Saturday 12 April 2014

எப்படி வந்தது!!!



PEN  என்ற ஆங்கிலச்சொல் PENNA என்ற லத்தீன் சொல்லில் இருந்து பிறந்தது.இந்தச் சொல்லுக்கு இறகு என்று பொருள்.***********
சோழ மன்னர்கள் முதன் முதலாக நிக்கோபார் தீவுக்கு சென்றபோது அங்குள்ள மக்கள் ஆடையின்றி இருப்பதைக் கண்டனர்.ஆகவே அவர்கள் வாழும் இடத்தை நக்காவரம் என்று அழைத்தனர்.அதுவே பின்னர் நிக்கோபார் என்று ஆயிற்று.**********
பெண் சிங்கம் தான் வேட்டையாடிய இரையை உண்ணாமல் ஆண் சிங்கம் வரும் வரை காத்திருக்கும்.ஆண் சிங்கம் தான் வேண்டிய அளவு தின்றபின் மீதியை பெண் சிங்கமும் அதன் குட்டிகளும் உண்ணும்.ஆகவே தான் பல பேர் தேடிய பொருளில் ஒருவர் மட்டும் அதிகப் பங்கு அடைந்தால் அதை ஆங்கிலத்தில் THE LION'S SHARE' என்பர்.**********
போர்ச்சுக்கலில் பூதத்தை COCO என்பர்.லத்தீனில் COCOக்கு மண்டை ஓடு என்று பொருள்.போர்த்துக்கீசிய வர்த்தகர்கள் பசிபிக் தீவுகளில் தென்னை மர வகைகளைக் கண்டனர்.அவற்றின் காய்கள் மனிதத் தலை அளவு இருப்பதையும்,அதில் கண்களும் இருப்பதைப் பார்த்ததும் அது பூதம் போல இருப்பதாகக் கருதி COCONUT என்று பெயரிட்டனர்.**********
GROOM என்ற ஆங்கில வார்த்தைக்கு குதிரைகளைத் தேய்த்துக் குளிப்பாட்டும் சிப்பந்தி என்று பொருள்.பின்னால் ,சுத்தம் செய்யும் வேலை செய்பவர்களையும் GROOM என அழைத்தனர்.பழங்காலத்தில் ஐரோப்பிய கிராமங்களில் விருந்துகளின்போது புதிதாய்த் திருமணம் செய்து கொண்ட மாப்பிள்ளை,கல்யாணப் பெண்  சாப்பிடும் மேஜைக்கு அருகில் நின்று கொண்டு அவளுக்கு வேண்டியதைக் கொடுத்து உபசரிக்க வேண்டும்.எனவே கணவனுக்கு BRIDE'S GROOM எனப் பெயர் வந்தது.நாளடைவில் அதுவே BRIDEGROOM என்று ஆகிவிட்டது.**********
முற்காலத்தில் ஐரோப்பாவில் போரிலோ அல்லது தனிப்பட்ட முறையில் மன்னர்களுக்கு சிறப்பான சேவை செய்தவர்களுக்கு நிலம்,வீடு ஆகியவை கொடுக்கப்பட்டன.இப்படி பெறுபவர்களை HUSBAND என அழைத்தனர்.HUS என்றால் வீடு.BANDA என்றால் சொந்தக்காரர்.சமூகத்தில் அவர்களுக்கு தனி மதிப்பு இருந்ததால் அவர்களை மாப்பிள்ளை ஆக்கிக்கொள்ளப் போட்டி இருந்தது.இப்படி ஆரம்பித்து பின்னர் ஒரு பெண்ணைத் திருமணம் செய்தவன் வீடு இருந்தாலும் இல்லாவிட்டாலும் HUSBAND என்று அழைக்கப்பட்டான்.***********
.