Saturday 27 December 2014

இடம் கண்டுபிடிக்க இவர்களுக்காக 10 பிரத்யேக கைபேசி பயன்பாட்டுகள் வந்துள்ளது!!!

பிரான்ஸ் நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் சுற்றுலாவை இனிமையாய் கழிக்க 10 அற்புத கைபேசி பயன்பாடுகளை அந்நாட்டின் அரசு வெளியிட்டுள்ளது.
பிரான்சில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
குறிப்பாக தலைநகர் பாரிசிற்கு நாளுக்கு நாள் இவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் முந்தைய காலத்தை போல் புத்தகங்கள் மற்றும் வரைப்படங்களை வைத்து இடம் கண்டுபிடிக்கும் நிலை தற்போது மாறியுள்ளது.
இடம் கண்டுபிடிக்க இவர்களுக்காக 10 பிரத்யேக கைபேசி பயன்பாட்டுகள் வந்துள்ளது.அவை
1. பாரிஸ் சிட்டி கைட் ஆப்: பிரான்ஸ் நாட்டில் உள்ள விடுதிகள், ஓட்டல்கள் மற்றும் அங்குள்ள அதிசியங்க மற்றூம் சுற்றூலா தளங்களை பட்டியலிட்டு காண்பிக்கிறது.
2. விசிட் பாரிஸ் பை மெட்ரோ ஆப்: நகரத்தில் உள்ள பேருந்து மற்றும் ரயில் நிலையங்களை விவரிக்கின்றன.
3. பாரிஸ் ஆப்லைன் மெப் ஆப்: இணையதளம் இல்லாமல் உபயோகப்படுத்த கூடும் இந்த பயன்பாடு பாரிஸ் நகரத்தின் சுற்றுலா தளங்களை விவரிக்கிறது.
4. XE கரன்ஸி ஆப்: இதன் மூலமாக எந்த நாட்டின் பணத்தின் பதிப்பையும் அறிந்து கொள்ளலாம்.
5. யூனிட் கன்வெர்டர்: இதன் மூலம் தொலைவு, எடை மற்று வெப்பநிலையை மற்ற யூட்களுக்கு மாற்றம் செய்து கொள்ளலாம்.
6. ஆப்பி ஹவர்ஸ் பார்ஸ் ஆப்: இதில் மது அருந்தங்கள் இடம், மதுவின் விலை, என அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்.
7. மை ஆர்ப்போர்ட்: பாரிஸ் விமான நிலையத்தின் அதிகாரபூர்மான பயன்பாடான இதில் விமான நேரங்களையும் அதன் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
8. பைண்ட் டாய்செட்ஸ் ஆப்: பாரிஸ் நகரத்தில் உள்ள கழிப்பிடங்கள் மற்றும் கழிப்பிடங்கள் சேவை நேரத்தையும் அறிந்து கொள்ளலாம்.
9.G7 டாக்ஸி ஆப்: பிரெஞ் மொழி தெரியாமல் ஆங்கிலத்தில் டாக்ஸி புக் செய்ய மிகவும் உதவியாக இருக்கும்.
10.லெர்ன் பிர்ன்ஞ் பிரேஸ்புக் ஆப்: பிரெஞ் மொழியை ஆங்கில மொழிக்கு மொழி பெயர்த்து புரிந்து கொள்ள மிகவும் உதவிய இருக்கிறது.