Wednesday, 24 September 2014

கடுக்காய் ( terminalia chebula )gallnut!!!

இளநரையை போக்கும் பிளாக் மேஜிக் கடுக்காய் ! ஹெல்த் ஸ்பெஷல்!!
அறுபது வயதில் `தாத்தா பாட்டி' ஆவது பெருமையான விஷயம். ஆனால், இருபது வயதிலேயே தலையில் இளநரை, பித்த நரை விழுந்து `தாத்தா-பாட்டி' என்று கிண்டலுக்கு ஆளாவது சங்கடமான மேட்டர்தான். இந்த `வெள்ளிக் கம்பிகளை கறுப்பாக மாற்றும் `பிளாக் மேஜிக்' கடுக்காய் வசம் இருக்கிறது....
100 கிராம் மருதாணி பவுடர்,
நெல்லி பவுடர் 10 கிராம்,
பிஞ்சு கடுக்காய் பவுடர் 20 கிராம்,
இவற்றுடன் 25 கிராம் டீ டிகாஷனை சேர்த்து 1 எலுமிச்சம்பழத்தை பிழிந்து முந்தின நாளே ஊற வையுங்கள். மறுநாள் தலையில் இதை `மாஸ்க்' ஆக போட்டு நன்றாக காய்ந்ததும் அலசிவிடுங்கள். வாரம் ஒரு முறை இந்த மாஸ்க்கை தவறாமல் போட்டுப் பாருங்கள்.
கொஞ்ச நாளிலேயே இருக்கிற நரைமுடிகள் பழுப்பு நிறத்துக்கு மாறி கண்சிமிட்டும். மேலும், நரை என்பதையே கிட்ட நிருக்காமல் துரத்திவிடும். இந்த பழுப்பு நிறம் மெள்ள மெள்ள கறுப்பாக மாறிவிடும். `பிளாக் மேஜிக்' மாஸ்க் போட நேரமே இல்லையா? கவலையே வேண்டாம்.
உங்களுக்காக ஒரு சுலப சிகிச்சை இதோ..........
பிஞ்சு கடுக்காய், நெல்லிக்காய், கருவேப்பிலை... மூன்றையும் சம அளவில் எடுத்து நன்றாக இடித்துக் கொள்ளவும். மூன்றும் மூழ்கும் அளவுக்கு நல்லெண்ணையை எடுத்து சூடு பண்ணி, அதில் மூன்றையும் ஊறவிடுங்கள்.
தலைக்கு குளிக்கும்போதெல்லாம் இந்த எண்ணையை சற்று சூடு பண்ணி, தலையில் நன்றாகத் தேய்த்து சீயக்காய் போட்டு குளிக்க வேண்டும். வாரம் ஒரு முறை இந்த `கடுக்காய் தைலக் குளியலை' கட்டாயம் செய்து பாருங்கள், இளநரை ஓடியே போவதுடன், முடியும் கறுமையாக மாறிவிடும்.
`கருகரு கூந்தல் இருந்தால் மட்டும் போதுமா விளம்பரப்படங்களில் வருவது போல அலைபாயும் நீண்ட கூந்தலுடன் நடை போட முடியலையே' என்று ஏங்குபவர்களா நீங்கள்? உங்களுக்கும் கை கொடுக்கிறது கடுக்காய்...
100 கிராம் பிஞ்சு கடுக்காய்,
100 கிராம் முத்தின கடுக்காய்...
இரண்டையும் வெயிலில் உலர்த்தி பொடி செய்து கொள்ளுங்கள். இதனுடன் 20 கிராம் சுருள்பட்டை, கட் பண்ண 100 கிராம் வெட்டிவேரையும், கால் கிலோ தேங்காய் எண்ணையுடன் சேர்த்து கலந்துவிடுங்கள்.
தினந்தோறும் கூந்தலுக்கு இந்தத் தைலத்தை தடவி வந்தால், `நீ நீ நீ........ நீளமாக' கூந்தல் வளர்வது நிச்சயம். கூந்தலில் மட்டுமல்ல, புருவம், கண் இமைகளிலும் இந்தத் தைலத்தை தடவலாம். கண் இமை, புருவ முடிகள் அடர்த்தியாக வளர்த் தொடங்கும்.
`வீஸிங்' தொல்லை இருப்பவர்களும், பயமேயின்றி இந்த தைலத்தை பயன்படுத்தலாம். கடுக்காய்க்கு நீரை உறிஞ்சும் தன்மை இருப்பதால் சளியோ, தலைவலியோ வரவே வராது.
ஓய்யார கொண்டையாம் தாழம்பூவாம்..... அதில் உள்ளே இருக்குமாம் ஈறும் பேனாம் போன்ற பாட்டுக்கெல்லாம் வேட்டு வைக்கிற ஷாக் டீரிட்மெண்ட் இது... சீயக்காய் 1 கிலோ, பிஞ்சு கடுக்காய் 100 கிராம், வெந்தயம் கால் கிலோ, பச்சை பயறு கால் கிலோ, உலர்ந்த செம்பருத்தி 100 கிராம்... இவற்றை மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்
இந்த `கடுக்காய் மிக்ஸர் தூளை' ஆயில் பாத் எடுக்கும் போதெல்லாம் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால், கொஞ்ச நாளிலேயே பொடுகு, அரிப்பு செதில், பேன் உட்பட சகலத் தொல்லைகளும் `போயே போச்சி'! தலைமுடி மின்ன, ஒரு எளிய சிசிக்சை......
முத்தின கடுக்காய் தோல் 5, பூந்திக்கொட்டை தோல் 5 இரண்டையும் தண்ணீரில் நன்றாக கொதிக்கவிடுங்கள். அந்த நீரை தலை அலசும் போது பயன்படுத்தினால் முடி `பளபள' வென மின்னும். புருவம், இமை பகுதிகளில், இந்த நீரை பஞ்சினால் தொட்டு தடவி வர, முடி உதிர்வது நின்று நன்றாக வளரத் தொடங்கும்.
கை வேலைப்பாடு மிகுந்த விதவிதமான ஆபரணங்களை போட்டு பார்ப்பது அழகு தான். ஆனால், காதுக்கு சேதாரமாகாமல் இருக்க வேண்டுமே அப்படி, காதில் ஏற்படும் புண்களை நொடியில் மறையச் செய்கிறது, இந்த கடுக்காய் ட்ரீட்மெண்ட். பிஞ்சு கடுக்காயை பொடி செய்தோ (அ) சந்தன மலையில் தண்ணீர் சேர்த்து கடுக்காயை இழைத்தோ புண் வந்த இடத்தில் பூசுங்கள். இரண்டே நாளில், இருந்த இடம் தெரியாமல் புண் மறைந்துவிடும்.

நன்றி :-http://pettagum.blogspot.sg/