Thursday 16 April 2015

VLC மீடியா பிளேயரில் மறைந்துள்ள மூன்று பயனுள்ள வசதிகள்!!!

பிரபல மீடியா பிளேயரான VLC மீடியா பிளேயரில் உலகம் முழுவதும் பெரும்பாலான கணினிகளில் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த மீடியா பிளேயர் வெறும் பாடல்களை கேட்கவும் பார்க்கவும் மட்டுமல்லாமல் பல எண்ணற்ற வசதிகளை கொண்டுள்ளது. முந்தைய பதிவான VLC மீடியா பிளேயரில் மறைந்துள்ள மூன்று பயனுள்ள வசதிகள் என்ற பதிவில் மூன்று முக்கிய வசதிகளை பற்றி பார்த்தோம். இப்பொழுது அந்த வரிசையில் மேலும் மூன்று பயனுள்ள வசதிகளை பற்றி இன்று பார்ப்போம்.

1. Video Effects 
VLC பிளேயரில் அடங்கியுள்ள முக்கியமான வசதிகளில் இது ஒன்று. நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் வீடியோவுக்கு உங்கள் விருப்பம் போல விதவிதமான எபக்ட்ஸ் கொடுத்து வீடியோவை பார்க்கலாம். Tools ==> Effects and Filters என்பதை கொடுக்கவும். அல்லது Ctrl+E கொடுக்கவும். கீழே இருப்பதை போல விண்டோ வரும். அதில் உங்களுக்கு விருப்பமான எபக்ட்ஸ் கொடுத்தவுடன் அடுத்த நொடியே வீடியோ அந்த எபெக்ட்ஸ் சேர்ந்து விடும்.
நீங்கள் கொடுக்கும் Video Effects சேமிக்க வேண்டிய அவசியமில்லை நீங்கள் கொடுத்தவுடன் உங்கள் ஒரிஜினல் வீடியோவும் மாறிவிடும். இந்த Effect தேவை இல்லை என்றால் எந்த நேரத்திலும் இதை நீக்கி கொள்ளலாம்.

2. Display On Desktop
VLC Media Playerல் உள்ள மேலும் ஒரு பயனுள்ள வசதி இந்த Display On Desktop வசதி. ஏதாவது ஒரு வீடியோவை பார்த்து கொண்டிருக்கும் பொழுது மேனுபாரில் உள்ள Video என்பதில் கிளிக் செய்து Display On Desktop என்பதை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது உங்கள் கணினியின் டெஸ்க்டாப் பகுதிக்கு சென்று பாருங்கள். டெஸ்க்டாப்பில் இருந்த icons அனைத்தும் மறைந்து வீடியோ ஓடி கொண்டிருக்கும். வீடியோவை பார்த்து கொண்டே ஏதேனும் வேலை செய்ய வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.
3. Hotkeys
VLC மீடியா பிளேயரை உபயோகிக்க ஒவ்வொரு செயலுக்கும் மவுசை உபயோகிக்க வேண்டிய அவசியமில்லை. பெரும்பாலான வேலைகளை மவுசை உபயோகிக்காமல் வெறும் கீபோர்ட் ஷார்ட்கட் கீகளால் செய்து விடலாம். ஷார்ட்கட் கீகளும் அதற்க்கான பயன்பாடுகளும் அறிய Tools ==> Preferences ==> Hotkeys என்பதை கிளிக் செய்து பயனுள்ள சார்ட்கட் கீகளை தெரிந்து கொள்ளுங்கள்.
இன்னும் பல வசதிகள் VLC மீடியா பிளேயரில் உள்ளது