Thursday 10 December 2015

பொடுகு (Dandruff) தொல்லையா? ஒரு தீர்வு..

பொடுகு (Dandruff) தொல்லையா? ஒரு தீர்வு..




பொடுகு தோன்றுவதற்குப் பெயரும் காரணம் தோலில் எண்ணெய்த் தன்மை இருப்பதால் PO VALE எனப்படும் பூசண பீடிப்பு(பங்கஸ்)கிருமிகள் உண்டாகி அவை வளர்ந்தது பொடுகு உண்டாகும். இது அதிகமாக நெற்றி, மூக்கு மடிப்பு, காது பின்புறம் மற்றும் தலையில் அதிகமாக தலையில் வெள்ளைச் செதில்களாக ஏற்படும். இதற்கு Seborrhea dermatitis. என்று பெயர்.


பொடுகு என்றால் என்ன?
தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்த போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிரும். இதைதான் நாம் பொடுகு என்கிறோம்.

பொடுகு ஏன் வருகிறது?
1. வரட்சியான சருமத்தினால் வரும்

2. அவசரமாக தலைக்கு குளிப்பது. நல்லா தலையை துவட்டுவது கிடையாது. இதனால் தண்ணீர்,சோ்பபு தண்ணீர் ஆகியன தலையில் தங்கிவிடும். இதனால் இந்தபொடுகு உற்பத்தியாகிறது..

3. எப்பொழுதும் எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருப்பது, அழுக்கு தலையுடன் இருப்பது

4. ஒழுங்காக தினசரி குளிப்பதில்லை, இத்தகைய தலையில் வியர்வை உற்பத்தியாகி அந்த வியர்வை தண்ணி தலையில் தங்க நேரிடும். இதனாலும் இப்பொடுகு வருகிறது

5. "பிடி ரோஸ்போரம் ஓவல்" என்ற நுண்ணியிர் கிருமியினாலும் இந்தபொடுகு நோய் வரலாம்.

6. எக்ஸீமா(Eczema), சொறாஸிஸ்(Psoriasis) போன்ற தோல் நொய்களாளும் பொடுகு வரலாம்

7. அதிகமாக சாம்பு பயன்படுத்தினாலும் வரலாம். க்ண்ட கண்ட செல்களை தலையில் தேய்ப்பதனாலும் இது வரலாம்.

8. மனஅழுத்தம் கவலையாலும் இது வரலாம்

பொடுகு வருவதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

1. ஒருவர் பயன்படுத்திய சீப்பு தலையாணை துண்டு போண்றவற்றை அடுத்தவர் பயன்படுத்தக்கூடாது

2. தலையை எப்பொழுதும் சுத்தமாக வைத்ததிருக்க வேண்டும்

3. கொழுப்பு சத்துள்ள நெய், பால், வெண்ணெய் முதலிய உணவுகளை சேர்க்க வேண்டும். இதனால் தோலுக்கு தேவையான எண்ணெய் பசை கிடைக்கும். இதன் மூலம் பொடுகுக்கு காரணமான கிருமிகளிடமிருந்து நமது தலையை பாதுகாக்க முடியும்

பொடுகு தொல்லை நீங்க என்ன செய்யலாம்?

1. தலையில் புண் அல்லது வெட்டுகாயம் இல்லாமல் இருந்தால் செலெனியம் சல்ஃபைடு அல்லது ஜிங்க் பைரிதியோன் என்ற மருந்துள்ள சாம்பை பய்னபடுத்தி தலையை சுத்தம் செய்யலாம். இது பொடுகுபெருகுவதை தடுக்கும். புண் இருந்தால் இதை பயன்படுத்தக்கூடாது.

2. சாலிசிலிக் அமிலம் சல்பர் கலந்த சாம்புகளை பயன்படுத்தலாம்.
"பிடிரோஸ்போரம் ஓவல்" என்ற நுண்னுயிர் கிருமியால் ஏற்படும் பொடுகுதொல்லைக்கு டாக்டரை பார்கவும்.

3. சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்க்கனும். அப்புறம் 15நிமிஷம் கழித்து குளிக்கனும்

4. பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிஷம் கழித்து குளிக்கவும்.

5. தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம்

6. வாரம் ஒரு முறையாவது நல்லண்ணை தேய்த்து குளிக்கனும்.

7. பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளிச்சால் பொடுகுக்கு ரெம்ப நல்லது

8. வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகுதொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும்.

9. அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணையுடன் சேர்த்து நல்லா காய்ச்சி அப்புறம் ஆறவைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்

10. வேப்பிலைசாறும் துளசி சாறும் கலந்து தலையில் தேய்கலாம்

11. வசம்பு பவுடரை தேங்காய் எண்யெயில் ஊறவைத்து தேய்கலாம்

12. தலைக்கு குளித்தபின்பு தலையை துவட்டாமல் கொஞ்சம் வினிகரை தண்ணீரில் கலந்து தலைக்கு குளித்து அதன்பின்பு துவட்டி கொள்ளலாம்.

13. மருதாணி இலையை அரைக்கனும். அதனுடன் கொஞ்சம் தயிர், எழுமிச்சை சாறு கொஞ்சம் சேர்கனும். இந்த கலவையை தலையில் தேய்கனும்.

14. வேப்பிலை கொஞ்சமும் அதனுடன் கொஞ்சம் மிளகையும் சேர்த்து நல்லா அரைத்து தலையில் தேய்த்து 1மணி நேரம் ஊரவைத்து பின்பு குளிக்கனும்.


பேன் தொல்லை நீங்க என்ன செய்ய வேண்டும்?

1. வசம்பை தண்ணீர் சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து கொஞ்சநேரம் ஊறவைத்து அப்புறம் குளிக்கனும்

2. வேப்பிலையை அரைத்து தலையில் தேய்த்து கொஞ்ச நேரம் ஊறவைத்து அப்புறம் குளிக்கனும்.

இப்படி செய்தால் பேன் செத்து போகும்.

முடி நீளமாகவும் ஸ்ராங்காகவும் வளர என்ன செய்ய வேண்டும்?

1. முட்டை வெள்ளை கருவை தனியாக எடுக்கனும் இதனுடன் நல்லண்ணெய் கொஞசம் கலக்கனும் தலையில் தேய்த்து ஊற வைக்கனும் அப்புறம் கொஞ்ச நேரம் கழித்து குளிக்கனும்

2. பாசிப்பருப்பு வெந்தயம் இரண்டையும் தண்ணீரில் ஊறவைத்து பின்பு மாவாக அரைத்து கொள்ளவும். தலையில் நல்லெண்ய் தேய்த்து அரை மணிநேரம் கழித்து அரைத்த மாவை தலையில் தேய்த்து குளிக்கவும். இதனால் கூந்தல் அழகாககும் பளபளப்பாகவும் இருக்கும்.



கூந்தல் மிருதுவாக இருக்க…
1.வாரம் ஒரு முறை மருதாணி இலையை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

2.நெல்லிக்காயை பாலில் வேகவைத்து, கொட்டை நீக்கிவிட்டு மசித்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து குளித்தால், கூந்தல் மிருதுவாக இருக்கும்.

3.டீ டிகாஷனில் சிறிதளவு எலுமிச்சம்பழச்சாறு கலந்து தலையில் தேய்த்து குளித்தால், கூந்தல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.TEXT TEXT

No comments: