Monday 1 July 2013

உங்களது புகைப்படங்களை PDF கோப்புகளாக மாற்றம் செய்வதற்கு!!!


சில நேரங்களில் நம்மிடம் உள்ள புகைப்படங்களை PDF கோப்புகளாக மாற்றும் தேவை ஏற்படலாம்.
அந்த சமயங்களில் நம்மிடம் உள்ள புகைப்படங்களை எளிதாக பிடிஎப் கோப்புகளாக மாற்றி மற்றவர்களுக்கு அனுப்பி வைக்கலாம்.

236 கே.பி அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளவும். இதனை நிறுவியதும் ஒரு விண்டோ ஓபன் ஆகும். 

இதில் உள்ள Add Files உங்கள் புகைப்படங்களை தேர்வு செய்யவும். அடுத்து மேலே உள்ள Unit Measure --ல் உங்கள் புகைப்படத்திற்கான அலகை தேர்வு செய்யவும்.இதனை நீங்கள் எங்கு சேமிக்க விரும்புகின்றீர்களோ அந்த இடத்தினை Output Path -ல் குறிப்பிடவும். 

புகைப்படங்கள் உங்களுக்கு தனிதனி பிடிஎப் கோப்புகளாக வேண்டுமா அல்லது ஓரே பிடிஎப் கோப்பாக வேண்டுமா என தேர்வு செய்யுங்கள். 

மார்ஜின் பார்டர் முதல்கொண்டு பேப்பர் அளவு வரை நாம் அமைத்துக்கொள்ளலாம். மேலும் பிடிஎப் கோப்பில் நமது புகைப்படம் நடுவில் வரவேண்டுமா அல்லது ஓரத்தில் வரவேண்டுமா என்பதனையும் தேர்வு செய்து இறுதியில் Save PDF கிளிக் செய்யவும். நொடியில் உங்கள் புகைப்படம் ரெடியாகி விடும்.

4shared.com /file/BVzEsQ_w/JPEGtoPDF.html