தேவையானவை: புழுங்கலரிசி - 4 கப், உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன், வெண்ணெய், எள்ளு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத் தூள் - கால் டீஸ்பூன், உப்பு, எண் ணெய் - தேவையான அளவு.
செய்முறை: புழுங்கலரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து, நைஸாக கெட்டிப் பதத்தில் அரைத்துக் கொள்ளவும். உளுத்தம்பருப்பை பொன்னிறமாக வறுத்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். பிறகு, புழுங்கலரிசி மாவுடன் வறுத்து அரைத்த உளுத்த மாவு, எள்ளு, வெண்ணெய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். மாவு சிறிது நீர்த்து இருந்தால் வெள்ளைத் துணியில் போட்டு புரட்டி எடுத்தால் ஈரத்தை இழுத்து கெட்டியாகிவிடும்.
இந்த மாவில் சிறிது எடுத்து மெல்லிய முறுக்குகளாக சுற்றி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். முறுக்கு சுற்ற தெரியாதவர்கள் அச்சில் போட்டுப் பிழிந்து கொள்ளலாம்.
--------------------------------------------------------------------------------------------------
தேவையானவை: பதப்படுத்தப்பட்ட (அரிசியை தண்ணீர் விட்டு நன்றாக களைந்து நிழலில் உலர்த்தி அரைத்துக் கொள்ளவும்) அரிசி மாவு - ஒரு கப், சர்க்கரை - கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: சர்க்கரையில் தண்ணீர் விட்டு பாகு வைக்கவும். பதம் வந்ததும் (பாகில் சிறிது எடுத்து தட்டில் விட்டால் முத்துப்போல நிற்கும். இதுவே சரியான பதம்) அரிசி மாவை சிறிது சிறிதாகக் கொட்டி நன்றாகக் கிளறவும். கலவை சற்று தளர்ந்து இருந்தால் பரவாயில்லை. ஆறியதும் இறுகிவிடும்.
பிறகு அடுப்பை அணைத்துவிட்டு ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்துக் கிளறி இறக்கவும். இந்த மாவில் சிறிது எடுத்து பிளாஸ்டிக் ஷீட்டில் வைத்து சற்று தடிமனாகத் தட்டி எண்ணெயில் போடவும். பிறகு அதிரசம் அழுத்தும் அச்சினால் அமிழ்த்தி எண்ணெயை எடுத்துவிட்டு, ஒவ்வொன்றாக பாத்திரத்தில் அடுக்கவும்.
-----------------------------------------------------------------------------------------------------------
தேவையானவை: பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு - ஒரு கப், பொட்டுக்கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், வெண்ணெய், தேங்காய்துருவல், எள்ளு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: வெறும் கடாயில் அரிசி மாவை கை பொறுக்கும் சூட்டில் லேசாக வறுத்துக் கொள்ளவும். அதனுடன், பொட்டுக்கடலை மாவு, வெண்ணெய், தேங்காய் துருவல், எள்ளு, உப்பு, பெருங்காயத்தூள் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகப் பிசறி, சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து, சிறு சீடைகளாக உருட்டி வைக்கவும். ஈரம் காய்ந்ததும் எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
மாவை வறுப்பதால் சீடை வெடிக்காமல் இருக்கும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
தேவையானவை: பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு - ஒரு கப், பொட்டுக்கடலை மாவு - ஒரு டீஸ்பூன், வறுத்து அரைத்த உளுத்த மாவு, வெண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், பச்சைமிளகாய் - 5, நறுக்கிய கொத்தமல்லி - சிறிது, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: அரிசிமாவை கை பொறுக்கும் சூட்டில் லேசாக வறுக்கவும். பச்சைமிளகாய், கொத்தமல்லி, உப்பை விழுதாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் வறுத்த அரிசிமாவு, பொட்டுக்கடலை மாவு, உளுத்த மாவு, வெண்ணெய், பெருங்காயத்தூள் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து வெள்ளைத் துணியில் மெல்லியதாகத் தட்டி எண்ணெயில் போட்டு கரகரப்பாகப் பொரித்தெடுக்கவும்.
விருப்பப்பட்டால் வேர்க்கடலையை ஒன்றிரண்டாகப் பொடித்து மாவில் சேர்த்துக் கொள்ளலாம்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
தேவையானவை: துருவிய வெள்ளைப்பூசணி - 4 கப், சர்க்கரை - ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய் - கால் கப், முந்திரி துண்டுகள் - சிறிது.
செய்முறை: வெள்ளைப்பூசணி துருவலை ஒரு துணியில் நன்றாக மூட்டை கட்டி, நீரை கெட்டியாகப் பிழிந்து வடித்துக் கொள்ளவும். பிறகு கடாயில் நெய் விட்டு, பூசணி துருவலைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி சர்க்கரையை சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து சுருண்டு வரும் பக்குவத்தில் ஏலக்காய்த்தூள், முந்திரி துண்டுகளை சேர்த்து இறக்கவும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
தேவையானவை: பதப்படுத்தப்பட்ட அரிசிமாவு - 4 கப், வறுத்துப் பொடித்த உளுத்தமாவு - முக்கால் கப், வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், வெல்லம் - ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன். உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: அரிசிமாவுடன் உப்பு, வெண்ணெய் சேர்த்துப் பிசறி, தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். இந்த மாவை சிறிது எடுத்து தேன்குழல் அச்சில் போட்டு எண்ணெயில் முறுக்குகளாகப் பொரித்தெடுக்கவும். இதேபோல் எல்லாவற்றையும் செய்து கொள்ளவும்.
மற்றொரு கடாயில் வெல்லத்தைப் போட்டு ஒரு கரண்டி தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும். வெல்லம் கொதித்து கரைந்ததும் அதில் உள்ள மண்ணை வடிகட்டி மீண்டும் கடாயில் வைத்து கெட்டிப் பாகாகக் காய்ச்சவும் (ஒரு ஸ்பூனில் எடுத்து தண்ணீரில் போட்டு, அந்த முத்தை எடுத்துத் தட்டில் போட்டால் 'டங்' என்று சத்தம் கேட்கும். இதுவே சரியான பதம்). பிறகு அடுப்பை அணைத்து விட்டு, பொரித்த முறுக்குகளை போட்டு கலந்து வைக்கவும்.

சர்க்கரை அதிரசம்

பொட்டுக்கடலை சீடை

காரத்தட்டை

காசி அல்வா

மனோகரம்