ஆகிய காரணங்களால் வாயின் உட்பகுதியில் அமைந் துள்ள டான் சில் கோளம் தனது பணி யான நோய் எதிர்ப்பு செயலை அதீத அள வில் மேற் கொள்ளும் போது வேக் காடு அடைந்து வீங்கி, சிவந்து வலி, விழுங்குவதில் சிரமம் ஆகிய குறிகளோடு, காய்ச்சல், தூக்க மின்மை ஆகிய தொந்தரவுகளும் காணப்படும். அதாவது நோய் எதிர்ப்புப் பணிகளை மேற் கொள்ளும் டான்சில் கோளம் பலவீனமடைந்துள்ள நிலையில், தேவை என்பது அதனை பலப்படுத்துவதே. ஆனால் நவீன மருத்துவம் அதனை அறுவை செய்து நீக்க பரிந்து ரைப்பதை என்ன சொல்வது? செரிமான மண்ட லத்தின் நுழைவாயிலில் அமைந்துள்ள இக்கோளம், மண்ணீரலின் அதீத பணியினால் ஏற்படு கிறது. எளிமையான கூழ்வடிவ உணவினை எடுத்துக் கொண்டு கீழ்க்கண்ட புள்ளிகளை தூண்டு வதன் வழி அறுவை சிகிச்சையினை தவிர்க்கலாம்.
புள்ளிகள் : ST43,SP6,SP9,SP10,LI11,LI18,DU14
3) தைராய்டு கோள வீக்கம் :
கழுத்துப் பகுதியில், தொண்டையின் உட்பகுதியில் தீர்மானிக்கும் தைராக்சின் சுரப்பை உருவாக்கக் கூடியது. இதன் ஏற்றத்தாழ்வுகளின் விளைவாக பெருத்த உடலாகவோ, மெலிந்த தேகமாகவோ மாற்றிவிடும். இக்கோளம் வீங்கி பெருத்து தொண்டையின் செயல்பாட்டிற்கு பெரிதும் இடையூறாக மாறும் போது அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
புள்ளிகள் : LI18,GB21,LI4,SP9,SP6,ST36,UB20.
4) குடலிறக்கம் ( Hernia) :
வயிற்றுத் தசைகள் பலவீனமடைந்து தளர்ந்து போகும்போது, உள்ளிருக்கும் உறுப்புக்கள் வெளித்தள்ளும் சூழல் ஏற்படுகிறது. இதற்கு மெல்லிய வலை போன்ற பொருளைவைத்து அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதன் தொடர் நிகழ்வாக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தை தவிர்த்து மற்ற வயிற்றுப் பகுதிகள், தொப்பூள் ஆகிய பகுதிகளில் இக்குறை பாடு தோன்ற பெரிதும் வாய்ப்பு உள்ளது. அச்சமயத்தில் அறுவை செய்ய இயலாது. போய் விடுகிறது என்பதே எதார்த்த நிலை. எனவே வயிற்றுத் தசைகளை வலுவூட்டும்படியாக அக்கு பங்சர் சிகிச்சை மேற்கொள்வதே சிறந்த வழி.
புள்ளிகள் :Ren12,Ren17,ST21,ST25,UB18,UB21 LIV8,GB21,ST36,UB25
5) வயிற்றுப் புண் (Gastric Ulcer) :
வயிற்றின் செரிமானத் தன்மையை சீர்குலைக்கும்படியாக தொடர்ந்து தின்பண்டங் கள் உண்பது, பசியற்ற நிலையிலும் உணவுண்பது, நேரம் தவறி உண்பது ஆகிய பழக்கத்தால் உணவு இரைப்பகுதியில் நீண்டநேரம் தங்கி, உடலின் வெப்பத்தால் புளித்து அதன் விளைவாக இரைப்பை, குடல் பகுதிகளின் சுவர்களின் மேல் படிந்துள்ள சளிச்சவ்வுப் படலம் பாதிக்கப்பட்டு உறுப்புக்களின் சுவர்களில் புண்கள் ஏற்படுகின்றன. கடுமையான நிலைக்கு மாறும்போது நவீன மருத்துவத்தால் புண்னை ஆற்ற இயலாததால் அறுவைக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
எளிய திரவ வடிவ உணவுகளை எடுத்துக் கொண்டு அக்குப்பங்சர் சிகிச்சை மேற்கொண்டு குணமானவர்கள் பலர். குறிப்பாக பால் உணவுகள், காரமற்ற மாவுப் பண்டங்கள் வயிற்றுப் புண் நோய்க்கு உணவாக பரிந்துரைக்கப்படுகிறது. இவை பாதிக்கப்பட்ட பகுதிகளில் மென்மேலும் புண்களை அதிகப்படுத்தவே உணவும், மாவுப் பண்டங்களையும், புளித்த உணவுகளையும் தவிர்த்தலே இந்நோய் குணமாக உணவும்.
புள்ளிகள் :Ren12,ST21,ST25,UB20,UB21,SP6,ST36,ST43,GB43,ST34,P6
6) குடல்வால் அழற்சி ( Appendicitis) :
பெருங்குடலின் ஒரு பகுதியான குடல் வால் தம்முள் தேங்கும் அழுக்குகளால் வேக்காடு அடைந்து வீங்கி பெருத்துவிடுகிறது. இது கடுமையான வயிற்றுவலியை தோற்றுவித்துஇ நோயாளி யை மிகவும் சிரமத்துள்ளாக்கக் கூடியது. நவீன மருத்துவம் அறுவை சிகிச்சை செய்யாவிடில் உயிர் பிழைப்பது கடினம் என்கிறது.
பழங்கள்( குறிப்பாக பப்பாளி), பழச்சாறுஇ இளநீர்இ காய்கறி சூப் ஆகிய உணவுகளை மட்டும் எடுத்துக்கொண்டு அக்குபங்சர் சிகிச்சை செய்து குணமடையலாம். அதோடு, இளஞ்சூடான வெந்நீரில் உப்பு கலந்து இயற்கை இனிமா மூலம் தினமும் காலை மாலை என இருவேளை இனிமா எடுத்தல் அவசியம்.
புள்ளிகள் : Ex33,ST36,LI4,DU14.LI11,SP6,Ren12,ST25,ST29.
7) மூலம் (Piles) :
மலச்சிக்கல் தொடர்ந்து நீடிப்பதும், உணவில் எந்த ஒழுங்கும் இல்லாதோருக்குத்தான் மூல நோய் ஏற்ப்படுகிறது. மலம் தேங்குவதால் மலக்குடல் வேக்காடு அடைந்து குடற்சுவரின் மேற்புற அடுக்கு வீங்குவதால்ட ஏற்படும் நோயே மூல நோயாகும். இரத்தபோக்கு இருந்தோ இல்லாமலோ இந்நோய் நீடிக்கலாம். மலச் சிக்கலை சரிசெய்து வேக்காடு அடைந்த பெருங் குடல் பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு உதவியாக, மலம் தேங்காமலிருக்கும் வகையில் நார்ச்சத்து மிகுந்த உணவுகள், பழங்கள் என உணவு மாற்றம் செய்து அக்குபங்சர் சிகிச்சை மூலம் இந்நோயை குணப்படுத்தலாம்.
புள்ளிகள் : DU1,Ren1,UB32,UB54,SP6,DU6,UB57,GB34,ST42
8) மண்ணீரல் வீக்கம் (Spleenomogaly) :
புளிப்பான உணவுகள், பழையை உணவுகள், எந்நேரமும் நொறுக்குத்தீனி இவையே உணவுப் பழக்கமாக உள்ளோருக்கு மண்ணீரல் வீக்கம் ஏற்பட பெரிதும் வாய்ப்பு உள்ளது . இவ்வீக்கத்தை குணப்படுத்த நவீன மருத்துவத்திற்கு வழி தெரியாததால் அறுவை சிகிச்சை செய்து மண்ணீரலை அகற்ற பரிந்துரைக்கிறது.
நம் உடலின் செரிமான மண்டலத்தினை கட்டுப்படுத்தவும், இரத்தம் உருவாகவும், நோய் எதிர்ப்புப் பணிகளுக்கான செல்களை உருவாக்கவ்ம் மண்ணீரல் பெரிதும் அவசியமான உறுப்பு என்பதை இங்கு கறிப்பிடுவது நல்லது. புள்ளிகள் : LIV13,LIV14,GB24,GB26,ST21,UB20,SP6,SP9,SP4,ST36.
9) கருப்பை நீர்கட்டிகள் (Cyst) : சினைப்பை நீர்க்கட்டிகள்
மாதவிடாய் நீண்ட இடைவெளியில் வருதல், மாதவிடாயின் போது வலி, அதிக நாட்கள்நீடித்தல் ஆகிய குறிகளோடு காணப்படும் இக்கோளாறுகளுக்கு அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.
புள்ளிகள் : Ren6,Ren4,UB32,SP6,ST36,DU14,UB23,GB26.
10) தொப்பை (Tammy) :
வயிற்றுத் தசைப்பகுதியில் கொழுப்பு சேர்ந்து வயிறு பானை போல் பெருத்து நபரின் தோற்றத்தை மாற்றிவிடுகிறது. மாவுப்பண்டங்கள் , மதுபானங்கள், நாட்பட்ட உணவுகள், நேரந்தவறி உண்ணுதல், இரவு உணவு காலந்தாழ்த்துதல், உழைப்பின்மை ஆகிய காரணங்களால் தொப்பை பெருத்துவிடுகிறது. இன்று கொழுப்பைக் கரைத்து வெளியேற்றும் சிகிச்சை, வயிற்றுத் தசை அடுக்குகளை நீக்குதல் போன்ற அறுவை சிகிச்சை செய்து வயிறு குறைக்கப்படுகிறது. ஆனால் அக்குபங்சர் சிகிச்சையில் கத்தி தேவையில்லை என்பதை நீருபித்திருக்கிறது.
புள்ளிகள் : LIV13,Ren12,GB34,UB20,SP6,SP9,ST36,GB21.
11) கருப்பை நழுவுதல் (Prolapsed Uterus) :
கருப்பையின் தசைப்பகுதி வலுவிழந்து, அதன் இருப்பிடததை விட்டு நழுவி வெளியேறும் நிலை. இளவயது திருணமம், அடிக்கடி கருக் கலைதல், வயிற்றுப்புண்ணை குணப்படுத்தாது விடுவதால் அதன் தொடர்ச்சியாக, கருப்பைபுண் ஏற்பட்டு வலுவிழ்ந்துவிடுதல் சிசேரியன் பிள்ளைப்பேறுக்குப்பின் கருப்பை பலமிழத்தல் ஆகிய நிலைகளில் கருப்பை நழுவுதல் அல்லது வெளித்துருத்துதல் ஏற்படுகிறது.
புள்ளிகள் : Ren1,Ren6,UB31,UB32,UB33,UB34,SP6,ST36,GB34,GB21,UB18,UB23.
12) மூட்டு மாற்று அறுவை (Knee Replacement Surgery) :
மூட்டு எலும்பு சந்திப்புக்களில் ஏற்படும் வலி, அசைப்பதில் சிரமம், இறுக்கம் என தொந்தரவுகள் துவங்கி, எலும்புத் தேய்மானம் வரை சென்று விடுகிறது. துவக்கநிலை தொந்தரவு களுக்கு நவீன மருத்துவம் வலி நிவாரணிகளை பரிந்துரை செய்து தப்பித்துக்கொள்கிறது. நோயாளிகளும் வலி மறைந்தவுடன் நோய் குண மடைந்ததாக கருதி விடுகின்றனர். ஆனால் உடல் நிலையில் ஏற்படும் தொடர் பலவீனங்கள் மூட்டு எலும்புகள் சேதமடையும் வரை செல்வதை வலி நிவாரணிகள் தடுக்கப் போவதில்லை என்பதை உணரும் வாய்ப்பில்லை.
உடலில் தேங்கும் அமிலத்தன்மை, மூட்டு சந்திப்புகளில் உயவு எண்ணெய்க்கு சமமான திரவத்தை வற்ற வைத்துவிடுகிறது. அதன் விளை வாக மூட்டுச் சவ்வுகள் பலவீன மடை கின்றன. மேலும் மூட்டுக்களின் சந்திப்புகளில் உள்ள குறுத் தெலும்புப் பகுதிகள் எளிதல் சேதமடைகின்றன. அதன் விளைவாக எலும்புத் தேள்மானம் அடைந்து அறுவைசிகிச்சைக்கு வாய்ப்பளிக்கிறது.
ஆனால் அக்குபங்சர் சிகிச்சையின் மூலம் எலும்பு சந்திப்புகளில் இயல்பாக இரலுக்க வேண்டிய திரவத்தை சுரக்கச் செய்து. சேதமுற்ற எலும்புகளை வளரச் செய்து குணமடையசந் செய்யலாம்.
புள்ளிகள் : ST43,LI4,UB18,UB23,SP10,ST34,UB40,LIV8,GB 21.
அறுவை சிகிச்சையினை தவிர்க்க விரும்புவோர், குறிப்பிட்ட நடைமுறைகளை கடைபிடித்தல் மிகவும் அவசியமானது.
எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளையே உண்ணுதல் வேண்டும்.
பழங்கள் காய்கறிகள் உணவில் அதிகம் இருத்தல் வேண்டும்.
தேவையற்ற பானங்களான பால் கலந்த தேநீர், காபி குளிர்பானங்கள் ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
உணவு தானியங்களில் அரிசி உணவினை மிகவும் குறைத்து கோதுமை, கேழ்வரகு, கம்பு, வரகு, சாமை போன்ற நார்ச்சத்து மிகுந்த தானியங்களை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ளுதல் விரைவில் குணமடைய உதவும்.
இஞ்சி, மிளகு ஆகிய காரத்தன்மை (Alkaline) மிகுந்த பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இரவு உணவினை 7 மணி அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பசிக்காத போது உணவினை தவிர்த்து விட்டு, இளநீர், கரும்புச்சாறு, பதநீர், போன் இயற்கை பானங்களை குடிக்கவோ, பழங்கள் உண்ணவோ செய்தல் நல்லது.
அறுவை சிகிச்சை ஒரு குறிப்பிட்ட கால எல்லையில் நடந்தேறிவிடும். ஆனால் அதன் பக்க விளைவுகள் ஆண்டுக்கணக்கில் துயரத்தை தரும். நமது அக்குபங்சர் மருத்துவம் செய்து குணமடைய கால எல்லையை எளிதில் வகுக்க இயலாது. ஆனால் பக்க விளைவு என்ற பயமின்றி குணமடைதல் உறுதி.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள நோய்நிலை களுக்கு குறிப்பிட்டுள்ள அக்குபங்சர் புள்ளிகளை, அக்குபங்சர் மருத்துவர் அல்லாதார் பயன்படுத்து வதை தவிர்த்தல் வேண்டும் .
அக்குபங்சர் மருத்துவத்தை வேறு மாற்று மருத்துவத்துடன் இணைத்து பார்ப்பது விரைவில் குணமடைய உதவலாம்.