Friday 7 November 2014

ஆங்கில மருந்து ( drug ) சரிதானா என்று எளிதாக கண்டுபிடிக்க!!!

ஆங்கில மருத்துவர் நமக்கு கொடுத்திருக்கும் மருந்து ( drug ) சரிதானா என்று எளிதாக கண்டுபிடிக்கலாம்.

என்ன நோய் என்று போனாலும் மருத்துவர் அதிகப்படியான மாத்திரைகளை கொடுக்கிறார் இவர் கொடுக்கும் மாத்திரை மருந்து ( drug ) சரிதானா என்று எப்படி கண்டுபிடிப்பது என்று எண்ணும் அனைவருக்கும் உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
2 ரூபாய் மாத்திரையே போதும் ஆனால் மருத்துவர் 50 ரூபாய்க்கான மாத்திரையை  கொடுத்திருக்கிறாரே இதன் காரணம் என்ன என்பதை உங்களுக்கு மருத்துவர் விவரிக்காவிட்டாலும் கவலைப்பட வேண்டாம் எளிதாக ஆன்லைன் மூலம் நமக்கு  கொடுத்திருக்கும் மருந்து சரிதானா என்பதை சோதிக்கவே இத்தளம் வந்துள்ளது.
இணையதள முகவரி : http://www.drugcite.com/
இத்தளத்திற்கு சென்று நாம் நமக்கு கொடுத்திருக்கும் மாத்திரை ( drug ) அல்லது டானிக் சரியானது தானா எந்த வயதில் உள்ளவர்கள் எப்படி சாப்பிட வேண்டும் இதனால் நமக்கு ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்ன என்பது முதல் , இந்த மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர் மற்றும் அனைத்துவிதமான தகவல்களையும் துல்லியமாக எடுத்துக்கூறுகிறது. பெரிய நிறுவனங்களின் வேலை பார்க்கும் நபர்கள் தங்களுக்கு நேரம் இல்லாத காரணத்தினால் அவர்கள் கொடுக்கும் மருந்தை அப்படியே சாப்பிடுகின்றனர், ஆனால் இனி அவர்கள் கொடுத்திருக்கும் மருந்தை இத்தளத்தில்
இருக்கும் தேடுதல் கட்டத்திற்குள் கொடுத்து தேடினால் மேலும் விரிவாக தெரிந்து கொள்ளலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு நம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.