Thursday 27 August 2015

பனீர் பட்டர் மசாலா!!!



பனீர் பட்டர் மசாலா


தேவையானவை:
பனீர் - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 3தக்காளி 4இஞ்சிபூண்டு விழுது - டேபிள் ஸ்பூன்
மிளகாய்த் தூள் - டேபிள் ஸ்பூன்
தனியா தூள் - டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - அரை டீஸ்பூன்
வெண்ணெய் - 50 கிராம்
ப்ரெஷ் க்ரீம் - டேபிள் ஸ்பூன் (பசும் பாலை சற்று அகலமான பாத்திரத்தில் ஊற்றிஇரண்டு மணிநேரம் ப்ரிட்ஜில் வைத்திருந்தால்பாலின் மீது அடர்த்தியாக ஏடு படியும். அது போறும் புன்னகை )காய்ந்த வெந்தயக் கீரை - டீஸ்பூன்.

செய்முறை:
பனீரை சிறு துண்டுகளாக்குங்கள்.
வெங்காயம்தக்காளியைத் தனித்தனியே அரையுங்கள்.
வாணலியில் வெண்ணெயைப் போட்டு லேசாக உருக்குங்கள்.
அதில் வெங்காயம்இஞ்சிபூண்டு விழுதைச் சேர்த்துஅடுப்பை ஸிம்மில் வையுங்கள்.
வாணலியில் உள்ளவை நிறம் மாறிபச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள்.
பிறகு அதனுடன் மிளகாய்த் தூள்தனியா தூள்தக்காளி விழுது சேர்த்துகொதிக்கவிடுங்கள்.
கடைசியாகபனீர் துண்டுகள்கரம் மசாலாஉப்புகாய்ந்த வெந்தயக் கீரை சேர்த்து நிமிடம் கிளறி இறக்குங்கள்.
ப்ரெஷ் க்ரீமை மேலாக ஊற்றிப் பரிமாறுங்கள்.
குழந்தைகள் விரும்பும் சத்தான சைட் டிஷ்இந்த பனீர் பட்டர் மசாலா!