Thursday 25 September 2014

கொத்தமல்லி தொகையல்!!!


கொத்தமல்லி தொகையல்.

தேவையான பொருட்கள். கொத்துமல்லி-------------------  5 சிறியகட்டு.
 உளுத்தம்பருப்பு----------------  250- கிராம்
மிளகாய்ப்பொடி----------------   100- கிராம்
 புளி--------------------------------   ஒரு சிறிய ஆரஞ்ச் அளவு.
பெருங்காயம்-------------------   சிறிதளவு
 எண்ணை------------------------   2 டேபிள் ஸ்பூன்
 உப்பு தேவையான அளவு.
                              

செய் முறை
 கொத்துமல்லியை மண்போக நன்கு கழுவி ஒரு பேப்பரில் பரவலாக
 போட்டு நன்உ உலரவிடவும். ஈரப்பதம் கொஞ்சம் கூட இருக்கக்கூடாது.
 மிகவும் பொடிசாக அரிந்து வைக்கவும்.
                                        
 கடாயில் எண்ணை ஊற்றி உளுத்தம்பருப்பை சிவக்கவருக்கவும்.
 நன்கு சிவந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு மிளகாபொடி பெருங்காயம்
 அத்துடன் சேர்த்து நன்கு கலக்கி ஆறவிடவும். நன்கு ஆறியதும் உப்பு
 புளி வறுத்துவைத்திருக்கும் பருப்பு +மிள்காபொடி கலவையை மிக்சியில்

 போட்டு ரவை பதத்தில் அரைக்கவும். அரைத்தபொடியை நறுக்கிவைத்தி
ருக்கும் கொத்துமல்லியுடன் கலந்து மறுபடியும் மிக்சியில் சுற்றி எடுக்கவும்
 எல்லாம் சேர்ந்து சுற்றியதும் ஒரு தாம்பாளத்தில் போட்டு ஆற விடவும்.
 சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பீங்கான் பரணியில் அல்லது கண்ணாடி
                                    
 பாட்டிலில் போட்டு காற்று புகாமல் மூடி வைக்கவும்.  ஈரப் பதமே இல்லாத
தால் 6 மாசம் வரையும் கெடாமல் இருக்கும். வெய்யில் காலத்தில் ஆவக்காய் வடுமாங்காய் ஊறுகாய் எல்லாம் போடுவதுபோல இந்த கொத்துமல்லி தொகையலும் வருடாந்திரத்துக்கு தயார் செய்து வைக்கலாம்.
மோர்சாதமுடன் தொட்டுக்கொள்ள மிகவும் நல்லா இருக்கும்.
 சூடு சூடு சாதத்தில் நல்லெண்ணை ஊற்றி இந்ததொகையில் போட்டு
 பிசைந்து சாப்பிடவும் ரொம்ப நல்லா இருக்கும்.
முன்னே எல்லாம் பரணியில் போட்டு நல்ல வெள்ளைத்துணியால் இறுக கட்டி வைத்து பாதுகாப்பாக வைப்போம். இப்ப ஃப்ரிட்ஜ் வசதிலாம் வந்தபிறகு ஜிப்லாக் பேகில் போட்டு ப்ரீசரில் வைக்கிரோம்.